முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கட்டிங் பிளேடு மூலம் விசாரணைக் கைதிகளின் பல்லை ஏ எஸ் பி பிடுங்கிய குற்றச்சாட்டின் பின்னணி

கட்டிங் பிளேடு மூலம்  விசாரணைக் கைதிகளின் பல்லை ஏ எஸ் பி  பிடுங்கிய குற்றச்சாட்டின் பின்னணி நிலவரம் 


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளை மாவட்டக் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, பற்களைப் பிடுங்கியதாக குற்றச்சாட்டையடுத்து, அது குறித்து விசாரிக்க சேரன்மாதேவி உதவி ஆட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக காவல் நிலையத்திற்கு வரும் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, அவர்களது பற்களைப் பிடுங்கியதாக விசாரணைக் கைதிகள் சிலர், காணொளிக் காட்சியை சமூக வளைதளங்களில்  வெளியிட்டு குற்றம் சாட்டினர்.

வெங்கடேசன் என்பவரைக் கொலை செய்ய முயன்றதாக மார்ச் மாதம் 23ஆம் தேதி சிலர் கல்லிடைக்குறிச்சி காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கு வந்த மாவட்டக் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் பல்வீந்தர் சிங் அவர்களைக் கொடூரமாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.


தாக்கப்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவில், காவல் நிலையத்திற்கு இவர்கள் அழைத்து வரப்பட்டபோது காவல்துறையினருக்கான சீருடையிலிருந்த பல்வீந்தர் சிங், பிறகு சாதாரண உடைக்கு மாறிக்கொண்டு இவர்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளனர்.

"ஏஎஸ்பி சார் கையில் கையுறை அணிந்து கொண்டு டிராக் பேண்ட் அணிந்துகொண்டு அங்கு வந்தார். எங்கள் வாய்க்குள் ஜல்லி கற்களைப் போட்டு கொடூரமாக அடித்தார். மேலும் கற்களை வைத்து பல்லை உடைத்தார்.


எனது அண்ணன் மாரியப்பனுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அவன் தற்போது படுத்த படுக்கையாக உணவு சாப்பிட முடியாமல் தவித்து வருகிறான். எங்களுக்கு நடந்ததைப் போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது," என்று அவர்கள் பேசியுள்ளனர்.அந்த காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் 

பல்வீந்தர் சிங்கால் பல் பிடுங்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள வேத நாராயணனிடம் தனியார் நிறுவனங்களின் செய்தியாளர்கள் பேசியபோது, "நான் அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரத்தில்  பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். எனக்கு இரண்டு மகன்களும் ஒரு மகள் உள்ளனர்.


எனக்கும் எனது மனைவிக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து கடந்த நான்காண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வருகிறேன். 27 ஆண்டுகளுக்கு முன் நான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். எனக்கு அந்தச் சான்றிதழ் தேவைப்பட்டதால் மார்ச் 20 ஆம் தேதி அதைக் கேட்டு என் மனைவி தங்கியிருக்கும் வீட்டிற்குச் சென்ற போது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் காவல்துறையினர் அங்கு வந்து என்னிடமிருந்து செல்போனைப் பிடுங்கிவிட்டு உடனடியாக காவல் நிலையத்திற்கு வருமாறு கூறிச் சென்றனர். மறுநாள் கோவில் திருவிழா என்பதால் மார்ச் 23 ஆம் தேதி காலை காவல் நிலையம் செல்வதற்குத் தயாரான போது, என்னைத் தேடி வந்த இரண்டு காவலர்கள் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தனர்.

காவல் நிலையத்தில் வெகு நேரமாக உட்கார்ந்திருந்தபோது அங்கிருந்த காவலர் ஒருவர் 'உனக்கு தனி ட்ரீட்மென்ட் இருக்கு, ஏஎஸ்பி வந்து கொடுப்பாரு' என்று கூறினார். இதனிடையே எனது கையில் கட்டியிருந்த  சாமிக் கயிறு மற்றும் இடுப்பிலிருந்த கயிற்றை காவலர்கள் அறுத்தெடுத்தனர்.

சிறிது நேரத்தில் ஏஎஸ்பி அங்கு வந்து என்னிடம் ஹிந்தியில் ஏதோ கேட்டார். எனக்கு விளங்கவில்லை. நான் உடனே ஆங்கிலத்தில் குடும்பத்தில் மனைவிக்கும் எனக்கும் பிரச்னை எனக் கூறினேன்.

காவல் நிலையத்தின் மேல்பகுதியில் இருந்த அறைக்கு என்னை ஏஎஸ்பி மற்றும் சில காவலர்கள் கூட்டிச் சென்றனர். அங்கு கட்டிங் பிளேடு ஒன்றை எடுத்து எனது வாயின் கீழ் தாடையில் உள்ள பல் ஒன்றைப் பிடுங்கினார். மேலும் எனது காதில் அந்த கட்டிங் பிளேயரை வைத்து அமுக்கியதில் எனக்குக் காயம் ஏற்பட்டது.

பின்னர் காவல் நியைத்திலிருந்து மாலை 5 மணிக்கு என்னை அனுப்பினார். நான் அன்றிலிருந்து இன்று வரை ஐந்து நாட்களாகச் சாப்பிட முடியவில்லை," என்று கூறியுள்ளார்  வேதநாராயணன்.

திருநெல்வேலி மாவட்டக் காவல்துறையில் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பல்பீர் சிங் பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சிறு குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுடைய பற்களைப் பிடுங்கி கொடூரமான தண்டனை வழங்கி வருவதாகப் பலரும்  கூறி வருகின்றனர்.

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்களின் பற்களைப் பிடுங்கியதாகச் சொல்லப்படும் நிலைஇல்

சில நாட்களுக்கு முன்பு ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யா அதே பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து பிரச்னை செய்தார் என்ற குற்றச்சாட்டில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு ஏஎஸ்பி பல்பீர் சிங் அவரது பற்களைப் பிடுங்கியது மட்டுமல்லாமல் விசாரணைக்காக வந்த அதே பகுதியைச் சேர்ந்த மேலும் மூன்று இளைஞர்களின் பற்களையும் உடைத்து, தற்போது அந்த மூன்று நபர்களும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சூர்யா  தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள வழக்கறிஞர் மகாராஜா  தெரிவித்ததாவது, "பொதுவாக எவ்வளவு பெரிய வழக்காக இருந்தாலும் விசாரணைக் கைதிகளை காவல் நிலையத்தில் வைத்தோ, சிறைச்சாலையில் வைத்தோ காவல்துறையினர் தாக்கக்கூடாது என்பது சட்டம். அந்த விதியை மீறி பல்வேறு வழக்குகளில் காவல்துறையினர் கைதிகளைக் கொடூரமாகத் தாக்குகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் நடத்தும் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது சிபிஐ இதை விசாரிக்கவேண்டும். புகார் தெரிவிக்கும் நபர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஏஎஸ்பி மற்றும் இதில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

இது சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், இச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், சேரன்மாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


குற்றம்சாட்டப்பட்டுள்ள பல்வீந்தர் சிங், தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஶ்ரீவைகுண்டம் பகுதியின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அம்பாசமுத்திரம் பொறுப்பு டிஎஸ்பியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். மனித உரிமை மீறலில் ஈடுபட்டு சடட விதி மீறிய காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மீது நீதிமன்றம் விசாரணை முடிவில் தண்டணை பெறவேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் உரிய இழப்பீடும்  நீதியும் ஆகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.