முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தர்பாரை மிஞ்சும் திரௌபதி

தர்பாரை விட "திரெளபதி"... சாதியக் காதலை சாடுவதற்கு கூடும் ஆதரவு... தளபதி,முத்து, அண்ணாமலை,பாட்ஷா,படையப்பா, சந்திரமுகின்னு ரஜினியை திரையில் பார்த்த. ரசிகர்களுக்குதர்பார்...தற்போதய மக்களின் பாஷையில் கூறுவதானால் செம மொக்கையா தோன்றும் மற்ற கதாநாயகர்களைக் கசக்கி பிழிந்து வேலையை வாங்கி மெகா ஹிட் கொடுத்த முருகதாஸ் தன் திறமையை எல்லாம் முட்டைகட்டி வச்சி..ரஜினி எனும்  மாஸை மட்டுமே  நம்பி மெதப்புல இருந்துவிட.பிறகு என்ன,?ஒன்னால நா கெட்டேன்...என்னால நீ கெட்ட கதைதான். பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட இயக்குநர் மோகனின் இரண்டாவது படம் திரெளபதி  சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் பரபரப்பைக் கிளப்பியது. ட்ரெய்லரில் இடம் பெற்ற வசனங்களும், காட்சிகளும் ஒரு தரப்பினரின் நாடகக் காதலைத் தோலுரிக்கும் விதமாக இருப்பதாக கூறப்பட்டது. சாதிகள் உள்ளதடி பாப்பா, அடித்தால் திருப்பி அடி ஆகிய வாசகங்கள் உடன் போஸ்டர் வெளியான போதே திரெளபதி பரபரப்பை கிளப்பப்போவது உறுதி என முடிவானது.  இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. நாடகக் காதலுக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் வெளிப்படையாக பயன்படுத்தப்பட்டுள்ளதால், பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் யூடியூப் டிரெண்டிங்கில் 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டி விட்டது.தமிழ் சினிமா வரலாற்றில், க்ரவுட் பண்டிங் முறையில் தயாராகியுள்ள இந்த படத்திற்கு கிடைத்துள்ள ஆதரவு பெரும்பாலானோரை வாய் பிளக்க வைத்துள்ளது. சாதிய காதலை சாடியதால் திரெளபதி படத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. அதே சமயத்தில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ரஜினி நடிப்பில்  வெளியாகி உள்ள தர்பார் படத்தின் ட்ரெய்லர் சாதனையை திரெளபதி படம் முறியடித்துள்ளது"தர்பார்" படத்தின் சும்மா கிழி வீடியோ பாடல் அளவிற்கு  லைக்குகளையும் குவித்து வருகிறது. சின்ன பட்ஜெட் படமான திரெளபதி படத்திற்கு கிடைத்துள்ள் வரவேற்பு ரஜினி ரசிகர்களை வாயடைக்கச் செய்துள்ளது.   ரஜினி தமிழன் என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்களுக்கு பொழுதுபோக்கைக் காட்டினாரே தவிர அவர் இந்த மக்களுக்கோ மண்ணிற்க்கோ எதுவும் செய்யவில்லை தமிழனின் வியர்வையின் பணத்தை கொள்ளையடித்தார் இது இன்று நடந்தது இல்லை, தமிழ் மக்களின் பெயரால் கொள்ளையடித்தவர்கள்ஏராளம்.ஆனால் மோகன் அவர்களோ ஒரு  தந்தை மகளை எப்படி வளர்க்க வேண்டும் அதுவும் 18வயதிற்கு கீழ் வரும் காதல் புரிதல் இல்லாமல்    வரும் என்றும்  இதனை பயன்படுத்தி காதலன் என்ற போர்வையில் இருக்கும் மிருகம் பணம் என்ற  நோக்கத்தோடு இருப்பார்கள் என்பதை நாடககாதல் பெண்களின் சாபக்கேடு என்பதை அவர் இயற்றும்  இரண்டாவது படத்தில்  சொல்லுவது என்பது அனைத்து சாதிக்கும் பெண் பிள்ளைகளை பெற்ற தகப்பனுக்குமான புரிதலை உணர்த்தும் படம் என்பதே நிதர்சனம். இது வியாபார நோக்கம் அல்ல,. ஆனால் ரஜினி படம் youtube இல் வெளியிட சொல்லுங்கள் அங்கே தமிழன் யார் என்பதும் மக்களுக்கு புரியும்.  பொழுதுபோக்காயினும் அதில் ஒரு கருத்து இருக்க வேண்டும் என்பதை மோகன்  கூறுவதை ஒப்பிடுவது என்பதே மிகப்பெரிய தவறு. வளர்ந்தவன் சொன்னால் நஞ்சும் அமிர்தமாகும், ஆனால்  வளரும் பிள்ளை சொன்னால் அமிர்தமும் நஞ்சாகும் அப்படித்தானே உங்கள் செய்தி. எங்கும் பணம் விளையாடும் என்பதை புரிந்து செயல்படுகிறீர்கள் இது உண்மையின்  இருட்டடிப்பே.  ஏ.ஆர்.முருகதாஸ் மீது கதைத் திருட்டுப்பட்டம் கட்ட முடியாது

தன் படத்தில் இடம்பெறும் வில்லன்களை துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்கி தனது பகையை சுலபமாகத் தீர்த்துக்கொள்ளும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு கதைத் திருடர் பட்டம் கட்டும் இணைய உலக வில்லன்களை வெற்றி கொள்ளமுடியாமல் இருந்த நிலையில் இப்படத்தில் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டு அவர்களை தர்மசங்கடத்தில் முழிக்க வைத்திருக்கிறார். படத்தில் கதை என்ற ஒன்று இருந்தால்தானே? அல்லது ஏற்கனவே பார்த்த பல போலீஸ் கதைகளின் கதையையே மீண்டும் எடுத்தால்? இதில் இரண்டாவது வகையறாவில் சேரும் இந்த தர்பார் படம்.

ஃப்ளாஷ்பேக் சம்பவம் ஒன்றில், ஒரு குற்றவாளியைப் பிடிக்க 20 போலீஸ் அடங்கிய குழு ஒன்று அவன் வீட்டுக்கே செல்கிறது. வீடு முழுவதும் தீ வைத்து எரித்துவிட்டு அவர்களிடமிருந்து தப்பிக்கிறான் குற்றவாளி. அந்தத் தீயில் சிக்கி 17 போலீஸ்காரர்கள் உயிரிழந்துவிடுகிறார்கள். இதனால், காவல்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடுகிறது. போலீஸின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியையும், நம்பிக்கையின்மையையும் பயன்படுத்தி போதை மருந்து விற்பனையும், பாலியல் தொழிலும் மும்பை நகரத்தை சீரழிக்கிறது. இந்த குற்றங்களை எல்லாம் ஒடுக்கி, மக்களுக்கு மீண்டும் போலீஸ் மீது நம்பிக்கையை உருவாக்குவதற்காக புதிதாக நியமிக்கப்படும் கமிஷனராக ரஜினி வருகிறார். 70 வயதிலும் 20 வயது இளைஞராக ரஜினி தோற்றமளிக்கிறார் என்று குறிப்பிட்டே ஆகவேண்டும் என்று உத்தரவு. தன் மகளான நிவேதா தாமஸுடன் மும்பையில் இவர் இறங்குவதற்கு முன்பே துணை முதலமைச்சரின் மகளை சிலர் கடத்திவிடுகின்றனர். இந்த விசாரணையில் இறங்கும் ரஜினி, துணை முதல்வர் மகளுக்கு போதைப் பழக்கம் இருப்பதைக் கண்டுபிடித்து அதன்பின் அவரையும் கண்டுபிடிக்கிறார். ஆனால், இந்தத் தகவலை வெளியில் சொல்லாமல், துணை முதல்வரின் மகளைத் தேடுகிறோம் என்ற போர்வையில் மும்பை மற்றும் அதனைச் சுற்றிய நகரங்களிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் தொழிலிலிருந்து மீட்டெடுக்கின்றனர். இந்த சோதனையின்போது, மும்பையின் பிசினஸ் மேக்னட் ஒருவரின் மகனும் சிக்குகிறார். 13 வயது சிறுமிகளையும் விட்டுவைக்காத அந்தக்  கொடூரனை சிறையில் அடைத்து தண்டனை வாங்கித்தருகிறார். சிறைக்குச் செல்லும் தொழிலதிபரின் மகனைக் காப்பாற்ற முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளும், அதைத் தொடர்ந்து ரஜினிக்கு ஏற்படும் பாதிப்புகளும் தான் தர்பார் திரைப்படத்தின் மீதிக்கதை.

ரஜினி நடிப்பில் குறை வைக்கவில்லையென்றாலும் இன்னும் எத்தனை காலத்துக்கு நான் இன்னும் சின்னப்பையன் தான் என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளப்போகிறாரோ என்று புரியவில்லை. அதிலும் ஒரு பொறுப்பான போலீஸ் அதிகாரியாக இருந்துகொண்டு தன் மகள் வயது நயன் தாராவுக்கு கதாநாயகன் என்பது தெல்லாம் சரியா என்பது உங்கள் பார்வைக்கே சென்சாரில் கத்தரி போட்டிருக்கவேண்டிய சமாச்சாரங்கள். ஆனால் எனக்கும் கொஞ்சம் மனசாட்சி இருக்கிறது என்று காட்டுவதற்காகவே ஸ்ரீமனை வைத்து ரஜினியிடம்,’உங்கமக இந்த மாதிரி வயசான ஒருத்தர லவ் பண்ணிட்டு உங்க முன்னால வந்து நின்னா உங்க மனசு என்ன பாடுபடும்’என்று ஒரு காட்சி வைத்திருப்பது மகிழ்ச்சி.நயன் சும்மா நாலைந்து காட்சிகளுக்கு தண்டத்துக்கு வந்துபோகிறார்.ரஜினியின் மகளாக நடித்திருக்கும் நிவேதா தாமஸ்தான் படத்தின் உண்மையான நாயகி.அப்பாவின் மேல் காட்டும் பரிவில் நெகிழ வைக்கிறார்.யோகிபாபு ஒரு சில இடங்களில் ரஜினியை ஓட்டிய வகையில் சரி.மற்றபடி அவை நகைச்சுவைக்காட்சிகள் என்று நம்பிய இயக்குநர் வட்டாரத்தின் சோகத்தை என்னவென்று சொல்வது?படத்தில். பல வில்லன்கள் இருந்தாலும் உண்மையான வில்லன் இசையமைப்பாளர் அனிருத்து தான். வாத்தியக்கருவிகளை இதற்குமேல் காதுகிழியக் கிழிக்க முடியாது.’நீங்க மட்டும் காதுல பஞ்சு வச்சுக்குவீங்களா பாஸ்?இது அரசியல் படம் அல்ல’என்று பேட்டிகள் கொடுத்திருக்கும் முருகதாஸ் படத்தில் இரு முறை திருமதி சசிகலாவை வம்பிழுத்திருக்கிறார்.விதவிதமான துப்பாக்கிகளால் மோதிக்கொள்ளும் ரஜினி அண்ட் வில்லன் பார்ட்டிகள் ஃகிளைமேக்ஸ் காட்சியில் மட்டும் ஒத்தைக்கு ஒத்தை வெறும் கையால் மோதிக்கொள்வது வெறி ஏற்றுக்கிறது. ரஜினி வெறியர்கள் ஒரு முறை பார்க்கலாம். மற்றவர்கள் டிக்கட்டோடு காதில் ஒரு முழம் பூ சுற்றிக்கொண்டு போவது நல்லது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...