நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து அதிமுக சார்பாக நாடாளுமன்ற எம்.பி.யாக 1989 ம் ஆண்டு கே.சி.பழனிசாமி தேர்வானார். காங்கேயம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். இதனால் இவர் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன.
கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் கட்சியின் சின்னமான இரட்டை இலையை பயன்படுத்துவதாகவும், லெட்டர் பேடு, இணையதளம் நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முட்டு கவுண்டன் புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் வி.பி. கந்தவேல் சூலூர்காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்
கோவையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக சூலூர் காவல் நிலையத்தில் புகார்
சூலூர் காவல் நிலையத்தில் IPC பிரிவுகள் 417,418,419,464,465,468,479, 481,482,485 மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் ஆகிய 11 பிரிவுகளில் பழனிசாமி மீது வழக்கு பதிவு
417 - ஏமாற்றுதல்
418 - நம்பியவர்களை ஏமாற்றுதல்
419 - ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்
464 - தவறான ஆவணத்தை உருவாக்குதல்
465 - பொய் ஆவணம் உருவாக்கி ஏமாற்றுதல்
468 - ஏமாற்ற திட்டமிட்டு ஆவணம் உருவாக்குதல்
479 - சொத்து குறீயட்டை தவறாக பயன்படுத்துதல்
481 - தவறான சொத்து குறியீட்டை பயன்படுத்துதல்
482 - சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்தியதற்கு தண்டணை
485 - சொத்து அடையாளத்தை உருவாக்கும் கருவியை வைத்திருந்தல்
மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு
இதைத் தொடர்ந்து கோவை லாலி ரோடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்த கே.சி.பழனிசாமியை காவல் துறையினர் கைது செய்தனர். வாசலில் நின்றிருந்த பத்திரிகையாளர்களிடம் அவர் பேச முற்படுகையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டு காவல்துறையின் வேனில் ஏற்றும்போது, அதிமுகவில் தன்னைச் சேர்த்துக்கொண்டதாக, தான் கூறி வருவதாக சொல்லி கைது செய்வதாக, அவர் தெரிவித்தார். அப்போது கே.சி.பழனிசாமியை மேலும் பேசவிடாததால், வேனில் ஏறுமாறு அவரைக் கூற இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்