சென்னையில் காணொலி காட்சி மூலம் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை. மருத்துவக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எனத் தகவல். சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அவசர பாஸ் இன்று முதல் வழங்கப்படும்-சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு. கடந்த 4 நாட்களாக முழு ஊரடங்கால் அவசர பாஸ் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டது. கொரானா இல்லாத மாவட்டமான நீலகிரியில் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் - மாவட்ட ஆட்சியர்.சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம்.
ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம். தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த தற்போது வாய்ப்பு இல்லை; படிப்படியாகதான் தளர்த்த முடியும்.
கொரானா தொற்று நீண்ட நாட்களாக நம்முடன் இருக்கும்
கடந்த வாரத்தில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு விகிதமும் அதிகரிப்பு.
முதலமைச்சர் எடப்பாடியுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர் குழு பேட்டி கொரானா ஊரடங்கில் நிலவும் அசாதாரண சூழலிலும், விளை பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் உழவன் செயலில் உள்ள இ-சேவை மூலம், விளை பொருட்களை விற்பனை செய்ய தமிழக விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தி யுள்ளது.ஒவ்வொரு மாவட்ட வியாபாரிகள், விவசாயிகளின் விளைபொருட்களை வாங்க செயலி மூலம் விருப்பம் தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உடனடியாக வியாபாரிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரம் விவசாயிகளுக்கு உழவன் செயலியின் வாயிலாக தெரிவிக்கப்படும் என்றும் இதன் மூலம் விவசாயிகள் பல்வேறு வியாபாரிகளை தொடர்பு கொண்டு தங்களது பயிர்களை விற்று வருவாய் ஈட்ட முடியும் என வேளாண்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.சென்னையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் 98 சதம் பேருக்கு கொரானா- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 768 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி யாகியுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்