வரலாறுகள் தெரிந்து கொள்ள பலர் ஆர்வமில்லாத நிலை காரணம் வரலாறுகள் மாற்றி தவறாகப் பதிவிடும் சிலர் சூழ்ச்சி.அதைக் கடந்து நாம் பதிவுகள் செய்வதே கடமை வியட்நாம் எனும் செய்கோன் தமிழர்கள் ஆதிக்கம் நிறைந்த ஆன்மீகம் வளர்ந்த பூமி தற்போது நிலை மாறியது ஒரு வரலாறு 1975 ஏப்ரல் ,30 ஆம் நாள்.வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது உலகில் நீண்ட நாட்கள் நடைபெற்ற போர்களில் வியட்நாம் போரும் ஒன்றாகும். இப்போர் 1955-ம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. கம்யூனிஸ்ட் நாடான வடக்கு வியட்நாமுக்கும் அமெரிக்கா ஆதரவு பெற்ற தெற்கு வியட்நாமுக்கும் இடையில் நடைபெற்ற இப்போரில் . வடக்கு வியட்நாமுக்கு எதிராக அமெரிக்க போர் படைகள் நேரிடையாகவே களம் இறங்கின.இது பொதுவுடமைக்கு எதிராக அமெரிக்காவின் போராக பார்க்கப்பட்டது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் நடந்த இப்போர் அமெரிக்காவின் போர் வரலாற்றில் கரும்புள்ளியாகப் பலரும் பார்க்கும் நிலை.பெரும் ஆயுதபலம் மற்றும் பணபலத்தைப் பிரயோகித்தாலும் இறுதியில் இப்போர் அமெரிக்கர்களுக்கு தோல்வியைக் கொண்டு வந்தது.1973-ல் அமெரிக்கா இப்போரில் இருந்து வெளியேறியது. இன்று வரை அமெரிக்கா போரில் தோற்று வெளியேறியது என்பது வியட்நாமில் மட்டுமே நடந்த ஒன்று. பல லட்சம் மக்களைப் பலி கொண்ட இப்போர் 1975-இல் ஏப்ரல் 30 ஆம் நாள் தெற்கு வியட்நாமின் தலைநகரான சைகோன் வடக்கு வியட்நாம் படையால் முற்றிலுமாக கைப்பற்றது. தெற்கு வியட்நாமிய படைகள் சரணடைந்தன அதன் பின் இரண்டு வியட்நாமுகளும் இணைக்கப்பட்டது வரலாறு .
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்