தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்தும் கட்டிட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்குக் கோரிக்கை கொரானோ பாதிப்பால் கட்டிட பொறியாளர்கள் மற்றும் கட்டுமானத்துறை அரசிடம் வைக்கும் கோரிக்கைகள்.
1. கட்டுமானம் நடைபெற்ற இடங்களில் இருப்பு வைத்திருக்கும் சிமெண்ட் கிட்டத்தட்ட வீணாகிவிடும். எனவே அதனை சிமெண்ட் தயாரிப்பு கம்பெனிகள் திரும்ப பெறவேண்டும். அல்லது மாற்று மூட்டைகள் மானிய விலையில் தர வேண்டும்.
2. கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளதால் பராமரிப்பு வேலைகள் செய்துதான் வேலைகள் மீண்டும் துவங்கப்பட வேண்டும்.
வேலை ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் இதனால் வேலையாட்கள் ஊதியம் உயர வாய்ப்புகள் இருப்பதால், அது கட்டுமான ஒப்பந்த தொகையில் 20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கப்படும். எனவே கட்டுமான பொருட்களின் விலையை எக்காரணம் கொண்டும் நிறுவனங்கள் உயர்த்தக் கூடாது எனவும் கட்டுமான வேலை கூலியை உயர்த்து கூடாது எனவும் அறிக்கை வெளியிட வேண்டும்.
3) கட்டிட கட்டுமான துறையை மாநில அரசின் அத்தியாவசிய பட்டியலில் இணைத்து வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் பொறியாளர்கள் மற்றும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நல்வழி செய்திட வேண்டும். அதன் மூலம் தேவையில்லாத சமூகப் பிரச்சனைகளை தவிர்க்கவும் வேண்டுகிறேன்.
4) இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டிட அனுமதி பெற்ற கட்டிட கட்டுமான பணிகளின் கட்டிட கட்டுமான உரிமை கால அவகாசத்தை 6 அல்லது 12 மாதங்களுக்கு நீடித்து செய்யவேண்டியுள்ளது.
5)இந்த கொரானா சூழ்நிலையால் கட்டிட அனுமதிக்காக தேங்கிநிற்கும் மற்றும் விதிமுறைகளின்படி சரியாக இருக்கும் கட்டிட கட்டுமான வரை படங்களுக்கு விரைவாக அனுமதி தந்து வேலைவாய்ப்புகளை பெருக்கிட வேண்டுகிறோம்.
6) குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்ப காலத்தில் அங்கே பொறியாளர்கள் சபை Engineering council அமைக்கப்பட்டு பல்வேறு புணரமைப்பு பணிகள் செய்யப்பட்டன. தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில் கட்டுமானத் துறையை காப்பாற்ற தமிழ்நாடு பொறியாளர்கள் சபை TamilNadu Civil Engineers Council உருவாக்க வேண்டியும் அதன் மூலம் எண்ணற்ற பொறியாளர்கள் மற்றும் அத்துறையை சார்ந்த அத்தனை தொழிலாளர்களுக்கும் ஒரு நிரந்திர பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுகிறோம்.
7. கட்டுமான துறையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பெரும் பங்கு வகிப்பதால் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டிட அனுமதி முறைகளை மாற்றியமைத்து, அனுமதி பெறுவது வேகமாகவும் அதே சமயம் எளிய முறையிலும் ஒற்றை சாளர முறையிலும் இருக்க ஆவணம் செய்ய வேண்டும்.
8. கட்டுமான பொருட்களுக்கு GST வரியை குறைக்க அல்லது ஒரே வரியை (5%) ஒப்புதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தற்போது நடைமுறையில் இருக்கும் (GST) சரக்கு மற்றும் சேவை வரி 18% சதவீதத்தில் இருந்து 9% சதவீதமாக குறைக்க வேண்டும். அதாவது 50 சதவீதம் குறைக்க வேண்டும்.
மேலும் வரி கட்ட மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
காலதாமதமாக கட்டும்பொழுது அபராதம் வசூலிக்கக் கூடாது எனவும் கோரிக்கை வைக்கப்படுகிறது.
9. பொறியாளர்களுக்கு கட்டுமான முதலீடு செய்ய தேவையான வங்கி கடன் வசதி எளிய முறையில் செய்து தர வேண்டும். OD & CC எனப்படும்
மிகைப்பற்று மற்றும் பணக்கடன் மீதான வட்டி விகிதத்தை 6 சதவீதமாக குறைக்க வேண்டும் அல்லது
வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும். கட்டுமான பொறியியல் தொழில் செய்பவர்களுக்கு பொதுத்துறை, தனியார் வங்கி, நிதி நிறுவனங்கள் வங்கி மூலம் வட்டி இல்லாத கடன் 5 முதல் 15 லட்சம் வரை நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் திருப்பி செலுத்தும் வகையில் வழங்கவேண்டும்.
10. SSI & MSME எனப்படும் சிறு குறுந்தொழில் நிறுவனங்களில் தற்போது கட்டுமான ஒப்பந்ததாரர் பதிவு முறை இல்லாமல் உள்ளது எனவே உடனடியாக பதிவு செய்யும் முறையை கொண்டு உணர்ந்து கொண்டு வந்து கட்டுமான ஒப்பந்ததாரர்கள் இருக்கும் மத்திய அரசின் தொழில் வளர்ச்சிக்கான கடனுதவி ஆவணம் செய்ய வேண்டும்.
11. அனைத்து கட்டுமான தொழிலாளர்க்கு இலவச இன்சுரன்ஸ் வசதி செய்து தரப்பட வேண்டும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் ஒற்றை சாளர முறையில் நிகழ் நிலை பதிவு முறை செய்ய தளம் அமைக்கப்பட வேண்டும். (single window online registration).
12. அரசிடமிருந்து வேலை வாய்ப்பை அதிகரிக்க வழிவகை செய்யவேண்டும். பொதுத்துறை பணிகளை தரத்துடன் செய்ய எங்கள் அமைப்பின் பொறியாளர்கள் தயாராக உள்ளனர். எனவே அரசு சார்ந்த கட்டுமான வேலைகளில் 40% Tender எங்களது மாநில கட்டிட பொறியாளர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு வழங்க பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.
13. ஊரடங்கு துவங்கிய சமயத்தில் திடீரென்று நிறுத்தப்பட்ட கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கபடும்போது
வெளியூர் சென்றிருக்கும் ஆட்களை
வரவழைப்பது மற்றும் கட்டுமானத்திற்கு
தேவையான அனைத்து பொருட்களையும்
வாங்குதல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய
வேண்டியுள்ளது. எனவே மே 3 க்கு பிறகு
தரப்படும் அனுமதி இவற்றை எல்லாம் செய்ய ஏதுவாக முழுமையானதாக
இருக்கவேண்டும்.
14) நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் கட்டுமானத் துறைக்கு, கட்டுமானப் பொறியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைக்க அனுமதி வழங்கி அரசு, பொறியாளர் நலன் காக்க வேண்டும். தமிழக அரசில் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் போல கட்டுமானத் துறைக்கு என்று தனியாக கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்க அரசு வழிவகை செய்யவேண்டும்.
15) நலிந்த பொறியாளர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மூலம் அடையாளம் காணப்பட்டு அரசு அவர்களுக்கு பேரிடர் கால திட்டத்தின் கீழ் குடும்ப நல நிதி வழங்கி வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.
மேற்கொண்ட காரணங்களால் கட்டுமான சமுதாயமே தனது வாழ்வை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டுமானர் பாதிக்கப்பட்டால் அவரை சார்ந்து வாழும் 50-100 குடும்பங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே மேற்கூறிய அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக செய்து தர வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கோரிக்கைகளிலும் கட்டுமான பொறியாளர்கள் நேரடியாக பாதிக்க படக்கூடிய காரணிகள், இவற்றையும் தாண்டி மறைமுக காரணிகளும் பல உள்ளன அவையும் கட்டுமானர்களை
அதிகமாகவே பாதிக்கும். எனவே தாங்கள் அமைக்கும் கொரானோ நிவாரன கமிட்டியில் எங்களது கூட்டமைப்பைச் சார்ந்த பொறியாளர்கள் பங்குபெற ஆவணம் செய்யவேண்டும். இது சம்பந்தமாக ஏதாவது அரசிற்கு உதவிகள் தேவைப்படின் எங்களது கட்டுமான பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பினை எப்பொழுதும் அழைக்கலாம். நாங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட எந்நேரமும் தயாராக உள்ளோம்.என கட்டிட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளார்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்