முகக்கவசம் என் 95 - எதைக் குறிக்கிறது.வாசனைத் தடுப்பானாக உருவாக்கப்பட்ட முகக் கவசங்கள் பல மாற்றங்களைச் சந்தித்து, விஞ்ஞான வளர்ச்சியடைந்த இந்த நூற்றாண்டில் மனிதர்களைக் காத்து நிற்கும் மகத்தான மருத்துவக் கண்டுபிடிப்பாக உள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவாகி, இன்று உலகெங்கும் பரவிக்கிடக்கிறது கொரோனா வைரஸ். உலக நாடுகளில் வாழும் மக்கள் அனைவரும் கொரோனா வைரஸிடமிருந்து காத்துக்கொள்ள வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும்போது முகக் கவசத்தை அணிந்தே வெளியில் செல்கின்றனர்.கொரோனா பாதிப்பிற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிந்தே செயல்படுகின்றனர். எனவே, கொரானா வைரஸின் மூலம் பரவும் தொற்றுநோயான கோவிட்19-ன் அடையாளமாக இந்த முகக் கவசங்கள்தான் இருக்கின்றன எனச் சொன்னால் அது மிகையாகாது.
கொரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்ள, N95 முகக் கவசங்களைப் பயன்படுத்தச் சொன்ன அமெரிக்காவின் CDC சில நாள்களுக்கு முன், அதைப் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. காரணம், N95 முகக் கவசங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அந்த வகை முகக் கவசங்களை மருத்துவப் பணியாளர்களுக்கு விட்டுத் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளது சிடிசி. ``நீங்கள் இப்போது N95 ரக முகக் கவசங்களைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் தயவுசெய்து அருகிலுள்ள மருத்துவமனையில் அதை ஒப்படைத்துவிடுங்கள்" என்று அமெரிக்கர்களிடம் சிடிசி கேட்டுக்கொண்டுள்ளது.
மெலிதான பாலிமர் கொண்டு செய்யப்பட்ட இந்த N95 ரக முகக் கவசங்கள் கொடிய வைரஸான கொரோனாவை எதிர்த்து நிற்க உதவுமா... என்ற கேள்வி பலரிடமும் இருக்கலாம். கொரோனா தொற்று கண்கள் வழியாகவும் பரவ வாய்ப்பிருக்கிறது என்பதால் முகக் கசவங்கள் அணிவது மூலம் முழுமையாக கொரோனாவிடமிருந்து தப்ப முடியாதுதான்.
உலகம் முழுவதும் இந்த மெல்லிய முகக் கவசத்திற்குத்தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வகை முகக்கவசத்தைத்தான் உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு விட்டுக்கொடுக்கச் சொல்கிறது சிடிசி. எனவே, கொரோனா தொற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும் முக்கியக் கருவிகளில் முதன்மையானது இந்த முகக்கவசங்கள்தான் என்பதை மறுத்துவிட முடியாது!
1972-ல் N95 முகக் கவசங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இது தொழிற்சாலைகளில்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1990-களில் காசநோய் ஏற்படுவது அதிகரித்தது. காசநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் காற்றின் மூலமாகக் காசநோய் பரவியது. இந்தத் தொற்றைத் தடுப்பதற்காக N95 முகக் கவசங்களில் சில மருத்துவ மாற்றங்களைச் செய்தது 3M நிறுவனம். இதன் மூலம் தூசி துகள்கள் மட்டுமல்ல கிருமிகளையும் வடிகட்டும் வல்லமை பெற்றது N95 முகக் கவசம். அதன் பின், மருத்துவர்கள் காசநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது இந்த N95 முகக் கவசங்களை அணிந்து கொண்டனர்.
N95 என்பது காற்றிலிருக்கும் 95 சதவிகித தூசிகளையும் கிருமிகளையும் இது வடிகட்டிவிடும் என்பதைக் குறிக்கிறது. 'N' என்பது Not resistant to oil என்பதைக் குறிக்கிறது. அதாவது, இது எண்ணெய்யைத் தாக்குப் பிடிக்கும் வகையில் செய்யப்படவில்லை என்பதை 'N' என்ற எழுத்து குறிக்கிறது.
5 மாதங்களுக்கும் முன்பு வரை இந்த N95 முகக் கவசங்கள் சிறிய அளவில்தான் பயன்பாட்டில் இருந்தன. ஆனால், கொரோனா தொற்றின் காரணமாகத் தற்போது இந்த வகை முகக் கவசங்களை அதிகம் காணமுடிகிறது.
N95 முகக் கவசங்களின் மீது சில குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஸ்பானிஷ் ஃப்ளூவில் தொடங்கி சார்ஸ், கொரோனா வரை மனிதர்களைக் காப்பாற்றுவதில் முதன்மை ஆயுதமாக இவைதான் இருந்தன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.. !மேலும் முகத்தில் அணியும் முகக்கவசம் சரியாக அணிவது
கொரோனா முன்னெச்சரிக்கையாக முகக் கவசம் அணிபவர்கள் அதை சரியான முறையில் அணிய வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.முகக் கவசத்தின் மேற்பகுதி மூக்கை முழுமையாக மறைக்கும் விதமாக உயர்த்தி அணிய வேண்டும். முகக் கவசத்தின் கீழ்ப்பகுதி முழுமையாக இறக்கி தாடையை முற்றிலும் மறைக்கும் விதத்தில் இருக்க வேண்டும். எப்போதும் முகத்தை ஒட்டி இறுக்கமாக அணிய வேண்டும். இடைவெளியுடன் அணியக் கூடாது.
முகக் கவசம் அணிந்துகொள்வதற்கு முன்பாகவும் அணிந்துகொண்ட பிறகும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். முகக் கவசத்தைப் பொருத்திக் கொள்வதற்காக உள்ள எலாஸ்டிக் அல்லது கயிற்றின் நுனி பாகத்தை மட்டுமே தொட்டு அதனை அணியவும் அகற்றவும் வேண்டும். முகக் கவசத்தை அகற்றும்போது அதன் நடுப்பகுதியை தொடக் கூடாது. துணியால் செய்யப்பட்ட முகக்கவசம் பயன்படுத்தினால், அதனை தினமும் சுத்தம் செய்து, வெயிலில் உலர்த்த வேண்டும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்