சென்னையில் கொரானா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார், ஸ்டான்லி மருத்துவமனைகளின் சிறப்பு வார்டுகள் நிரம்பியுள்ளது. தனியார் கல்லூரிகளில் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளவை தவிர மணப்பாக்கம் வர்த்தக மையத்திலும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளநிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக பள்ளிகள், திருமண மண்டபங்களை பயன்படுத்த நடவடிக்கை என ஆணையர் பிரகாஷ் அளித்த பேட்டியில்
“சென்னையில் தளர்வு செய்யப்பட்டதில் ஒரு பகுதியாக தனித்தனிக் கடைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் சலூன் கடைகள் இல்லை. அனுமதிக்கப்பட்ட தனித்தனிக்கடைகள் என்றால் அனுமதிக்கப்பட்ட கடைகள் என்று அர்த்தம் அது குறித்த தெளிவான வழிகாட்டுதல் தனியாக வெளியிடுவோம். மாநகராட்சியின் நோக்கம் ஐம்பதாயிரம் படுக்கைகள் உருவாக்க பகுதிகளை அணுகவுள்ளோம். இதுவரை 4000 படுக்கை பகுதிகள் தயாராக உள்ளது. மாநகராட்சி பள்ளிகள், அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என தெரிவித்துள்ளோம்.
மொத்தம் ஐம்பதாயிரத்தில் முதல் 25 ஆயிரம் படுக்கைகளுக்கு அரசின் உயர் கல்வி நிறுவனங்கள், அடுத்து 25 ஆயிரம் அரசுப்பள்ளிகளும்,தனியார் பள்ளிகளும் தொடர்ச்சியாகச் செல்வோம். சென்னையிலுள்ள கல்யாண மண்டபங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சென்னையில் 747 கல்யாண மண்டபங்கள் உள்ளது. அவை அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். தேசிய பேரிடர் சட்டத்தின்கீழ் அதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது.
அதை அவர்களுக்கு தெரிவித்து விட்டோம், ஏனென்றால் இது தேசிய அவசர நிலை காலம். கல்யாண மண்டபம் கிடைத்தும் முதல்வேலையாக அங்கு படுக்கைகள் சேமிக்கத் தொடங்கி விடுவோம், 50 ஆயிரம் படுக்கைகள் ஒரு மாதத்துக்குள் போட்டுவிடுவோம். இப்போதைக்கு 4000 உள்ளது. அடுத்த வாரம் 10 ஆயிரம், ஒரு மாதத்துக்குள் 50 ஆயிரம் படுக்கைகள் தயாராகிவிடும்.
எங்கள் பணி படுக்கை வசதிகள் தயார் செய்து கொடுத்துவிடுவோம், கழிப்பறை, தங்குமிடம், உணவு இதை தயார் செய்வது எங்கள் வேலை. பின்னர் பொது சுகாதாரத்துறை அவர்களது வேலையைச் செய்வார்கள்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்