பாஜக அமைச்சர் தேர்தல் வெற்றி செல்லாதென குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவு.
குஜராத் அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாதென குஜராத உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு. வாக்கு எண்ணிக்கையில் அமைச்சர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக 429 தபால் வாக்குப் பெட்டி சட்டவிரோதமாக ரத்து செய்யப்பட்டதாக காங்கிரஸ் தலைவரும், சூடாசாமாவின் போட்டி வேட்பாளருமான அஸ்வின் ரத்தோட் முன்வைத்த வாதங்களில் உண்மையிருப்பதாக ஏற்றுக் கொண்ட குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி பரேஷ் உபாத்யாய் சூடாசாமாவின் வெற்றியை ரத்து செய்து உத்தரவு காங்கிரஸ் வேட்பாளர் தனது மனுவில், சூடாசாமா தேர்தல் ஆணையத் தின் விதிகளை மீறி, குறிப்பாக வாக்குகளை எண்ணும் நேரத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட தாக குற்றம் சாட்டியிருந்தார்.
அஹமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோல்காவில் நடந்த தேர்தலில் சூடாசாமா வெறும் 327 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூடாசாமா தேர்தலில் வெற்றிபெற உதவும் வகையில் வாக்களிப்பு செயல்முறையை ரிட்டர்னிங் அதிகாரியும், தோல்காவின் துணை ஆட்சியர் தவல் ஜானியும் உதவியதாக ரத்தோட் குற்றம் சாட்டியிருந்தார்.
வாக்களிக்கும் விதிகளை மீறியதற்காக ஜானி குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்தது. வாக்கு எண்ணும் மையத்தின் முழுமையான வீடியோ காட்சிகளை யும் சிசிடிவி கேமராக்களையும் சமர்ப்பிக்க தவறியதற்காக நீதிமன்றம் விமர்சித்தது.
விஜய் ரூபானி அரசாங்கத்தில் கல்வி, சட்டம் மற்றும் நீதி, சட்டமன்ற விவகாரங்கள் மற்றும் பல துறைகளின் பொறுப்பை சூடாசாமா வகித்தார்.
இந்தியாவில் பதவியில் உள்ள அமைச்சரின் தேர்தலை ரத்து செய்வது இந்திய ஜனநாயகத்தில் ஒரு அரிய நிகழ்வாகவே பார்க்கும் நிலை குஜராத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பாஜக அமைச்சர் உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்வதற்கும் வாய்ப்புள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்