முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தியாகிகளும்,மாவீரர்களுமான மருதுசகோதர்களுடன் ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஆங்கிலேயர்களால் தூக்கிலப்பட்ட நாள்


மக்களின் மனங்களில் இன்றும் வாழும் வரலாற்று முடிசூடா மன்னர்கள் மருதுமன்னர்கள் வெள்ளையர்களால் இன்று தூக்கிலிடப்பட்டது. சாதி இன மதங்கள் கடந்து அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துகுமரி முதல் மராட்டியம் வரை உள்ள தென்னகத்து சமஸ்தானங்களின் ஒட்டுமொத்தக் கூட்டணியோடு இந்திய விடுதலைக்கு அடித்தளமிட்ட மாவீரர்கள் மருதுபாண்டியர்களைப் பற்றி பல தகவல் உண்டு அவர்கள் ஆன்மீக அறநெறி காத்த செம்மல்கள்.மாவீரம் பொருந்திய முடிசூடா மன்னர்கள் இருபதாண்டு காலம் தென்னகத்து ஜான்சிரானி இராணி வேலுநாச்சியார் ஆதரவு தளவாய் பிராதாணியாக இருந்து ஆட்சி செய்த மருது பாண்டியர்கள் ஒரு வரலாற்று நாயகர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான. விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் ஆங்கிலேயரை விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடியவர்கள் அனைத்திந்தியக் குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போது தான் ஆங்கிலேயரின் கோபத்திற்காளானார்கள் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால்1801 அக்டோபர் 24 ல் மதியம் சங்கரபதிக் கோட்டையில் பிடிபட்டு சின்னமருதுவும் மாலை ஒ.சிறுவயல் பகுதியில் பிடிபட்டு திருப்பத்தூரில் இன்று காவல்நிலையம் அமைந்துள்ள இடத்தில் இருந்த வாதமரத்தில் இருவரும் ஒருவர்பின் ஒருவராக தூக்கிலிடப்பட்டதுடன் அவர்கள் சார்ந்த ஐநூறுக்கும் மேற்பட்டவர்களும் ஒரேநேரத்தில் தூக்கிட்ட பரங்கியர் செயல் ஜாலியன்வாலாபாக் மிஞ்சிய நிகழ்வாகவே பார்க்கலாம். பழைய இராமநாதபுரம் ஜில்லா தற்போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் நரிக்குடி பக்கத்தில் முக்குளம்  கிராமத்தில் மொக்கப் பழநியப்பனுக்கும், ஆனந்தாயிக்கு பெரியமருது என்ற வெள்ளை மருதும் 1748 திசம்பர் 15 இல் மகனாகப் பிறந்தவர் பெரிய மருது பாண்டியர். பொன்னாத்தாளுக்கு சின்னமருதும்ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753 இல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். ஒரு தந்தை இரு வேறு தாயின் மகன்களாகப் பிறந்தார்கள் பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவை விட உயரத்திற் சிறியவராக இருந்ததால் இளைய மருது இவ்விருவரும் சிவகங்கைச் சமஸ்தான மன்னர் முத்து வடுகநாதரின் போர்ப்படையில் தஞ்சை அரசர் பரிந்துறையில் வீரர்களாகச் சேர்ந்து திறமையால் மன்னர்  முக்கிய பொறுப்புக்களில் நியமித்தார். ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப் படை ஜியார்ஜ்பியர் 1772 இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பின் உடனடியாகச் சிவகங்கை மீது போர் தொடுத்த போது இத் திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் அவரது இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் பலியானதால் அவரது முதல் மனைவி பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி நாச்சியார் அரளிக்கோட்டை என்ற முல்லையூர் அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை பிரதானியாக மருது சகோதரர்கள் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி படைஎடுப்பில் ஒருபிரிவு தலைமை ஏற்று மற்றொரு பிரிவு நல்லு அம்பலம் தலைமை ஏற்ற போர் 1772 க்குப் பின் காட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிர் கிளர்ச்சியை 1779 ல் தொடங்கி ஆற்காட்டு நவாப், தொண்டைமான், கும்பினியார் ஆகியோரின் படைகளை வெற்றி கொண்டு 1780 இல் சிவகங்கைச் சமஸ்தானத்தை மீட்ட வரலாறு உண்டு. வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்த இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் சத்துருசம்ஹாரக் கோட்டை வாயிலிலும் முகாமிட்டுப் போரிடவே மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூற வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததாகவும் அவரை ஒப்படைக்கக் கூறி 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். அடைக்கலமாய் வந்தவர்களை ஒப்படைக்க மறுத்து அதனால் இப் போர் 150 நாட்கள் வரை இடைவிடாமல் நடந்தது. காளையார்கோவில் காடுகளில் கொரில்லா முறையில் தாக்குதல் போர் நடந்தது. புதுக்கோட்டைத் தொண்டைமான், ஆங்கிலேயருக்கு படை அனுப்பி நமது மக்களை அழிக்க உதவி செய்தார் மருது சகோதரர்கள் மற்றும் பிற விடுதலை வீரர்களைப் பிடித்துக் கொடுப்போர்க்கு சன்மானம் அறிவிக்கப்பட்டது. காளையார்கோவில் காட்டினை அழிப்பவர்க்கு, அழிக்கப்படும் நிலம் 20 வருடத்திற்கு மேல்வாரம் குடிவாரம் இல்லாத குத்தகையாக வழங்கப்படுமென ஆங்கிலேயர் அறிவித்தனர். ஒக்கூர் காட்டில் பதுங்கியிருந்தபோது, தன் உதவியாளன் கருத்தானால் சின்ன மருதுபாண்டியர் சுடப்பட்டதால் கருத்தானுக்கு ஆங்கிலேயர் காணி வெகுமதி அளித்தனர். களோனல் அக்னியூ மருது சகோதரர்களைக் கைதுசெய்யும் முன் ஒரு பிரகடனம் செய்தார் அதில் மருதுசகோதர்கள் சரணடையவில்லை எனில் காளையார் கோவில் கோபுரம் இடிக்கப்படுமென்ற காரணமாக தானே சரணடைந்து பெரிய மருது . பின் ஆங்கிலேயர் கௌரிவல்லப பெரியஉடையனத் தேவரை சிவகங்கையின் இஸ்திமிராசாக ஜமீனாக நியமித்தார். சிவகங்கையின் சுதேசி மன்னராட்சி முடிவுக்கு வந்தது. சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையனத் தேவர் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். பாகனேரி பகுதி அம்பலம் வாளுக்கு வேலி மருது சகோதரர்களை மீட்கச் செய்த முயற்சிகளும் தோல்வியடைந்தன. மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 24-10-1801 அன்று தூக்கிலிடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். அவர்களுடன் ஆண் வாரிசுகள் அனைவரும் ( "துரைச்சாமி" சின்ன மருதுவின் மகன் ஒருவரைத் தவிர ) மற்றவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 500க்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள் முறையான விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் விருப்பப்படி அவர்களது உடல் காளையார் கோவிலில் காளீசுவரர் சன்னதியைப் பார்க்க புதைக்கப்பட தனது கடைசி மரண வாக்குமூலம் வாயிலாக கூற அதன்படி மூன்றுநாள் கழித்து 27 .10.1801 அன்று நடந்தது. வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் எனும் இன்றைய மலேசியாவில் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டனர் பெரியமருதுக்கு ஐந்து மனைவிகளும் சின்னமருதுக்கு மூன்று மனைவியும் இருந்தும் வாரிசு ஒரே துரைசாமி மட்டுமே அவரும் இளம் வயதில் நாடு கடத்திவிட இவர்கள் தியாகம் பெரியது அதை அரசின் சார்பில் மரியாதை செய்தனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...