2021 வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது.
உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். மாநிலம்சட்டமன்ற தொகுதி, தெரு, வீட்டு முகவரியுடன் https://www.elections.tn.gov.in/rollpdf/SSR2020_16112020.aspx 2021 ஜனவரி மாதம் 15 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு முன்னதாக, 2020 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளக் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நவம்பர் 21.11.2020 ,22.11.2020 , 28.11.2020 ,29.11.2020 மற்றும் டிசம்பர் மாதம் 5.12.2020 ,6.12.2020 ,12.12.2020 ,13.12.2020 ஆகிய தேதிகளில் ஏற்கனவே நடைபெற்றது இந்த பட்டியலில் பெயர் சேர்க்க, 2021, ஜனவரி மாதம் 1ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தியடையும் அனைவரும் விண்ணப்பித்த நிலையில் இறுதி செய்யப்பட்ட பட்டியல் வெளியாகும்
கருத்துகள்