முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான் 


திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு



1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது.





இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது.





இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அடியில் ஓலை வேயப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கூடாரத்தில் முன்னிரவு 11 30 மணிக்கு மின்கசிவாலோ அல்லது வேறு வகையிலோ திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென ஓலைக் கூரையில் பரவியது இதில் கால்கள் கட்டப்பட்டு பரிதவிப்புடன் யானை முயற்சி செய்து முன் கால் கட்டிய சங்கிலி அறுத்த நிலையில் ஒருவர் தகவல் தர ஊர் கூடிய நிலையில் பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.


இதில் யானை சுப்புலட்சுமிக்கு பலத்த காயம் 80 சதவீதம் ஏற்பட்டது. கோவிலில் இரவுக் காவல் பணி செய்த நபர் என்னவானார் என்பது எழுவினா ?

வனத்துறை, கால்நடை பராமரிப்புத் துறையினர் கால்நடை மருத்துவர்கள் மூலம் யானைக்கு சிகிச்சை அளித்ததனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு ஐராவதம் ஆனது மருத்துவம் செய்ய வந்த மருத்துவர்கள் பகல் நேரத்தில் அருகில் இருந்த பிறகு இரவு நேரத்தில் பிள்ளையார்பட்டி ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யானை ஐராவதம் ஆனது. யானை உடலுக்கு 47 வது  மடாதிபதி பொன்னம்பல அடிகளார் மற்றும் மதுரை ஆதீனம், யானை தானமாக 1971 ஆம் ஆண்டு வழங்கிய ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் மகன்கள் இராமச்சந்திரன் மற்றும் ஆனந்த நடராஜன், மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி மற்றும் திருப்புத்தூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி மற்றும் காங்கிரஸ் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குன்றக்குடி குமார், அதிமுகவின் சார்பில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன், 


கண்டரமானிக்கம் நாட்டார்கள் நகரத்தார்கள், பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சித்தர் வழிபாட்டு நல்லடக்கம் நிகழ்வு போல ஐராவதம் நடந்தது. கோவில் யானை இழப்பு பக்தர்களிடையே பேரிழப்பானது பலத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.                    'மரத்தை மறைத்தது மாமத யானை' என்னும் திருமந்திரப் பாடலில் மரத்தையும் யானையையும் ஒப்பிட்டு

மரம், யானை பற்றிய கதை ஒன்று நம் பார்வைக்கு வருகிறது 


“ஒரு கோவிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன். அதைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக இன்னொரு தச்சன் போனான். அவனோடு அவனுடைய குழந்தையும் போயிற்று. மர யானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது. மர யானையைப் பரீட்சிப்பதற்காக அதன் அப்பாவன தச்சன் நெருங்கியபோது குழந்தை, “அப்பா! யானை கிட்டப் போகாதே அது முட்டும்” என்று கத்தியது. தச்சன் குழந்தையிடம், “இது மரப் பொம்மைதான்; முட்டாது” என்று சொல்லிச் சமாதானம் செய்து குழந்தையையும் யானைக்குப் பக்கத்தில் அழைத்துப் போனான்.

குழந்தைக்கு அந்த வாகனம் அசல் யானையாகவே இருந்தது. அதுமரம் என்கிற ஞானத்தைக் குழந்தையிடமிருந்து மறைத்தது. அது யானையாக்கும் என்கிற நினைப்பு, அதே சமயத்தில், அது தத்ரூபம் யானை மாதிரி இருந்தும் கூடத் தச்சன் பயப்படாததற்குக் காரணம், அதன் யானைத் தன்மை அவனைப் பொறுத்தமட்டில் மறைந்து அது மரம்தான் என்கிற அறிவு இருந்ததேயாகும்.

மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை

என்று இந்த இருவர் நிலையையும் திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார்.  அதுபோல   சங்க இலக்கியத்தில் யானையை, 170 க்கும் மேற்பட்ட பெயர்களில் காணலாம். அவைகளில் சில;

யானை, வேழம், களிறு, பிளிறு, கலபம், மாதங்கம், கைமா, உம்பல் - வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா,  அல்லியன், அனுபமை, ஆம்பல், ஆனை, இபம், இரதி,  குஞ்சரம் / இராசகுஞ்சரம்,  இருள், தும்பு, வல் விலங்கு, கரி, அஞ்சனம்,நாகம் (கதநாகம்), உலகில் பல்லாயிரக்கணக்கான யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள், மற்றொன்று ஆப்பிரிக்க யானைகள்.யானைகள், இயற்கையின் தலைச்சிறந்த படைப்பு. பிறருக்கு தீங்கு நினைக்காத ஒரே உயிரினம்’- என 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலக் கவிஞர் கருத்து.

"மேலே இருக்கும் வரிகளைப் படித்தால், சிலர் யோசிக்கலாம், யானைகள் மனிதர்களைத் தாக்குவதை, விரட்டுவதை, பார்த்திருக்கிறோமே என்று. ஆனால் என் பல வருட அனுபவத்தில் சொல்கிறேன், மனிதர்கள் மீதான முந்தைய அனுபவமே யானைகளின் நடவடிக்கையைத் தீர்மானிப்பவை” என்கிறார் எழுத்தாளர், வனவிலங்கு ஆவணப்பட இயக்குநர் மற்றும் உயிரியலாளர் சங்கீதா ஐயர்.

ஆசிய யானைகளைப் பாதுகாக்கும் நோக்கில் 2016 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘Voices for Asian Elephants ' என்ற அமைப்பின் நிறுவனரான சங்கீதா, பல வருடங்களாக யானைகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.யானைகள் தொடர்பான ஆய்வில் அவை பாசாங்கோ, மிமிக்ரியோ செய்யாமல், தனித்துவமான ஒரு பிளிறலை வெளிப்படுத்தி அழைக்கின்றன . ஒவ்வொரு யானைக்கும் குறிப்பிட்ட ஒலிகளைப் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, தமக்காக எழுப்பப்படும் ஒலிகளை அடையாளம் கண்டு எதிர்வினையாற்றுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.


இதை உறுதிப்படுத்த, பார்டோவும் அவரது குழுவினரும், பதிவு செய்யப்பட்ட பிளிறல்களை, 17 யானைகள் முன்பு ஒலிக்கச் செய்தனர்.





அப்போது யானைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தையும் கண்காணித்தனர்.தமது 'பெயர்' ஒலிக்கும்போது அந்த யானை சத்தம் வரும் திசையை நோக்கி உற்சாகமாக ஓடிச் சென்றுள்ளது. அந்தக் குறிப்பிட்ட யானை மட்டும் அந்தப் பிளிறல் ஒலியை உன்னிப்பாகக் கவனித்தது, ஆனால் பிற யானைகள் அது தனக்கானதல்ல என உணர்ந்து புறக்கணித்து விட்டன என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.ஒரு இடத்தில் மனிதர்கள் இருந்தால், முன்னால் செல்லும் யானை அதைக் குறித்து தகவல் தெரிவித்து விடும்.





யானைகள் முடிந்த வரை மனிதர்களைத் தவிர்க்கவே முயற்சி செய்யும்” எனக் கூறுகிறார் லக்ஷ்மிநாராயணன்.                   யானை ஒரு நாளைக்கு 250 கிலோ வரை உணவு எடுத்துக்கொள்ளும். 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். ஒரு நாளில் இவ்வளவு உணவையும், நீரையும் ஒரே இடத்தில் பெற முடியாது, அவை 40 முதல் 50 கி.மீ வரை பயணிக்கும். ஒரு யானைக் கூட்டத்தை பெண் யானை தான் வழிநடத்தும்” என்கிறார் பி.ராமகிருஷ்ணன்.



தமிழ்நாடு வனத்துறை அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின் மூலம் தமிழ்நாட்டின் 20 வனக் கோட்டங்களில் மொத்தம் 2,961 யானைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதில் முதுமலை புலிகள் காப்பகத்தின் உதகமண்டலம் மற்றும் மசினகுடி வனக் கோட்டங்களில் 790 யானைகள் (26.7 சதவீதம்), சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் ஹாசனூர் மற்றும் சத்தியமங்கலம் வனக் கோட்டங்களில் 668 யானைகள் (22.6 சதவீதம்), ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் வனக் கோட்டங்களில் 337 யானைகள் (11.4 சதவீதம்),




தமிழ்நாட்டின் மீதமுள்ள வனக் கோட்டங்களில் 1,166 (39.3 சதவீதம்) யானைகள் உள்ளன.2010 ஆம் ஆண்டில் மத்திய அரசு, யானையை 'தேசிய பாரம்பரிய விலங்காக' அறிவித்த பிறகு தான் யானைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எனவேதான் கடந்த சில வருடங்களாக யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யானைகளைப் பாதுகாப்பதும் இயற்கையைப் பாதுகாப்பதும் வேறில்லை என்பதை நாம் மறக்கக்கூடாது” என்றார்.'

மத வழிபாடு சார்ந்தோ, தனி நபர் பயன்பாட்டிற்காகவோ யானைகளை வாங்கக் கூடாதென சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை இனி கண்டிப்புடன் அமல்படுத்த  தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோவில்களுக்கும், இனி யானைகளை வாங்ககூடாது என்பது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் செயலாளர், அறநிலையத்துறை செயலாளர் இணைந்து விவாதித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவேண்டும்.



தற்போது கோவில்கள் மற்றும் தனியார்கள் வைத்திருக்கும் யானைகளை தமிழ்நாடு அரசு யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் செயலர்கள், அறநிலையத்துறை செயலாளருடன் இணைந்து செயல்படலாம். இனி யானைகளை வாங்க கூடாது என்பது குறித்து அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை செயலர் உத்தரவிட வேண்டும்” என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.



யானைகளின் உடல் மற்றும் மன நலனை காக்கும் வகையில் நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாக கோவில்களில் யானைகளை வழிபாடு மற்றும் திருவிழா காலங்களில் பயன்படுத்தி வருகின்றனர். அனைத்துத் திருவிழாக்களிலும் யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.





இத்தகைய சூழலில், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் இந்த உத்தரவிற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  1960 ஆம் ஆண்டு வரை உள்ள காலங்களில் கோவில்களில் வளர்க்கப்பட்ட யானைகளின் பராமரிப்பு நன்றாகவே இருந்தது. யானைகளை வளர்க்கும் முறைகள் நன்றாக இருந்தது. அப்போது யானைகளுக்கு உணவளிப்பதற்காகவே தனியாக புற்கள் வளர்க்கப்பட்டது.




ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் சோற்றுக் கவலம் உருண்டைகளைத் தான் கொடுக்கிறார்கள். கோவில்களில் யானைகளை இனி வாங்கக்கூடாது என்பது குறித்த நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் வேதனை அளிக்கிறது என்கிறார் அகில பாரத ஹிந்து மக்கள் அமைப்பின் மாநிலத் தலைவர் சிவக்குமார்.தமிழ்நாட்டில் யானைகளை வாங்க, வளர்க்க தற்போது அனுமதியில்லை.




ஏற்கனவே வளர்ப்பவர்கள் தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் மேலாண்மை, பராமரிப்பு சட்டம் 2011 குறிப்பிடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். ஆனால் யானைகளை வாங்கி கோவில்களுக்கு தானமாகக் கொடுக்க சட்டத்தில் இடமுண்டு ஆனால் அதற்கு ஒன்பது கோடி வரை செலவாகும்,


யானை வளர்க்குமிடம் போதுமான உயரம், அகலம், தளம் மண் தரையாகவே இருக்க வேண்டும். யானையின் கழுத்து, வயிறு, கால்களில் நைலான் கயிறு, கூர்மையான சங்கிலிகளைப் பிணைக்கவே கூடாது.





யானையின் எடை, மற்றும் உடல்நிலைக்கு ஏற்ப சங்கிலி பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் வயிற்றை கீழே அமுக்கி யானை உட்காரக் கூடாது. தமிழ்நாடு தலைமை வனவிலங்குக் காப்பாளர் அனுமதியின்றி வேறு மாநிலம் கொண்டு செல்ல அனுமதியில்லை.



தினமும் 3 மணி நேரத்திற்கு மேல், காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடக்க விடக் கூடாது. இரவு நடக்கும் போது யானையின் முன், பின் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். மாவுத்தன், பாகன், காவடி என அழைக்கப்படும் பராமரிப்பாளர் மூன்று ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது உட்பட பல கட்டுப்பாடுகளை வனவிலங்கு சட்டம் சொல்கிறது. போதிய உணவு கொடுக்காதது, ஊர்வலம் அழைத்து செல்வது, அதிக நேரம் வெயிலில் நிற்கவைப்பது, துணி போர்த்துவது போன்றவற்றால் யானை கோபமடையும்.

ஆனால், சட்டம் சொல்லும் கட்டுப்பாடுகளை தனியார், கோவில் யானை வளர்ப்போர் முறையாக பின்பற்றுவதில்லை. எனவே, வளர்ப்பு யானைகள் காப்பதில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்து புராணங்களில் தெய்வீக யானையான ஐராவதம் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது, ஒவ்வொன்றும் அதன் சொந்த முக்கியத்துவத்தையும் பொருளையும் கொண்டுள்ளன. ஐராவதத்தின் சில வெவ்வேறு பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:






அபிராமதங்கா: மேகத்தை உருவாக்குபவர், நாகமல்லா: போரில் பங்கேற்பவர், அர்கசோதரா: சூரியனின் சகோதரன், எரவான்: (தாய்லாந்தின் குறிப்பிட்டது) ஸ்வேதஸ்தி: வெள்ளை ஒரு கஜ்ரகிராணி: யானை ராஜாபகவத் கீதையில் ( அத்தியாயம்:10, வசனம்:27) கிருஷ்ணர் தன்னை உச்சைஷ்ரவன் என்றும், ஏழு தலைகளைக் கொண்ட தெய்வீக குதிரை என்றும், ஐராவதம், வான யானை என்றும் வர்ணித்தார்.








உச்சைஹ்ஷ்ரவஸம் அஸ்வனம் வித்தி மாம் அமிர்தோத்பவம். ஐராவதம் கஜேந்திரம் நரணம் ச நராதிபம்.                                            நேற்று மட்டும் இரண்டு பெண் யானைகள் மறைந்தது ..


பழனி வன்னி விநாயகர் கோவில் யானை சரஸ்வதி, 

குன்றக்குடி கோவிலில் தீ விபத்து காரணமாக சுப்புலட்சுமி யானை ஆகிய இரண்டு கோவில் யானைகள் நேற்று ஒரே நாளில் மரணித்தது மக்களின் வருத்தம் பல ஆனால் வருந்த வேண்டிய சிலர் வருந்தவில்லை,     என்பது தான் 


இதில் பொது நீதி யாதெனில்:-பாசமிகு வேழமிது, பாதகம் செய்தவர் யாரோ?, பாதுகாக்க மறந்தவர்கள் யாரோ?....ஈவு இரக்கமற்ற கொலை ...! என்றே நாம் உள்ளிட்ட பக்தர்கள் பொது மக்கள் உணரும் நிலை#elephant 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு