தேசவிரோத சக்திகளை எதிர்கொள்வதில் ஊடகம் முக்கிய பங்கு வகிக்கிறது: மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கருத்து

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தேசவிரோத சக்திகளை எதிர்கொள்வதில் ஊடகம் முக்கிய பங்கு வகிக்கிறது: மத்திய அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் கருத்து “நாட்டுக்கு எதிரான சக்திகளை எதிர்கொள்வதில் ஊடகத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. தேச விரோத சக்திகளினால் நாட்டிற்கு எதிராக ஊடகம் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்வது ஊடகம் உள்ளிட்ட நமது அனைவரின் பொறுப்பு” என்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் தெரிவித்துள்ளார்.

இந்திய வெகுஜன தொடர்பு நிறுவனமான ஐஐஎம்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

செல்போன் உள்ளிட்ட நவீன சாதனங்கள் அனைவரிடமும் புழங்கும் தற்போதைய காலகட்டத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் அதிக அளவில் பரவி வருவதால், ஊடகம் குறித்த புரிதலை சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும்  ஏற்படுத்துவது அவசியமாகிறது என்று அவர் கூறினார்.

ஊடகம் குறித்த புரிதலை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் உலகளவில் இன்று நிகழ்ந்து வரும் உளவியல் போரையும் நாம் எதிர்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.  இந்த உளவியல் போரை தேசவிரோத சக்திகள் பயன்படுத்தாமல் இருக்கும் வகையில் நாம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், மாறாக ஊடகத்தைப் பயன்படுத்தி நாட்டையும், நாட்டு மக்களையும் மேம்படுத்துவதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ஐஐஎம்சி  தலைமை இயக்குநர் பேராசிரியர் சஞ்சய் த்விவேதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா