தொலைக்காட்சி நடிகை சித்ரா தற்கொலை பின்னணியில் தீவிர விசாரணை


சென்னை திருவான்மியூர் காமராஜ் மகள் நடிகை சித்ரா (வயது 29).  விஜய் டி.வி-யில் ஒளிப்பரப்பாகும் `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்திலுள்ள இவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.  பெங்களூரு பைபாஸ் சாலையிலுள்ள ஹோட்டலில் அறை எண் 113-ல் தங்கியிருந்தவர். அதிகாலையில்  தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல்  கட்டுப்பாட்டு அறைக்கு ஹோட்டலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக நசரத்பேட்டை காவல் ஆய்வாளர்  விஜயராகவன் உள்ளிட்ட காவல்துறையினர்   சென்று நடிகை சித்ராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம் என போலீஸார் விசாரித்து வருகின்றனர். நசரத்பேட்டை போலீஸார் கூறுகையில், ``நடிகை சித்ரா, 9 ஆம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் படப்பிடிப்பு  முடிந்து ஹோட்டல் அறைக்கு வந்தபோது நிச்சயம் செய்த கணவரும், தொழிலதிபருமான ஹேமந்த் ரவியுடன் அந்த அறையில் தங்கியிருந்திருக்கிறார். குளிக்கச் செல்கிறேன், அதனால் ஹேமந்த் ரவிவை வெளியில் செல்லும்படி நடிகை சித்ரா கூறிவிட்டு அறைக் கதவைப் பூட்டியிருக்கிறார். அதனால் ஹேமந்த் ரவி, வெளியில் காத்திருந்தாராம் .இந்தச் சமயத்தில் நீண்டநேரமாகியும் சித்ரா கதவைத் திறக்கவில்லை. என்பதனால் சந்தேகமடைந்த ஹேமந்த் ரவி, ஹோட்டல் ஊழியர் கணேஷ் என்பவரிடம் தகவல் தெரிவித்து. மாற்றுச் சாவி மூலம் அறைக் கதவைத் திறந்து பார்த்தபோது நடிகை சித்ரா மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து ஹேமந்த் ரவி அதிர்ச்சியானதாகவும் தகவல்  பிறகுதான் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நடிகை சித்ராவுக்கும் ஹேமந்த் ரவிக்கும் சில மாதங்களுக்கு முன்னர்தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.அது பதிவும் செய்யப்பட்டதாம் .திருமணம் மட்டுமே  இருவருக்கும் விரைவில் அறிவிக்கும் நிலை . இந்தச் சமயத்தில்தான் நடிகை சித்ரா தற்கொலை செய்திருக்கிறார். படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நடிகை சித்ரா எதற்காகத் தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரித்துவருகிறோம். ஹேமந்த் ரவியிடம் விசாரணை நடந்துவருகிறது. புடவையால் நடிகை சித்ரா தூக்குப் போட்டதால் அவரின் கழுத்தில் காயங்கள் இருக்கின்றன. அதேநேரத்தில் அவரின் முகத்திலும் காயங்கள் இருக்கின்றன. அது, நகக்கீறல் போல இருப்பதாகப் காவல்துறை தகவல் 

காரணம் என்ன என்று விசாரணை நடந்து வருகிறது. நடிகை சித்ரா தங்கியிருந்த அறை முழுவதும் சோதனை நடத்தியிருக்கிறோம். அவரின் செல்போனை ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகுதான் அவரின் இறப்பு குறித்த தகவல் தெரியவரும்" என்றனர்.

நடிகை சித்ராவின் வருங்கால கணவர் ஹேமந்த் ரவியிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் சில தகவல்களைக் கூறியிருக்கிறார். அதில் சில தினங்களாக நடிகை சித்ரா மன அழுத்ததில் இருந்ததாகக் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

நடிகை சித்ரா குறித்து அவருக்கு நெருங்கிய சின்னத்திரை நடிகைகள் சிலர் .``நடிகை சித்ரா, 2013 ஆம் ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமனார். பிறகு சில தனியார் டிவி-க்களில் வீடியோ ஜாக்கியாகப் பணியாற்றினார். வி.ஜே சித்து என்ற பெயரில் அறிமுகமானார். அதன் பிறகுதான் `சரவணன் மீனாட்சி’ என்ற தொடரில் நடித்தார். பிறகு `பாண்டியன் ஸ்டோர்ஸி’ல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். கலகலப்பாகப் பேசக்கூடியவர். கொரோனா காரணமாக திருமணம் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. திருமணக் கோலத்தில் அவரைப் பார்க்க காத்திருந்த நேரத்தில் எங்களுக்கு அவரின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர்.

சென்னையைச் சேர்ந்த   தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகத் தொடங்கி 2013 ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் 'சட்டம் சொல்வது என்ன'  நிகழ்ச்சியே இவர் தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி இதையடுத்துத் தொகுத்து வழங்கிய 'நொடிக்கு நொடி அதிரடி', 'ஊர் சுத்தலாம் வாங்க' நிகழ்ச்சிகளுக்கு நல்ல  வரவேற்பு கிடைத்தைத்தொடர்ந்து, சன் டிவியில் வெளியான 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளர் எனப் பன்முகத்தோடு வேந்தர் டிவி, ஜீ தமிழ், ஸ்டார் விஜய் ஆகிய சேனல்களில் முன்னணியில்  இயங்கி வந்தார். 2018 ஆம் ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலிருந்து வந்த அழைப்பு அவரது சின்னத்திரை வாழ்க்கையில் திருப்புமுனை. சித்ரா என்ற பெயர் மக்களின் மனதில்  முல்லையாக நின்றதும் 

தொழிலதிபருடன் அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவரது முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் உடலைக் கைப்பற்றிய காவல்துறை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, தற்கொலைக்கான காரணம் தெரியும்.

நிச்சயதார்த்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்திருந்தார். அவரின் சமூக வலைதள பக்கத்தில் தன்னைத் தொகுப்பாளர், டான்ஸர், நடிகை என நடிகை சித்ரா குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சமயத்தில் நடிகை சித்ராவின் மரணம் குறித்து அவரின் வருங்கால கணவர் ஹேமந்த் ரவி, ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. விசாரணைக்குப் பிறகே நடிகை சித்ராவின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ந்துவரும் நடிகை சித்ராவின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா