உரிப்பவனுக்கு மட்டுமல்ல உழைப்பவனுக்கும் கண்ணீர் வரும் வெங்காயம்


 வெங்காயம்

நறுக்க

கண்ணீர் வரவைத்த நிலை மாறி 

விலையைக் கேட்டாலே

கண்ணீர்  வருகிறது! தற்போது 

புது மாப்பிள்ளை

சீதனமாய் கேட்கிறான்

ஒரு மூட்டை

மணப்பெண் தந்தையிடம் 


"வெங்காயம்"

எனத் திட்டாதீர்கள்

அதன் மதிப்பு உயர்ந்துவிட்டது!

உணவகங்களில் உண்பவர்கள்

உணவினில்

தேடிக் கொண்டிருக்கிறார்கள்

காணவில்லை.

வெங்காயம்

ஏழையின் இல்லத்தில்

இருக்கப் பிடிக்கவில்லையாம்

அதனால் விவசாயிகள் பயிரிடப் பயப்படும் நிலை....

வெங்காயம் கிலோ 100 ரூபாய் விலை கொடுத்து வாங்கும் அனைவரும் அறிய சில தகவல் நமது நண்பர் கூறியது.

எத்தனை பேர் வந்தாலும் நபர் ஒருவருக்கு ஒரு ஏக்கர் நிலம் தரப்படும். அதில் நீங்கள் வெங்காயம் சாகுபடி செய்து பாருங்கள் வேதனை உங்களுக்குப் புரியும் விவசாயிகள் உற்பத்தி  செய்யும் பொருட்கள் அனைத்தும் இடைதரகர்கள் சொல்லுவது தான் விலை. கிலோ 100 ரூபாய் க்கு விற்கும் வெங்காயம்  அப்படியே விவசாயிகள்  கையில் கிடைக்கும் என நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை?  தோட்டத்தில் ஒரு கிலோ  50 ரூபாய் க்கு தான் விற்பனை  இதுவும் அனைத்து நேரத்திலும் இல்லை ஒரு சில நாட்களில் தான் 

மீதி நாட்கள்  நிலை மோசம்.

இந்த நிலையில்  இரண்டு தினம் முன் ஒரு தொலைக்காட்சி விவாதம் அதில்  வெங்காயம் கிலோ 100 ரூபாய் க்கு விற்றால் தான் உழவனின் கஸ்டம் என்னவென்று தெரியும் என்று, உழவன் கொஞ்சம் மகிழ்ச்சி அடையட்டும் என்று சொன்னார்கள்,

ஆனால்  பேசியவர்கள் விவசாயம் அறியாதவர்கள் அந்தப் பணம் அப்படியே விவசாயிகள்  சட்டைப் பையில் வந்து சேருமென்று நினைத்து விடாதீர்கள்,  அது தான் இல்லை?

ஒரு ஏக்கர் நிலத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்ய ஆகும் செலவாக

உழவிற்கு ரூ 10000, குப்பை க்கு ரூ10000, அடியுரம்  ரூ 5000, விதை வெங்காயம் இன்றைய விலை ஒரு கிலோ ரூ 110 .இதற்கு  ரூ 660000.நடவு கூலி 25 நபர் 25×300= ரூ 7500 களைக்கெல்லி ரூ 3000, இடையில் களை எடுக்க 20 நபர். 

இதற்கு 20×300= ரூ 6000, உரம் செலவு ரூ 10000, கடைசி அறுவடைச் செலவு வெங்காயம் பிடுங்க  20 நபர் இதற்கு 20×300= ரூ6000, வெங்காயத்தில் இருந்து தால் எடுப்பதற்கு 25 நபர்கள் தேவை 40 kg க்கு ரூ 150. வீதம் இதற்கு 40×200= ரூ 8000, வெங்காயத்தை பற்றையில் கொண்டு சேர்க்கும் நபர் ஆண்கள் ஆறு நபர் 600×6= ரூ 3600.

இவற்றுடன் வேலை முடியாது இரவு ஒரு மணி அளவில் மழை வரும் உடனே ஓட வேண்டும். அங்கு சென்று தார் பாய் போட்டு முட வேண்டும். அடுத்த நாள் வியாபாரிகள் வந்து உங்கள் வெங்காயம் கலர் இல்லை, உருட்டு இல்லை, பெரிய அளவில் இல்லை ஈரப்பதம் என்று சொல்லி குறைந்த  விலைக்குக் கேட்க ,

அதற்கும் சரி என விற்பனை செய்து விட்டு, அடுத்த நாள் லாரி வருகிறது என்று வியாபாரி போன் செய்வார், நங்கள் எடை நிலையம் சென்று  லாரி எம்டி எடையை போட்டு விட்டு வருவோம்.

வெங்காயம் மூட்டை பிடிக்க வந்த ஆட்கள் எங்களுக்கு தேனீர் வடை, போண்டா வேண்டும் என்று சொல்லி விடுவார்கள் .20 நபர்கள் இதற்கு 400, செலவு இதைத் தொடர்ந்து  மீண்டும் லாரி லோடு ஏற்றிய உடன் மீண்டும் எடை நிலையம் சென்று பார்த்து விட்டு எடை சிட்டு வாங்கி கொண்டு அடுத்த நாள் வியாபாரி யிடம் பணத்தை வாங்கச் சென்றால், 

ஒரு டன் எடைக்கு 30 கிலோ வை பிடித்துக்கொண்டு,  உதாரணமாக 8000 கிலோ என்று வைத்தது கொண்டல்= 8000 டன் கணக்கில் 8×30= 240 கிலோ  வை அப்படியே அட்டையை போட்டு விட்டு 7760 × 20 =ரூ155200 லட்சம் ரூபாய் இந்த பணத்தை கொடுக்க இரண்டு மாதங்கள் தவணை,  

அதற்கு மேல் இவை அனைத்தும் இந்த விலைக்கு விற்பனை நடந்தால் மட்டுமே இவ்வளவு கிடைக்கும். இதில் அவர்கள்  உழைப்பு, தண்ணீர் நிலம் குத்தகை   இதில் சேர்க்க வில்லை,

மொத்தச் செலவு ரூ 135500   இதில் மிச்சம் ரூ 19.700 மட்டுமே,  இதில்  உழைப்பு 60 நாட்கள் ஒரு ஆண் ஒரு பெண்  கூலி 60×500=30000, 300×60= 18000 இரண்டும் சேர்த்து 48'000, மிச்சமாகும் பணம் 19 "700 மட்டுமே, இதில் அவர்கள் கூலி  யே 28300 ரூபாய், உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது இது பழமொழி..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா