மார்கழித் திங்களில் திருப்பள்ளி எழுட்சி

"பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்,

புன்மை யிருட்கணம் போயின யாவும்,

எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி

எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,

தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்

தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்

விழிதுயில் கின்றனை இன்னும்எம்  தாயே

வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே

புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம்,

பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்

வெள்ளிய சங்கம் முழங்கின, கோளாய்!

வீதியெ  லாம்அணு   குற்றனர் மாதர்!

தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்

சீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றனர்,

அள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை!

ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!

பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்,

பார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம்,

கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே

கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்

சுருதிகள் பயந்தனை! சாத்திரம் கோடி

சொல்லரு மாண்பின  ஈன்றனை, அம்மே!

நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!

நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே!

நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்

நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?

பொன்னனை யாய்! வெண் பணிமுடி யிமயப்

பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!

என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்

ஏங்குவம் நின்னருட்கு ஏழையம்  யாமே?

இன்னமும் துயிலுதி யேல் இது நன்றோ?

இன்னுயிரே? பள்ளி யெழுந்தரு ளாயே!

மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?

மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?

குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?

கோமகளே! பெரும் பாரதர்க் கரசே!

விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி

வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்

இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்! "ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே....!...தமிழை நாம் வெறும் தொடர்பு மொழியாகக் கடந்து சென்று விட முடியாது அது சரியாகப் படித்தவர்களுக்கு ஒரு வாழ்வியல்,

"யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா"

என்பது போன்ற எத்தனையோ உயர்ந்த தத்துவங்களை நமக்கு தந்திருக்கின்றது, அத்தகைய உயர்நிலைத்  தமிழை நாமோ நமது பிள்ளைகளோ வாசிக்கவோ அல்லது கேட்கவோ செயகின்றோமா என்பது பெரும்பாலோனோருக்கு  கேள்விக்குறியே, நமது பிள்ளைகளுக்கு தமிழ், தமிழர் வரலாறு, பண்பாடு  குறித்த செய்திகளை சேர்ப்பது நமது கடமை, நமது பெரியதிருமொழியில் பாசுரங்கள் அனைத்தும் தமிழே மார்கழித் திங்கள் நாளில் தினம் ஒரு பாசுரம் பயின்றால் நாவில் தவழும்  தமிழ்..திருப்பள்ளி எழுட்சியாக...மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா