போர் கப்பல் தயாரிப்பு மற்றும் கொள்முதல் பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரியாக வைஸ் அட்மிரல் சந்தீப் நைதானி பொறுப்பேற்பு

பாதுகாப்பு அமைச்சகம் போர் கப்பல் தயாரிப்பு மற்றும் கொள்முதல் பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரியாக வைஸ் அட்மிரல் சந்தீப் நைதானி பொறுப்பேற்புஇந்திய கடற்படையின் வைஸ் அட்மிரல் சந்தீப் நைதானி, போர்க்கப்பல் தயாரிப்பு மற்றும் கொள்முதல் பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரியாக இன்று பொறுப்பேற்றார்.  தில்லி ஐஐடியில் ரேடார் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் முதுநிலை பட்டம் வென்ற இவர், புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்று , கடற்படையின் மின்னியல் பிரிவில் கடந்த கடந்த 1985ம் ஆண்டு சேர்ந்தார்.  கடற்படையில் கடந்த 35 ஆண்டு காலமாக  பணியாற்றும் இவர் ஐஎன்எஸ் விராட் விமானம் தாங்கி போர்க்கப்பல் உட்பட கடற்படையின் பல பிரிவுகளில் பல பதவிகளில் பணியாற்றியவர்.  கடற்படையின் மின்னியல் பயிற்சி மையமான ஐஎன்எஸ் வல்சுராவுக்கும் இவர் தலைமை தாங்கியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா