கையூட்டு வாங்கி சிறை சென்ற இலவம்பாடி கிராமநிர்வாக அலுவலர் ரேவதி


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் இலவம்பாடி கிராமத்தில்  பட்டா பெயர் மாற்றம் செய்ய விவசாயிடம் ரூபாய்.2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும்  இலஞ்ச ஒழிப்புப் காவல்துறையினர் கைது செய்தனர். விவசாயி நடராஜன் (வயது 48). தனது விவசாய நிலத்தின் பட்டாவினைப் பெயர் மாற்றம் செய்ய இலவம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் ரேவதி (வயது35), ரூபாய்.3,000 இலஞ்சம் தர வேண்டுமென நடராஜனிடம் கேட்டதாகவும், தொடர்ந்து, நடந்த இலஞ்சப் பேரத்தில் ரூபாய்.2,000 கொடுப்பதாக நடராஜன் கூறவே அதை ஏற்க மறுத்த கிராம நிர்வாக அலுவலர் ரேவதி ரூபாய்.2,500 கொடுத்தால் மட்டுமே பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தரப்படும் எனக் கூறவே

இலஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி நடராஜன், வேலூர் இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் செய்ததன் பேரில், பினாப்தலின் இரசாயனப்பொடி தடவிய ரூபாய்.2,500 ரூபாய் நோட்டுகளுடன் இலவம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு நடராஜன்  வந்து பணியில் இருந்த ரேவதியிடம் ரூபாய்.2,500 பணம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த வேலூர் இலஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர்  ஹேமசித்ரா, ஆய்வாளர்  ரஜினிகாந்த் தலைமையிலான ஊழல் தடுப்புத் துறையினர் கிராம நிர்வாக அலுவலர் ரேவதியைக் கையுடன்  களவாடிய பொழுதில்  கைது செய்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்த பிறகு வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா