72 வது குடியரசு நாள் விழா பாடல் போட்டி

குடியரசு நாள் விழா பாடல் போட்டி72-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை புறநகர், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அலுவலகம் குரல் வளப்போட்டியை நடத்துகிறது.

இப்போட்டியில் 12 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவர்கள் (7ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு) பங்கு கொள்ளலாம்.

போட்டியில் பங்கு கொள்ளும் மாணவர்கள் “பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்” என்ற மகாகவி பாரதியாரின் பாடலை பாடி ‘யூ ட்யூப்’ இல் பதிவேற்றம் செய்து லிங்க்-ஐ 24.01.2021 இரவு 12.00 மணிக்குள் singingforrepublicday2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இசைக்கருவிகள் / கரோக்கே போன்ற பின்னணி இசை பயன்படுத்தக் கூடாது.

இப்போட்டியை பற்றிய மேலும் விவரங்களுக்கு 94441 39501-ஐ தொடர்பு கொள்ளலாம். ட்விட்டரில் மேலும் தகவல்களுக்கு

http://twitter.com/gstchennaiouter/status/1351798804614299650

அனைத்து சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) தொடர்பான கேள்விகளுக்கு, அதன் அண்ணா நகர் தலைமையக அலுவலகத்தில் அமைந்துள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால்துறையின் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) ஹெல்ப் டெஸ்கை அனைத்து வரி செலுத்துவோர் மற்றும் நுகர்வோர் நேரில் அல்லது பின்வரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் : 26142850, 26142851, 26142852, 26142853 அல்லது Sevakendra-outer-tn@gov.in –க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்