கூட்டுவட்டி வசூலிக்கும் நிறுவனம் முத்தூட் பைனான்ஸில் கொள்ளையடித்த வடமாநிலங்களில் கும்பல் ஆறுபேர் சிக்கினர்கேரள மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டில் மக்களை வைத்து நகை அடமானம் பிடித்து கூட்டுவட்டி வசூலிக்கும் நிறுவனம் முத்தூட் பைனான்ஸில்கிருஷ்ணகிரி மாவட்டம் ஹோசூரில்  கொள்ளையடித்த 6 பேர் ஒரேநாளில் கைது. தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஹோசூர் பாகலூர் சாலையிலுள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனக் கிளையில் நேற்றுக் காலை ஹெல்மெட முகமூடி அணிந்து நுழைந்த ஆறு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல்,  பாதுகாப்புப் பணியிலிருந்த காவலாளியிடம் துப்பாக்கியால் மிரட்டி சாவியை வாங்கி லாக்கரிலிருந்த  12 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகளையும்,  பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது குறித்து உடனே தனிப்படை அமைந்து காவல்துறை தேடிய நிலையில் முத்தூட் நிறுவனம்   வெளியிட்ட அறிவிப்பில். திருடப்பட்ட தங்கம் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் இழப்பைச் சந்திக்க மாட்டார்கள் என்று எங்கள் வாடிக்கையாளருக்கு உறுதியளிக்க விரும்புகிறோம். நாங்கள் நம்பிக்கையில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்கள். ?...!...முத்தூட் நிதி பல தலைமுறைகளாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் நம்பிக்கையின் மரபு மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்கிறோம்....?.!.வாடிக்கையாளர்களின் மதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாக்க முயற்சிக்கும் அதே நேரத்தில், காயமடைந்த எங்கள் கிளை ஊழியர்கள் அனைவருக்கும் தேவையான ஆதரவை வழங்கும் முயற்சிகளையும் முன்னெடுக்கிறோம்.இந்த கிளை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும், விரைவில் வழக்கமான வேலைகளைத் தொடங்குவோம். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதும் மற்றொரு அறிக்கையை வெளியிடுவோம். இவ்வாறு முத்தூட் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில்  இன்று காலை ஆந்திரப்பிரதேச மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சம்சட்பூரில் ஆறு பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 12 கோடிக்கான நகைகளுடன் ஏழு துப்பாக்கிகள், இரண்டு  கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.  விசாரணையில் ஆறு பேரும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 

கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் தமிழகம் அழைத்து வந்து விசாரிக்க காவல்துறையினர் திட்டம்.

கொள்ளை சம்பவம் நடந்த ஒரே நாளில்   கொள்ளையர்களைப்பிடித்து  கைது செய்த காவல்துறைபொதுமக்களின் பாராட்டு உண்டு ஆனால் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் மக்களிடம் வட்டிக்கு வட்டிபோட்டு தமிழிகத்தில் மக்கள் நகைகளை அபகரிக்கும் செயலும் உண்டு என்பதால் இவர்களே பெரிய முகம் தெரிந்த கொள்ளைக்கார அடகுக்கடை கும்பல் இவர்களிடம்  கொள்ளையடித்த கும்பல் பிடிபட்டது இதுபோன்ற சாமாணியர்கள் பறிகொடுக்கும் நகைகளும் ஒருநாளில் மீட்கும் காலம் வந்தால் பலரின் பாரட்டும் பெறும் நிலை வரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்