சென்னை சுங்கத்துறையில் சிக்கும் தங்கக் கடத்தல் கும்பல்கள்

சென்னை சுங்கத்துறை ரூபாய் 48.27 லட்சம் மதிப்பிலான 937 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தது விமான நிலைய சுங்கத்துறை. ஒருவர் கைது.

 உளவுப்பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா IX 1644 என்ற விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மத் ஹசன் மாலிக் (28) என்பவரை விமானநிலைய சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனையிட்டதில் 880 கிராம் எடையில் 3 தங்க பொட்டலங்கள் அவரது உடலில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது.  அவரிடமிருந்து ரூ. 39.83 இலட்சம் மதிப்பில் 772 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதோடு அவர் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு நிகழ்வில் துபாயிலிருந்து ஏர் இந்தியா IX 1644 என்ற விமானத்தில் சென்னை வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த 31 வயதான முஹம்மத் அசாருதீன் என்பவர் விமான நிலைய சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரை சோதனையிட்டதில் 72 கிராம் எடையில் தங்க பசை பொட்டலத்தை அவர் உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. மேலும் அவரது கைப்பையில் 57 கிராம் எடையில் ஓர் தங்க வெட்டுத் துண்டும், 36 கிராம் எடையில் 2 தங்க தகடுகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து ரூ. 8.44 இலட்சம் மதிப்பில் 165 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் இருவரிடமிருந்தும் மொத்தம் ரூபாய் 48.27 இலட்சம் மதிப்பில் 937 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.  ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 மேலும் இதற்கு முன் நடந்த ஒரு சோதனையில் .

பேரீச்சம் பழங்களுக்குள் ஒளித்து வைத்துக் கடத்தி வந்த ரூ 15.26 இலட்சம் மதிப்புடைய தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவரின் உடமைகளில் இருந்து பேரீச்சம் பழங்களுக்குள் ஒளித்து வைத்துக் கடத்தி வந்த ரூ.15.26 இலட்சம் மதிப்புடைய தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் உளவுத் தகவலின் அடிப்படையில் பறிமுதல் செய்துள்ளனர்.

எமிரேட்ஸ் விமானம் ஈகே 542 மூலம் ஜெட்டாவில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவரின் உடைமைகளைச் சோதனை செய்து பார்த்த போது, பேரீச்சம் பழப் பசைப் பொட்டலங்களுக்குள் தங்கக் கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. சுங்கச்சட்டம், 1962-இன் கீழ், 295 கிராம் எடையுடைய 15.26 இலட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா