குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை:ஊரகவளர்ச்சி அமைச்சகம்
ஊரக வளர்ச்சி அமைச்சகம் குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை

நாட்டில் வெளிப்படையான மற்றும் ஒருங்கிணைந்த நிலத் தகவல் மேலாண்மை அமைப்பை உருவாக்குவதற்காகவும், நில ஆவணங்களை டிஜிட்டல் மற்றும் நவீனமயமாக்கவும், டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனப்படுத்துதல் திட்டத்தை 2008-09-ஆம் ஆண்டு இந்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் எட்டப்பட்டது.

அந்தமான் & நிகோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, கோவா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோராம் மற்றும் பஞ்சாப் ஆகிய பத்து மாநிலங்களில் ஆவணங்கள் மற்றும் சொத்துகளின் பதிவுக்காக ‘ஒரே தேசம், ஒரே மென்பொருள்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

ஒவ்வொரு நிலத் தொகுப்புக்கும் பிரத்யேக அடையாள எண்ணுடன் கூடிய 14 இலக்க பிரத்யேக நிலத் தொகுப்பு அடையாள எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆகியவற்றை குறித்து தன்னுடைய பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

ஒருங்கிணைந்த தண்ணீர் கொட்டகை திட்டம், பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் தண்ணீர் கொட்டகை மேம்பாட்டு பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2021 ஜனவரி 31-இன் படி, நிறைவு செய்யப்பட்ட 2457 திட்டங்களின் இறுதி மதிப்பீட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. மாநிலங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, 2014-15-ஆம் வருடத்தில் இருந்து 7.09 லட்சம் நீர் சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டு/புத்தாக்கம் அளிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 15.17 லட்சம் ஹெக்டேர்கள் 2020-21-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வரை பாதுகாப்பன நீர்ப்பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்