தமிழகத்தின் நடப்பு ஆட்சியில் கடைசி இடைக்கால பட்ஜெட்
23 பிப்ரவரி 2021 அன்று தாக்கலாகிறது. அடுத்தநாள் முன்னாள் முதலமைச்சர் காலம்சென்ற ஜெ ஜெயலலிதா பிறந்தநாள் தமிழக சட்டப்பேரவை வருகின்ற 23 ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரான தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல், இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட் உள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகுமென மக்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள்