இந்திய அரசின் இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021 ன் படி. டுவிட்டர், பேஸ்புக் சமூக வலைதளங்கள் செயல்படுவதில் சிக்கல்


இந்திய அரசின் இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021 ன் படி செயல்படாத காரணங்களால் மே 25 ஆம் தேதி முதல் டுவிட்டர், பேஸ்புக் சமூக வலைதளங்கள் செயல்படுவதில் சிக்கல் 
சம்பித் பத்ரா உள்ளிட்ட சில பா.ஜ.க தலைவர்கள் வெளியிட்ட குறிப்பிட்ட பதிவுகளுக்கு மட்டும் "manipulated media", அதாவது சந்தேகத்திற்கிடமானதென முத்திரை இட அது விசாரணையில் இருக்கும்போதே, சந்தேகத்திற்கிடமானது என முத்திரையிட்டது தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்திற்கு டில்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பி 24 மணி நேரத்திற்குள் உரிய விளக்கமளிக்க கெடுவும் விதித்ததையடுத்து மே 24 ஆம் தேதி யில்டி ல்லி சிறப்பு காவல்துறையின் இரு குழுக்களாகப் பிரிந்து ஹரியானாவின் குர்கான், டில்லி லாடோசாராய் ஆகிய இரண்டிடங்களில் உள்ள டுவிட்டர் அலுவலகத்திற்குள் சோதனை நடத்தினர். நிர்வாக இயக்குநர் மனிஷ் மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தியதாகவும், இது ஆரம்பகட்ட விசாரணை தான் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் செயல்பட மூன்று மாதங்களுக்கு முன் இந்திய அரசு புதிய சட்டதிட்டங்களை அறிமுகம் செய்தது. அவற்றை அந்தத் தளங்கள் இன்னும் ஏற்காத நிலையில் அதற்கான கெடு மே மாதம் 26 ஆம் தேதியுடன்  முடிகிறது.  டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களைத் தடை செய்தால், தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல விஷயங்கள் மக்களைச் சென்றடைய தாமதமாகும். எனவே, தடை செய்யாமல், விதிகளை கடுமையாக்கலாம் என கருத்து தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் புதிய சட்டவிதிகளை ஏற்க மறுத்து நீதிமன்றத்தை நாடியது வாட்ஸ்ஆப் நிர்வாகம்

சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு விதித்த புதிய சட்டவிதிகளுக்கு எதிராக, வாட்ஸ்ஆப் நிர்வாகம் டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

சமூக ஊடகங்களான 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம்' போன்ற நிறுவனங்கள் தங்களது பயனாளர்களின் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தலைமை நடவடிக்கை அதிகாரி, சிறப்பு பணி தொடர்பு நபர், உள்ளுறை குறைதீர் அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல புதிய விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியிட்டது. இந்த விதிகளுக்கு இணங்கிச் செயல்பட சமூக ஊடகங்களுக்கு மூன்று மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. 'விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எதிராக தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அவகாசம் மே மாதம் 25 ஆம் தேதி நிறைவடைந்ததையடுத்து, 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இன்று முதல் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், மத்திய அரசின் புதிய சட்ட விதிகளை ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் தற்போது தகவலின் படி, மத்திய அரசின் புதிய சட்ட விதிகளுக்கு எதிராக, வாட்ஸ்ஆப் நிர்வாகம் டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதாகத் தெரிகிறது. 'புதிய விதிகள் தனியுரிமைத் தகவல் பாதுகாப்பு முற்றுப்புள்ளி வைக்கும். இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது' என, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் விசாரணையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா