கொரோனா சிகிச்சை பெற்று வந்த 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்தார்.

சென்னையில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்தார்.


 கொரோனா 2வது அலையில் இளம் வயதினர் பலரும் பலியாகி வரும் நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 மாத கர்ப்பிணியான கார்த்திகா (29 வயது) எனும் மருத்துவர் கொரோனாவால் பலியானார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டாக்டர் கார்த்திகா, முதுநிலை பயற்சி மருத்துவர். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. கர்ப்பிணியான மருத்துவர் கார்த்திகாவிற்கு சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினர் வீட்டிலேயே வைத்து சீமந்த வலைகாப்பு  நடத்தியுள்ளார். க

அதன் பிறகு குடும்பத்தினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, பின்னர் கர்ப்பிணியான மருத்துவர் கார்த்திகாவிற்கும் தொற்று உறுதியாகி. திருவாண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு சிகிச்சை பெற்றவர், தொற்றின் தீவிரத்தால் கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டார்.

ஆனால் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டதால், வானகரம் அப்போல்லோ மருத்துவனையிலிருந்து மே 19 ஆம் தேதி கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி டாக்டர் கார்த்திகா உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்பு மதுரையில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரான 30 வயதான சண்முகப்ரியா உயிரிழந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா