ஒரு தெய்வீகக் குதிரை மனிதர்களில் முதியோர் மீதும் நோயாளியின் மீதும் நேசம் காட்டுகிறது

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளிலிருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரைக் குடிக்காது.

பூனை தூங்குமிடத்தில் உங்கள் படுக்கையையிடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.

முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.

பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினைத் தோண்டுங்கள்.

பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். உங்கள் நினைவில் தெளிவு வரும்

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.   அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.

இப்படி இயற்கை நமக்கு பல விலங்குகள், பறவைகள், தாவரங்கள் மூலம் நமக்கு பல அறிய செயல்பாடுகளை நடத்துகிறது அந்த வகையில் குதிரைகளும் நம் வாழ்வியல் பன்னாட்டுக் காலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தவை.

குதிரைகள் பற்றிய அரிய வியப்பூட்டும் தகவல்கள்! 

உலகில் மனிதர்கள் வாழ, பல உயிரினங்களின் உதவியும் தேவைப்படுகிறது. அதில் பசுக்கள் மற்றும் கோழிகள் போல குதிரைகள் மனிதனுக்கு ஒரு வகையில் உதவியாகின்றன.

குதிரைகள் மனிதர்கள் சவாரிக்கும், பொருட்களை சுமந்து செல்லவும் உதவ அரசர்கள் காலத்தில் குதிரைப்படை தனியே இருந்தது. குதிரைகள் மனித வாழ்வில் முக்கியப் பங்காற்றுகின்றன.

குதிரைகள் பெரும்பாலும் நின்று கொண்டு உறங்குகின்றன. நள்ளிரவில் மட்டுமே படுத்துறங்கும். குதிரைகளின் வயது வாரியாக உறக்க நேரம் மாறுபடும். பிறந்து மூன்று மாதங்கள் வரை ஒரு நாளில் பாதி அளவு நேரம் குட்டிக் குதிரைகள் உறக்கத்திலேயே இருக்கின்றன.

வயது வந்த குதிரைகள் படுத்துறங்குவதை விட நின்று கொண்டு 3 மணி நேர அளவில் உறங்கும். வயது வந்த குதிரைகள் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வது அரிது தான். அவை நின்று கொண்டு உறங்குகையில், விழித்த உடன் விரைந்து செயல்படும்.

குதிரைகளின் உணவுப் பாதை வித்தியாசமானது. மனித உடல் அமைப்பைப் போன்றதல்ல. குதிரைகள் வாந்தி எடுக்காது, வாய் வழியாக சுவாசிக்காது.

குதிரையின் வாயில் நாள் ஒன்றுக்கு 40 லிட்டர் அளவு உமிழ்நீர் சுரப்பதால்.  உணவை எளிதில் மென்று விழுங்கும். அத்துடன், உணவை திரும்ப வாயில் கொண்டு வந்து அசைபோட்டு மெல்லவும் இயலும். தாவர வகைகளையே அதிகம் உண்ணும். அதன் பற்களும் தாவரங்களை உண்ணும் அளவே செறிவுடன் இருக்கும். குதிரைகள் ஏப்பம் விடுவதில்லை!

ஆண் குதிரைக்கு 40 பற்களும், பெண் குதிரைக்கு 36 பற்களும் உண்டு. சில குதிரைகளுக்கு ஓநாய் பற்களும் மேல் தாடை கீழ் தாடையை விட அகலமாகவுமிருக்கும்.

குதிரைகளின் வயதை பற்களைக் கொண்டு கணக்கிட முடியும். சில குதிரைகள் பற்களின் வயதை விட அதிக காலம் உயிர் வாழும்.

நல்ல கவனிப்புடன் வளர்க்கப்படும் குதிரைகள் 30 வயது வரை வாழ்கின்றன. மற்ற குதிரைகள் பெருகுடல் பிரச்சனை, நோய் போன்ற காரணங்களால் விரைவில் இறக்கின்றன.

குதிரைகள் பிறந்த சில மணி நேரத்தில் நடக்கத் துவங்கும். அத்துடன், தாயை பார்த்து எளிதில் புற்களை உண்ணவும் அவை கற்றுக் கொள்கின்றன. மந்தையான வாழ்க்கை முறை கொண்டுள்ளது. காடுகளில்  எப்போதும் மந்தையாகச் சுற்றித்திரிவதைப் பார்த்திருக்கலாம்.  வீட்டில் வளர்க்கப்படும் குதிரைகளுக்கு துணையுடன் இருந்தால், அது இன்னும் ஆரோக்கியமாக வாழும். தனியாக இருக்கும் குதிரைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறது.

சாம்பல் நிறமாகவே இருக்கிறது. அது வளரும் போது, வெள்ளை நிறமாக மாறுகிறது. அதில், சில குதிரைகள் பிறக்கையில் கறுப்பு நிறம் போலவும் தோன்றும்.

சராசரியாக குதிரைகளுக்கு நிமிடத்திற்கு 32 முதல் 36 முறை இதயம் துடிக்கிறது. சில குதிரைகளுக்கு 24 முறையும் சில குதிரைகளுக்கு 40 முறையும் துடிக்கிறது. குதிரைகளின் ஓய்வு சுவாச விகிதம் குறைவாக இருக்கும்.

குதிரைகள் மோனோகுலர் பார்வை கொண்டுள்ளது. இதன் மூலம் அவை வேட்டையாடுபவர்களை அடையாளம் காண்கின்றன. அதனால் ஆபத்தை விரைவாக உணர்ந்து தப்பிக்கின்றன.

குதிரைகள் தொலை தூரத்தில் உள்ள பொருட்களை எளிதில் கண்டறியும். ஆனால், ஒரு மீட்டருக்கு குறைவாக உள்ள தூரத்தில் இருக்கும் பொருட்களை அடையாளம் காண்பது மிக சிரமமாக இருக்கும்.

குதிரைகளின் கண்ணில், எளிதில் பாக்டீரியக்களால் பாதிப்பு எற்படுகிறது. அதை முறையாக பராமரிக்கவில்லை என்றால், குதிரைக்கு குருட்டுத் தன்மை ஏற்படும்.

சிறந்த உடல் அமைப்பு கொண்ட உயிரினமான குதிரைகள், இந்தியாவில் பெருமளவில் தற்போது பயன்பாட்டில் இல்லை என்றாலும், அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இன்னும் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது.

நமது நாட்டில் ஆன்மீகத்தில்     கலியுக விநாயகர் எனும் வடிவில் பிள்ளையார் குதிரைமீது வருகிறார். சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு அருளும் பொருட்டு குதிரை சேவகனாய் எழுந்தருளியதை மாணிக்கவாசகர் பெருமான் நரியை பரியாக்கியதை புராணங்கள் கூறுகின்றன. துர்க்கை குதிரைமீது அஷ்வாரூடா எனும் பெயரில் வருகிறார். பைரவர் துர்க்கா பைரவராகக் கோலம் கொண்டும் வரும்போது குதிரைமேல் பவனி வருகிறார். குதிரை வேகமும் விவேகமும் பெற்ற விலங்காக இருப்பதால் வீரர்கள் அதை மிகவும் நேசித்தனர். குதிரையைப் பழக்கி அதன்மீது அமர்ந்து போரிடுவதை சிறப்பாகக் கருதினர். வீரர்களின் முதன்மை பெற்ற விருப்பம் உன்னத குதிரைகளே ஆகும்.சூரியனை வழிபடும் இந்து மதத்தின் ஒரு பிரிவுக்கு அல்லது சமயத்திற்கு சௌமாரம் என்று பொருள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரியநாராயணர் என்றும் அழைப்பார்கள்.

சிவபெருமானை நோக்கி கடுமையான தவமிருந்த சூரியன், ‘கிரகபதம்’ என்னும் பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார்.ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு  செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன.  சூரியன் ஒருவராக இருந்தாலும் 12 ராசிகளில் சஞ்சரிப்பதன் காரணமாக, பன்னிரு சூரியர்களாக பார்க்கப்படுகிறார். 

சூரியன் பச்சை நிறமுடைய 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்தத் தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை  ஓட்டுபவரின் பெயர் அருணன். இவருக்கு கால்கள் கிடையாது. இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் ஆவார்.  சூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த இரதத்துக்கு 5 ஆரங்களும் 3 நாபிகளுமுண்டு. 3 நாபிகளும் 3 காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்திலுள்ள 6 கட்டைகளும்,  6 ருதுக்களை குறிக்கின்றன.  

சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கிறது சூரியபகவான் தன்னுடைய தேரில் 4 பட்டணங்களை சுற்றி வந்து, காலை,  மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.உலகெங்கும் குதிரைகள் பல நூற்றாண்டுகளாக மனிதக் கலாசாரத்துடன் ஒட்டி பங்கேற்றுள்ளன. குதிரைகள் வேலை வாங்கவும், வண்டி இழுக்கவும், காவல் படையிலும் விளையாட்டுக்களிலும் பந்தயங்களிலும்,  மனமகிழ்விற்காகவும் போர்க்காலப் படையெடுப்புகளிலும் அலங்கார அணிவகுப்புக்களிலும்  பயன்படுத்தப்பட்டே வந்துள்ளன. 2008 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 59,000,000 குதிரைகள் உலகெங்கிலும் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது; இதில் அமெரிக்காவில் 33,500,000, ஆசியாவில் 13,800,000 மற்றும் ஐரோப்பாவில் 6,300,000 இருப்பதாகவும் குறைந்தளவில் ஆபிரிக்கா மற்றும் ஓசியானாவில் உள்ளதாகவும் அதன் அறிக்கைக் கூறுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் மட்டுமே 9,500,000 குதிரைகள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இந்தக் குதிரைகளால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நேரடியாக $39 பில்லியன் செலவு எனவும், மறைமுகச் செலவுகளைக் கணக்கிட்டால் $102 பில்லியன் எனவும் அமெரிக்க குதிரைகள் சங்கம் கருதுகிறது. 2004 ஆம் ஆண்டில் அனிமல் பிளானெட் என்ற தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்த்திய கருத்துக் கணிப்பின்படி 73 நாடுகளைச் சேர்ந்த 50,000 நிகழ்ச்சிப் பார்வையாளர்கள் குதிரையை உலகின் நான்காவது மிகவும் விரும்பப்படும் விலங்காக வாக்களித்துள்ளனர். அதை உண்மை என நிரூபிக்கப்பட்டது இந்தக் காணொளியில் வரும் குதிரை மனிதர்களில் முதியோர் மீதும் நோயாளியின் மீதும் நேசம் காட்டுகிறது


அணைத்து மக்களின் பாராட்டைப் பெற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா