பெங்களூருவில் இயற்கை முறையில் விளைந்த பலாப்பழம் ஜெர்மனிக்கு ஏற்றுமதி

வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்  பெங்களூருவில் இயற்கை முறையில் விளைந்த பலாப்பழம் ஜெர்மனிக்கு ஏற்றுமதிஇயற்கை விவசாய பொருட்களின் ஏற்றுமதிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக, இயற்கை விளைபொருட்கள் என சான்றளிக்கப்பட்ட 10.20 மெட்ரிக் டன் எடையுடன் கூடிய பலாப்பழ தூள் மற்றும் பலாச்சுளைகள் பெங்களுருவில் இருந்து ஜெர்மனிக்கு கடல் மார்க்கமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

பெங்களூருவில் உள்ள பலாடா அக்ரோ ரிசர்ச் ஃபவுண்டேஷன்ஸ் நிறுவனத்தின் ஆபே ஜாக்ஃப்ரூட் டிஏ அசிஸ்டெட் பேக் ஹவுஸ் இந்த ஏற்றுமதியை செய்துள்ளது

அபேடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள பலாடா அக்ரோ ரிசர்ச் ஃபவுண்டேஷன்ஸ், 12,000 ஏக்கர் நிலங்களில் பணியாற்றும் 1500 விவசாயிகளின் குழுவாகும். மருத்துவ மற்றும் வாசனை மூலிகைகள், தேங்காய், பலா, மா, வாசனை பொருட்கள் மற்றும் காபியை இவர்கள் விளைவிக்கின்றனர்.

ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவின் தேசிய இயற்கை விவசாய திட்டங்களின் சான்றிதழை பெறுவதற்கான வசதியை சிறு விவசாய குழுக்களூக்கு பலாடா அக்ரோ ரிசர்ச் ஃபவுண்டேஷன்ஸ் வழங்குகிறது. தனது இயற்கை விவசாய சான்றிதழ் திட்டத்தின் கிழ் பலாடா அக்ரோ ரிசர்ச் ஃபவுண்டேஷன்ஸ்க்கு அபேடா சான்றளித்துள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா