தலைக்கனம் கொண்டவர்கள் நடந்தும் பள்ளியில் ஒரு தறுதலை ஆசிரியர் ராஜகோபால்
சென்னை கே.கே.நகரிலுள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் இராஜகோபாலன்  மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்திருக்கும் செய்தி பேரதிர்ச்சி தருகிறது. அறிவை வளர்க்கும் கல்வியும், உயிரைக் காக்கும் மருத்துவமும் வணிகப் பண்டமாக மாறிப்போன குற்றச்சமூகத்தில் ’வகுப்புகளுக்கு அரை நிர்வாணம்..’ ராத்திரியில் வீடியோ கால்..!’ – பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்..

’என்னுடைய ப்ராஜக்டை ஏற்றுக்கொள்வதற்காக என்னைத் தனியாக சினிமா பார்க்க அழைத்தார். நான் எவ்வளவோ மறுத்தும் என்னை வற்புறுத்தினார். இறுதியில் ’நான் உன்னை என் மகளாகத்தான் பார்க்கிறேன்’ என அருவருக்கும் வகையில் பதில் அனுப்பினார். அவர் உரையாடியதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துவைத்துள்ளேன்’ - பாதிக்கப்பட்ட மாணவர்

சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் மீது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்முறை புகாரை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வந்த புகார்களைப் பகிர்ந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் வலுத்துவருகின்றன. பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் கே.கே.நகர் கிளையில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றும் ராஜகோபாலன் மீது இந்தப் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்ஸராக இருக்கும் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி க்ருபாளி என்பவர், தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் தொடர்புடைய அந்த ஆசிரியர் மீதான பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் புகாரைப் பகிர்ந்திருந்தார்.

அதில், “நீங்கள் என் பள்ளியின் முன்னாள் மாணவி எனத் தெரிகிறது. நானும் உங்களைப் போல வணிகவியல் மாணவிதான். உங்களிடம் ஒரு புகார் அளிக்க வேண்டும். எங்களது ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்பில் பல்வேறு மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருகிறார். இது ஒருகட்டத்தில் எல்லைமீறி எனது தோழியை சினிமாவுக்கு அழைக்கும் வரை சென்றுவிட்டது. வகுப்பு குழுக்களில் ’பார்ன்’ வீடியோ லிங்க்களைப் பகிர்கிறார். இதுகுறித்து எங்கள் துறைத் தலைவரிடம் புகார் அளித்தும் எந்தவிதப் பயனும் இல்லை. அதனால் நாங்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளோம். இதுபோல நீங்கள் படித்த சமயத்திலும் அவர் இவ்வாறு நடந்துகொண்டதாகப் புகார் எதுவும் எழுந்துள்ளதா எனத் தெரியப்படுத்துங்கள். எங்களது சீனியரும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

க்ருபாளி அந்தப் புகாரைப் பகிர்ந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீதான மேலதிக புகார்கள் எழுந்தன. அதில், “என்னுடைய ப்ராஜெக்டை ஏற்றுக்கொள்வதற்காக என்னைத் தனியாக சினிமா பார்க்க அழைத்தார். நான் எவ்வளவோ மறுத்தும் என்னை வற்புறுத்தினார். இறுதியில் ’நான் உன்னை என் மகளாகத்தான் பார்க்கிறேன்’ என அருவருக்கும் வகையில் பதில் அனுப்பினார். அவர் உரையாடியதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துவைத்துள்ளேன்’ என தனக்கு அவர் பேசிய ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்திருந்தார்.

இந்தப் புகார்கள் தவிர வகுப்பறைக்கு அரை நிர்வாணமாக இடுப்பில் துண்டோடு வீடியோ வகுப்புகளுக்கு வருவது, மாணவர்களை நள்ளிரவில் வீடியோ கால் செய்ய அழைப்பது போன்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய புகார்களும் எழுந்துள்ளன. இதில் மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவலாக அந்தப்பள்ளியில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் இந்த ஆசிரியர் பள்ளியின் பாலியல் குற்றப்புகார்கள் தொடர்பான பிரிவிலும் உறுப்பினராக இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

ராஜகோபாலன் மீதான புகாரை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு வலுத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், ட்விட்டரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மு.க.கனிமொழி உட்பட பலரும் இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.மூளை வலிமை ஜாஸ்தியுடையவர்களாக தன்னை கருதிக் கொள்ளும் YG மதுவந்தியுனுடைய  "பத்ம சேஷாத்ரி பால பவன் (PSBB)" கே.கே. நகர் பள்ளியில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலை பல ஆண்டுகளாகவே மேற்கொண்டு வருவது தற்போது முன்னால் மாணவர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

ஊரடங்கில் ஆன்லைன் வகுப்பில் துண்டை மட்டுமே கட்டிக்கொண்டு மாணவர்கள் மத்தியில் தோன்றியிருக்கிறான். மேலும் மாணவர்களுக்கு ஆபாசப் படங்களின் Website லிங்க்குகளை அனுப்புவது, மாணவிகளின் தோற்றம் குறித்து ஆபாசமாகப் பேசுவது, பாலியல் ஜோக்குகளை உதிர்ப்பது, மாணவிகளைத் திரைப்படங்களுக்கு அழைப்பது, நள்ளிரவிற்கு பிறகு மாணவிகளுக்கு போன் செய்வது, மாணவிகளை பாலியல் ரீதியில் தொடுவது என்று பணிபுரிந்து வரும் 20 வருடங்களில் இவ்வாறே நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

இணைய வகுப்பிலேயே துண்டை கட்டிக்கொண்டு வகுப்பில் தோன்றியிருக்கும் போதே பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வேலையைவிட்டு நீக்கி வழக்கு பதிந்திருக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே பல்வேறு காலங்களில் மாணவர்களால் அளிக்கப்பட்ட புகார்களை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்துள்ளது.

தற்போது எதிர்ப்புகள் வலுக்கவே  இவையெல்லாம் பள்ளி நிர்வாகத்துக்கே தெரியாது, இதுபோல் அவர் மீது இதற்கு முன்பு எந்த குற்றச்சாட்டும் வரவில்லை என்று அப்பட்டமாக புளுகியுள்ளது.     பத்ம சேஷாத்ரி போன்ற பள்ளியில்  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க கூடாது. இந்த நிகழ்வு மட்டும் கூறவில்லை. அதை நிர்வகிப்பவர்களின் தரத்தையும் கருத்தில் இருத்தல் வேண்டும். அவர்களுன் உரசிக் கொண்டு இருக்கும் முற்போக்கு முகமூடி போராளிகள் இந்த ராம்குமார் சுவாதி விவகாரத்தில் சாதிய மனோபாவத்தில் எவ்வளவு அசிங்கமாக வினையாற்றினார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக ராஜகோபாலனைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். PSBB பள்ளியின் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை அப்பள்ளியின் அங்கீகாரத்தை இரத்து செய்ய வேண்டும். குற்றத்தில் பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்புள்ளது தெரியவந்தால் நிரந்தரமாக பள்ளியை இழுத்து மூட வேண்டும். பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் பள்ளி தரப்பில் இருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என  சென்னை மாநகரக் காவல்துறை தகவலாக இருக்க  மாணவிகளின் பாலியல் புகாருக்கு ஆளான பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் செல்போன், லேப்டாப் பறிமுதல் செய்தனர் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டார் சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமைகள் பெரும் அதிர்ச்சியை தருகிறது. கடும் கண்டனத்திற்குரிய இச்செயலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது, பள்ளி நிர்வாகம் உடனடி நடவடிக்கைக எடுக்கவேண்டும், மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்ய வேண்டும்.PSBB பள்ளி ஆசிரியர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும்...

பள்ளிக்கு டிரஸ்டி என்ற முறையில் ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு தற்காப்புக் கடிதம்

இந்தக் குற்றச்சாட்டுகளால் எனது தாயின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது  எனக் கூறும்: ஒய்.ஜி.மகேந்திரன் அவரது தாயார் ஆவணம் பிடித்த நபர் நாம் அறிவோம்  சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் மாணவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்!கனிமொழி எம்.பி. டிவிட்

  சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பி.எஸ்.பி.பி பள்ளியில் ஆசியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி  டிவிட்டில் தெரிவித்து உள்ளார்.

சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி‘. (Padma Seshadri Bala Bhavan Senior Secondary School). இந்த பள்ளியானது, திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தையார்,  ஒய்.ஜி.பார்த்தசாரதி (யேச்சா குஞ்சா பார்த்தசாரதி ( யேச்சகுஞ்சா பார்த்தசாரதி ; 30 செப்டம்பர் 1917 முதல்1990வரை )  என்ற நபரால் தொடங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு,  அவரது மனைவியும்,   கல்வியாளருமான   ராஜலட்சுமி பார்த்தசாரதி நடத்தி வந்தார்.

மிகவும் நிதி வசூலில் பிரபலமான இந்த பணக்கார பள்ளி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக புகார் வந்துள்ளதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்

இதுகுறித்து கனிமொழி வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,

பி.எஸ்.பி.பி பள்ளியில் வணிக ஆசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மாணவர்களிடமிருந்து வரும் புகார்களுக்கு எதிராக செயல்படத் தவறிய பள்ளி அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்

சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும் அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒய்.ஜி.மகேந்திரனை வருத்தம் தெரிவிக்க வைத்த அவரது மனைவியின் சகோதரி லதா கணவர் நடிகர் ரஜினிகாந்த் என்பது பலர் அறியாத தகவல் ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை?: அதற்கு கமிஷனர் புன்சிரிப்பு  ஒய்.ஜி. மகேந்திரனை கைது செய்ய வேண்டும்” ஆணையரிடம்  காங்கிரஸ் பிரமுகர் புகார்., வருடம் தோறும் பலகோடி வசூல் கொள்ளை நடத்தி பல அமைச்சர்கள் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் தரும் பரிந்துரைக் கடிதங்கள் கூட இவர்கள் ஜாதி துவேஷம் காரணமாக கண் முன்னே குப்பை கூடையில் போடும் ஒரு திமிர்த்தனம் கொண்டு முன்னால் முதல்வர் காலம்சென்ற ஜெ.ஜெயலலிதா தந்த இவர்களுக்கான சலுகைகள் இவர்களை சமூகத்தில் பெரிய நபர்கள் போல பார்க்க வைத்தது மொத்தத்தில் இந்தப் பள்ளி  பணம் கொழுத்த உயர்ஜாதி மக்கள் பிள்ளைகள் மட்டுமே படிக்க வைக்கக் காத்திருக்க இவர்கள் தங்களை அவர்களிடம் கடவுள் போல காட்டிக்கொள்ளும் அலட்சியம் எப்போதும் உண்டு. நடிகர் ரஜினிகாந்த் உறவினர் என்பதை பயன்படுத்தி இப்போது இவர்கள் சமூகத்தின் உயரிய அந்தஸ்து உள்ள மனிதர்களைக் கூட மதிக்காமல் உதாசீனம் செய்த நிகழ்வு நம் கண்களுக்கு முன்பாக தற்போது நிழலாடுகிறது. தக்க நடவடிக்கை தேவை. இதுவே அணைத்து மக்கள் நிலை. தற்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை அவரும் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே நீச்சல் குளத்தில் சிறுவன் மரணம் மூலம் இவர்கள் ஆடிய நாடகம் இன்னும் பலர் மறக்கவில்லை. இது அடுத்த நிகழ்வு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா