100 பெண் விஞ்ஞானிகளின் வெற்றிப் பயணம்: சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் களத்தில் இறங்கி காப்புரிமை வல்லுனர்களாகி சாதனை

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

100 பெண் விஞ்ஞானிகளின் வெற்றிப் பயணம்: சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் களத்தில் இறங்கி காப்புரிமை வல்லுனர்களாகி சாதனைகுடும்ப பொறுப்புகள் காரணமாக வேலையை பாதியில் விட்டு, மீண்டும் ஆய்வுப் பணிக்கு திரும்பிய 100  பெண் விஞ்ஞானிகளின் வெற்றிப் பயண கதைகள் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. குடும்ப பொறுப்புகள் காரணமாக வேலையை விட்ட இந்திய பெண்கள் பலர், மீண்டும் பணிக்கு திரும்ப  இந்த புத்தகம் கலங்கரை விளக்கமாக இருக்கும். 

அறிவியல் தொழில்நுட்ப துறையில்  கிரண் (பயிற்சிமூலம் ஆராய்ச்சி முன்னேற்றத்தில் ஈடுபாடு)  என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது வேலையை பாதியில் விட்ட பெண் விஞ்ஞானிகள் மீண்டும் ஆய்வு பணிக்கு திரும்ப உதவுகிறது. இதற்காக பெண் விஞ்ஞானிகள் திட்டம் (WOS) தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் மூலம், மீண்டும் வேலைக்கு திரும்ப விரும்பும் பெண் விஞ்ஞானிகள் சந்திக்கும் சவால்கள் தீர்க்கப்படுகின்றன.

இந்த திட்டம் மூலம் பயிற்சி பெற்று மீண்டும் ஆய்வு பணிக்கு திரும்பி சாதனை படைத்த பெண் விஞ்ஞானிகள் 100 பேரின் கதையை இந்த புத்தகம் விவரிக்கிறது. இந்த புத்தகம் டிஜிட்டல் மற்றும் அச்சு வடிவில் கிடைக்கிறது.

இதில் இந்த பெண்களின் கல்வித் தொகை, சிறப்பு பிரிவுகள், தற்போதைய வேலை நிலவரம், அனுபவம், பயிற்சிக்குப்பின் அறிவுசார் சொத்துரிமையில் தொழில்நுட்ப தகுதி பற்றிய தகவல்கள்  உள்ளன.

பெண் விஞ்ஞானிகள் திட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் முன்னணி திட்டம் ஆகும். இது கடந்த 2015ம் ஆண்டு, குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்ட பெண்கள் சக்தி புரஸ்கார் விருதை (ராணி லட்சுமிபாய் விருது)  பெற்றுள்ளது. 

பெண் விஞ்ஞானிகள் திட்டத்தை அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீடு கவுன்சில்(TIFAC) அமல்படுத்துகிறது.  இத்திட்டத்தில் அறிவியல்/பொறியியல்/மருத்துவம் படிப்பை முடித்த பெண்கள், அல்லது அறிவுசார் சொத்துரிமை பிரிவில் படித்தவர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்கான தேர்வு, அகில இந்திய ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நடத்தப்படுகிறது. 27 முதல் 45 வயதுடைய பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்களை பெறலாம். காப்புரிமை தாக்கல், வழக்குத் தொடர்தல் மற்றும் காப்புரிமை தொடர்பான பணிகளில் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த புத்தகம்  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையதளத்தில் https://dst.gov.in கிடைக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்