சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கொவிட்-19 தொற்றின் அண்மை தகவல்கள்

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கொவிட்-19 தொற்றின் அண்மை தகவல்

இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 8,26,740-ஆகக் குறைந்துள்ளது; 71  நாட்களுக்குப் பிறகு மிகக் குறைவு.

கடந்த 24 மணி நேரத்தில் 67,208 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதுவரை மொத்தம் 2,84,91,670 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,03,570 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து 35-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தேசியளவில் குணமடைபவர்களின் வீதம் 95.93 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வாராந்திர தொற்று உறுதி வீதம் 5 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்துள்ளது; தற்போது இது 3.99% ஆகும்.

தொடர்ந்து 10-வது நாளாக, அன்றாட பாதிப்பு வீதம் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக, 3.48 சதவிகிதமாக உள்ளது.

இதுவரை 38.52 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 26.55 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 71 நாட்களுக்குப் பிறகு 8,26,740 ஆக சரிவு

இந்தியாவில் கொவிட் அன்றாட பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 67,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, 10-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.

நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 71 நாட்களுக்குப் பிறகு  8,26,740 ஆகக் குறைந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 2.78 சதவீதமாகும்.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 38,692 குறைந்துள்ளது.

தொடர்ந்து 35-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,570 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களை விடக் கூடுதலாக 36,362 பேர் குணமடைந்தனர்.

இதுவரை மொத்தம் 2,84,91,670 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 95.93 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,31,249 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 38,52,38,220 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 3.99 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி வீதம் 3.48 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 10 நாட்களாக இந்த எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நம் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 34,63,961 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 36,58,159 முகாம்களில் 26,55,19,251 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 36,58,159 முகாம்களில் 26,55,19,251 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

2.18 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள்: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில்

2.18 கோடிக்கும் அதிகமான (2,18,28,483) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.

மத்திய அரசு இதுவரை, 27.28 கோடிக்கும் அதிகமான (27,28,31,900) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.

இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 25,10,03,417 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த மூன்று நாட்களில் கூடுதலாக 56,70,350 தடுப்பூசி டோஸ்களை, மத்திய அரசு, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கவிருக்கிறது.

தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கொவிட்-19 தடுப்பூசி உத்தி, மே 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உத்தியின் கீழ் ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்