ஆகவே பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு கொள்கையில் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல், சமூக நீதிக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாமல், பாதுகாத்திட மத்திய பாஜக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என முதல்வராகும் முன்பு தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

சமூக நீதிக்கு முரணாக ஒரு குறிப்பிட்ட ஜாதியத் தரப்புக்கு மட்டும் வழங்குவதாக கடந்த அதிமுக அரசால் அறிவித்து நாடகமாடப்பட்ட 10.5 சதவீதம் தனி உள் இடஒதுக்கீடு சட்டத்தை அமல் படுத்த முடியாதென தற்போது திமுக அரசு தெரிவித்துள்ளது..
தமிழகத்தில் சமூக நீதி மீண்டுமொருமுறை காக்கப்பட்டதாக திமுக வினர் மட்டுமில்லாமல் அணைத்து பிற்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உற்சாகம்.
நம்ப வைத்து ஏமாற்றப்ட்டதாக சாதி கட்சியினர் கதறல் துவக்கம். தமிழகத்தில் உள்ள பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி மற்றும் கடையன் ஆகிய 6 பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளர்,தேவேந்திர குலத்தான்,குடும்பன்,காலாடி, பண்ணாடி,கடையன் ஆகிய சாதிப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களைத் தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப் பெயரில் அழைக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை, சட்டத் துறை,ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை இயக்குநர்களை உள்ளடக்கிய ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.
இந்த ஆய்வுக்குழு தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி அறிக்கை அளித்தது.இந்த அறிக்கையைத் தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.இந்த அறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு உரிய சட்டத் திருத்தத்தை மேற்கொண்டு மக்களவையில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றது. பின்னர் 6 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ஒப்புதல் பெறப்பட்டதனைத் தொடர்ந்து 6 உட்பிரிவுகளை ஒருங்கிணைந்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த சட்டத் திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பள்ளர்,தேவேந்திர குலத்தான்,குடும்பன்,காலாடி, பண்ணாடி மற்றும் கடையன் ஆகிய 6 பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முதன்மை செயலாளர் கே.மணிவாசன், மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் சான்றிதழ் வழங்க அதிகாரம் பெற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்தியப் பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் துணைப் பிரிவுகள் பற்றி ஆராய்வதற்கான ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு - அதாவது 31.1.2021 வரையில் நீட்டித்து பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை அமல் செய்யும் போது, இப்போதைய இதர பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தும், மத்திய அரசுப் பணிகள் மற்றும் மத்திய கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டில் பெரிய ஆதாயங்கள் எதுவும் பெறாத நிலையில் இருக்கும் ஓபிசி உட் பிரிவினருக்கு, பயன்கள் எதிர்பார்க்கப் படுகிறது. ஓ.பி.சி.களுக்கான மத்திய பட்டியலில் உள்ள இதுபோன்ற புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தினருக்குப் பயன்தரும் வகையில் இந்த ஆணையம் பரிந்துரைகள் அளிப்பதற்காகவும்.
ஆணையத்தின் அலுவலக மற்றும் நிர்வாகம் தொடர்பான செலவுகள் தான் இதற்கு ஆகும். இவற்றை சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிப்புத் துறை தொடர்ந்து வழங்கும். ஓ.பி.சி.களுக்கான இடஒதுக்கீட்டில் இப்போதைய திட்டத்தின் கீழ் மத்திய அரசுப் பணிகள், மத்திய அரசு கல்வி நிலைய மாணவர் சேர்க்கையில் பயன்களைப் பெறாதிருக்கும் சாதிகள் மற்றும் சமுதாயங்களைச் சேர்ந்த அனைவரும் இதனால் பயன் பெறுவார்கள் என்றும்.
ஆணையத்தின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான மற்றும் அதன் விசாரணை வரம்புகளை அதிகரிப்பதற்கான உத்தரவுகள், ஜனாதிபதியின் ஒப்புதலுடன் பிறப்பிக்கப்படும் உத்தரவின் மூலமாக அரசிதழில் அறிவிக்கையாகும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்த நிலையில். தற்போது. தமிழகத்தின் இட ஒதுக்கீடு அடுத்த சாதிப் பூதம் கிளம்பியது.
யாதவா (தமிழ் இடையர் தெலுகு பேசும் இடையர்) இவர்கள் குறிப்பிடுவது யாதவ்(இந்திய அளவில் இணைய)
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் 26.5 விழுக்காட்டில் 143 சாதிகளுக்கானது.
அதில் 15 விழுக்காடு யாதவா சமூகத்திற்கு மட்டுமே கோரி வழக்கு தொடுத்து இருக்கிறார் சுந்தர்ராஜ்
வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை மேசையில் தற்போது தள்ளுபடியாகியுள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள மன்றத்தில் வைக்க வேண்டிய கோரிக்கை என்றும், நீதிமன்றம் உத்தரவிடாது என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
இனி ஒவ்வொரு ஜாதியும் முட்டி மோத வேண்டியது தான்.
வன்னியர் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு தான் இதன் துவக்கம்.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதம் உள் இடஒதுக்கீடு வழங்கப் பட்டிருப்பதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையில், அதைச் செயல்படுத்துவதென்ற அடுத்தகட்டத்திற்கு எங்களால் செல்ல முடியாது என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு என்று தனி அமைச்சகம் கிடையாது. ஆனால், சமூகநீதியை பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு தான் உள்ளது. அதை உணர்ந்து சமூகநீதியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் காக்க வேண்டிய நிலையில்
தற்போது அறிவிப்பு வரவேற்பு பெறுகிறது காரணம் பிற்படுத்தப்பட்ட ஜாதி அணைத்துக்கும் ஜாதிவாரி தனி இட ஒதுக்கீடுகள் தேவை
பாட்டாளி மக்கள் கட்சியாக இருந்தாலும், வன்னியர் சங்கமாக இருந்தாலும் அவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் அவர்கள் 108 ஜாதி சமூகநீதியை பாதுகாப்பததால் தான். ஆண்டில் வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கச் செய்து 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்று அனைத்திந்திய தொகுப்பு இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% என மொத்தம் 22.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடும், இஸ்லாமியர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டன.
தேசிய அளவில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடும் கிடைத்தது தான். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் 27% இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றப்பட்டது சாத்தியமானது. அந்த வகையில் தான் கல்வியிலும், சமூகத்திலும், வேலைவாய்ப்பிலும்
வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை தேர்தல் இலாபம் கருதி கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்து நிறைவேற்றியது.
அந்த சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதல் பெற்று அரசாணையும் வெளியிடப்பட்டு விட்டது. அதன்படி அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இந்த சட்டத்தின்படி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை உயர்கல்வித்துறையால் கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டு விட்டது. மற்ற துறைகளிலும் இதேபோன்ற அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கக்கூடும். அவற்றின் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.என்பது அச் சமூக எதிர்பார்ப்பு
கல்வியைப் பொறுத்தவரை சட்டப்பல்கலைக்கழகத்தில் 10.50% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் பட்டு விட்டதாம் அதே நேரத்தில் வேலைவாய்ப்பில் இந்த இட ஒதுக்கீடு இன்னும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை. மருத்துவத்துறையின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓமியோபதி மருந்து வழங்குனர், மருத்துவ உதவியாளர் பணிக்கு 555 பேரை தற்காலிகமாக நியமிப்பதற்கான அறிவிக்கையில் முந்தைய இட ஒதுக்கீட்டு முறையே கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரவேற்கலாம் உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கைகளில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து, வன்னியர்களுக்கான 10.50% உள் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதுவும் சிறப்பானது.
பணி நியமனங்கள் தொடர்பான இந்த அறிவிக்கைகளில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு இடம் பெறாதது தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளை பிற்படுத்தப்பட்டோர் அமைச்சகம் தான் தொடர்பு கொண்டு, விளக்கம் கேட்டு, இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும்படி ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் துறையின் அமைச்சரே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி, வன்னியர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மறுக்க இது அரசின் நிலைப்பாடு முதலமைச்சரைப் பாராட்டலாம்
சமூகநீதியை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு முறை புதிய இட ஒதுக்கீடுகள் சட்டமாக்கப்படும் போது அதை எதிர்த்து சமூகநீதிக்கு எதிரான சக்திகள் வழக்குத் தொடர்வது வாடிக்கையானது தான். தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 100% இட ஒதுக்கீட்டை ஒழிக்க செண்பகம் துரைராஜன் வழக்கு தொடர்ந்த நாள் முதல் இத்தகைய வழக்குகள் தொடரப்பட்டுத் தான் வருகின்றன. ஆனால், அந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்காத வரை, அதை நடைமுறைப்படுத்த எந்தத் தடையும் இல்லை. இது தான் காலம் காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. ஆனால் அரசின் கொள்கை முடிவு மாற்று அரசாணை மூலம் அதை முந்தைய ஆட்சியில் செய்த தவறு சரிசெய்ய முடியும்.
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 1994-ஆம் ஆண்டில் தொடங்கி 27 ஆண்டுகளாக ஏதேனும் ஒரு வழக்கு எங்காவது ஒரு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போதும் கூட இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனாலும், 27 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், இஸ்லாமியர்கள் உள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் உள் ஒதுக்கீடு குறித்த வழக்குகளும் நிலுவையில் தான் உள்ளன; இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆனாலும், அந்த இட ஒதுக்கீடுகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. காரணம். அந்த இட ஒதுக்கீடுகளுக்கு எந்த நீதிமன்றத்திலும் தடை விதிக்கப்படவில்லை என்பது தான்.
அதேபோல், தேசிய அளவில் உயர்வகுப்பு ஏழைகளுக்கான ( Economically Weaker Section- EWS) 10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு இரண்டரை ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முதலில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்ட அவ்வழக்கு இப்போது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கப்படவில்லை என்பதால், தேசிய அளவில் கல்வி - வேலைவாய்ப்பில் இந்த இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள போதிலும், அவற்றின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்ட நிலையில்.
தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும் முன்பாக மற்ற பிற சமுதாயம் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடியாமல் தமிழகத்தின் மற்ற மிகப் பெரிய மற்றும் சிறிய ஜாதி சமுதாயங்களையும் சேர்க்க வேண்டியது அவசியம் அவசரம் ஆகும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகளை நடத்துவதற்கு சமூகநீதியில் அக்கறையும், வல்லமையும் கொண்ட பிற சமூக மூத்த வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் அணைத்து சமுதாய மக்களும் இட ஒதுக்கீடுகளின் பலன் கிடைக்கும். முன்னால் முதல்வரான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆட்சி முடிவில் அவசர கோளத்தில் அள்ளித் தெளித்துச் சென்ற வன்னியர்களுக்கு அளித்த இட ஒதுக்கீடுகளில் விடுபட்ட பிற சமூகத்தினரை இணைத்தால் தான் பிரச்சினைகள் தீரும். இது குறித்து ஒரு படித்த அகமுடைய இளைஞன் சண்முகப் பிரியன் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் தனது மனக்குமுறல் இங்கு கூறுவதைக் காணலாம்.
"வேறு மாநிலத்தினருக்கு கூட MBC யில தனி இட ஒதுக்கீடு கொடுத்து இருக்காங்க.ஏழு உட்பிரிவுகள் கொண்ட அகமுடையார்களுக்கு 15 சதம் தனி இட ஒதுக்கீடு கொடுக்கனும் நியாயப்படி பார்த்தா... ஆனா இப்ப இருக்குற நிலமைய பார்த்தா 40% பேருக்கு பட்டம் எது ஜாதி எதுனே தெரியாது போல.. எப்படி அகமுடையாரா ஒன்று சேர்ந்து தனி இட ஒதுக்கீடு வாங்கப் போகிறார்களெனத் தெரியவில்லை.
அகமுடையார்களை பிரிவினை செஞ்சு இலாபம் அடைபவர்கள் ஒரு புறம். வடக்கு மாவட்டங்கலில் சைவ வெளாளர். செங்குந்தர். ஒருபுறம்.. இது போதாதுனு ஒரு சிலர் ஒருபக்கம் பொய் வரலாற்றை எழுதி பேஸ்புக், யூடிப் முழுக்க போஸ்ட் போட்டு சாதிய பத்தி தெரிஞ்சுகனும்னு நெனைக்குறவனையும் குழப்பம் செஞ்சு வெறுப்பேற்றுவது ஒரு பக்கம்
சரி இதை எல்லாம் கூட பொறுத்துக் கொண்டு இருந்தா FC (Forward class) முற்படுத்தப்பட்டோர்ல இருக்குற கார்காத்த வெள்ளாளர். சைவ வெள்ளாளர். பாண்டிய வெள்ளாளர்... சோழிய வெள்ளாளர். இன்னும் FC யில இருக்குற நிறைய வெள்ளாளர்கள் துளுவ வேளாளர் (அகமுடையார்) என சாதி சான்றிதழ் வாங்கி இட ஒதுக்கீட்டை எடுத்து க் கொண்டு திருமணத்தில் சலுகைக்காக தான் பிறந்த சாதியையே மாறிக் கொள்ளும் பிறவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அகமுடையார் முதுகில் சவாரி செய்வது மட்டும் இல்லாமல் இங்கு பல வரலாறையும் திருடுறாங்க. பிள்ளை,முதலி.சேர்வை அப்டின்னு பட்டம் இருந்தாலே போதும் உடனே அது நாங்க தான்னு வந்துடுவாங்க.
இதோட விட்டாங்களா அரசு ஆவணத்தில் அகமுடையார் உட்பிரிவு துளுவ வேளாளர்னு தெளிவா இருக்கு அதையும் இந்த நபர் களின் சொந்தம் என்று உருட்டு அவர்களுக்கு தனது மூதாதையர் இந்த நபர்களுக்கு வரலாறு சொல்லி வளர்க்கவில்லை.
சரி உங்களுக்கு சொந்தமாகவே இருக்கட்டும் பேஸ்புக், யூடிப்ல பதிவிடாமல் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு இட ஒதுக்கீடுகள் பிரிச்சிக்கோங்கனு சொன்னாலும் கேட்பதில்லை.
பொய் வரலாறு போட்டுவிட்டு .
( BC cast listla) சாதி பட்டியல்ல 168 சாதிகள் இருக்கிறது... இதில கூடுதலா வேற FC யில இருந்தவங்க BC சான்றிதழ் வாங்கிட்டு BC களுடன் போட்டிக்கு வருகிற சூழலில்... இவ்ளோ பேரோட போட்டி போட்டு வேலைக்கு போறதுக்குள்ள தாக்கருந்துடும் நிலை
அது மட்டுமில்லாமல் BC யில நேர்முகத் தேர்வுல சொந்த சாதிக்காரானாகப் பார்த்து தேர்வு செய்வது. சரி அரசியல்ல தான் ஓரம்கட்டப்பட்ட சமூகத்தின் குரல் அரசு வேலைக்காவது போய் பிழச்சிப்போம் அப்டின்னு பார்த்தா அதுக்கும் விட மாட்டாங்க.
இந்த காலக்கட்டத்துல ஒரு அகமுடையாரா பொறந்து கஸ்டப்பட்டு முன்னேறுறது ரொம்ப கஸ்டம். அகமுடையார் மக்களே அறிவார்ந்த அறிவுப்பூர்வமா சிந்தித்து எதிர்கால சமூதாயத்த நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முடியாதானால்
அவர்கள் நிலமை அடுத்த தலைமுறை ஒடுக்கப்பட்ட மக்கள் நிலமைக்கு போய்விடும். கொஞ்சம் சிந்தித்து பகுதி வாரி பட்டங்களை தவிர்த்து விட்டு "அகமுடையார்" என ஒற்றை வார்த்தைல ஏழு பிரிவுகள் ஒன்றினையனும். அதை ஜாதிவாரி கணக்கெடுப்பில் பதிவுசெய்யவும். இல்லை என்றால் ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும். அரசியல்ல கூட உங்களுக்கு புடிச்ச கட்சிக்கு ஓட்டு போடுங்க ஆனா உங்க அடையாளத்த இழந்துடாதிங்க அடையாளத்த இழந்தால் நீங்களும் இங்கு ஒரு அகதி தான் அப்படினு எதிர்கால வரலாறு எழுதப்படும்" என்பது
சண்முகப் பிரியன் திருவண்ணாமலையின் குரல் இதுபோன்ற பல சமுதாய மக்கள் தற்போது பட்டம் எது ஜாதி எது என்று அறியாத நிலையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியமாகும். அப்போது தான் உண்மை நிலை பெற்று இடஒதுக்கீடு சரியாகும்.
கருத்துகள்