மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் புது நிறுவனங்கள் வாங்குவோரைச் சென்றடைய அரசு மின்-சந்தை

வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்குறு மற்றும் சிறு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் புது நிறுவனங்கள் வாங்குவோரைச் சென்றடைய அரசு மின்-சந்தை உதவுகிறது

மேக் இன் இந்தியா இயக்கம் மற்றும் உள்ளூர் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் இந்திய அரசின் கொள்கைக்கு வலுவூட்டும் வகையில், குறு மற்றும் சிறு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஸ்டார்ட் அப் எனப்படும் புது நிறுவனங்களுக்கு அதிக அளவில் வாங்குவோர் குழுக்களை சென்றடைவதற்கான அணுகலை அரசு மின்-சந்தை வழங்கி வருவதாக இந்திய அரசின் வர்த்த்க துறை செயலாளர் டாக்டர் அனூப் வாத்வான் இன்று கூறினார்.

ஊடகங்களிடம் பேசிய அவர், அரசு மின்-சந்தையில் தற்போது 6.90,000-க்கும் அதிகமான குறு மற்றும் சிறு நிறுவன விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குவோர் இருப்பதாகவும், அரசு மின்-சந்தையின் மொத்த ஆர்டர் மதிப்பில் 56 சதவீதத்திற்கு இவர்கள் காரணமாக இருப்பதகவும் கூறினார்.

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, 62 சதவீதத்திற்கும் அதிகமான குறு மற்றும் சிறு நிறுவனங்கள் அரசு மின்-சந்தை தளத்தில் இணைந்திருப்பதாக அவர் கூறினார். 2016-17 நிதியாண்டில் சுமார் 3000 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே இணைந்திருந்த நிலையில், இது ஒரு மிகச்சிறந்த வளர்ச்சி ஆகும்.

ஆகஸ்ட் 2017-ல் தொடங்கப்பட்டதில் இருந்து ரூ 111,113 கோடி மதிப்புள்ள 67.27 லட்சம் ஆர்டர்கள் அரசு மின்-சந்தை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளன. 18.85 லட்சம் பதிவுபெற்ற விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குவோர், மற்றும் 52,275 அரசு சார்ந்த வாங்குவோர் இதில் ஈடுபட்டனர். குறிப்பாக, மொத்த ஆர்டர் மதிப்பில் 56.13 சதவீதத்தை 6,95,432 சிறு மற்றும் குறு விற்பனையாளர்கள் பூர்த்தி செய்தனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கொள்கையின் படி, அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உதயம் பதிவு திட்டத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் சமீபத்தில் தொடங்கியது. இதன் மூலம் அரசு மின்-சந்தை தளத்தில் தானியங்கி பதிவு முறைக்காக தொழில்களிடம் இருந்து ஒப்புதல் பெறலாம். 2021 மே 31 வரை, 18,75,427 விற்பனையாளர்கள் அரசு மின்-சந்தையில் பதிவு செய்து கொண்டுள்ளனர். இதில் 6,98,178 சிறு மற்றும் குறு நிறுவனங்கள் அடக்கம். தளத்தில் செய்யப்படும் கொள்முதல்களில் சுமார் 57 சதவீதம் சிறு மற்றும் குறு நிறுவனங்களிடம் இருந்து செய்யப்படுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்