தமிழ்நாடு இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை துணை இயக்குனராக ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி நியமனம்

தமிழ்நாடு இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை துணை இயக்குனராக ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவராவார் குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பதவி ஏற்று. பல்வேறு மாற்றங்களில் பல பொறுப்புகளில் பதவிகளை வகித்தவர். எஸ்பியாக பதவிஉயர்வு பெற்றவர், பின் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.


அதன்பின் சென்னை மாநகர காவல் துறையில் தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராகவும் பதவியிலிருந்தார்.        லட்சுமி ஐபிஎஸ். லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குநர் (டிஐஜி) பொறுப்பில் நியமனம் செய்யப் பட்ட"சொந்த விருப்பம் காரணமாக காவல்பணியில் இருந்து விலக விரும்புவதால் அதை ஏற்கவும்" என்று காவல் தலைமை இயக்குநர் - தமிழ்நாடு மற்றும் உள்துறைச் செயலாளர் தமிழ்நாடு என்று மட்டும்தான் ஐபிஎஸ் அதிகாரியான லட்சுமி கடிதம் எழுதியதாக தகவல் ! லட்சுமி போன்ற திறமை - நேர்மை சம எடைகொண்ட அதிகாரிகளை யாரும் இழக்க  விரும்புவதில்லை.சென்னை காவல் வரலாற்றில் முதன்முறையாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறைக்கு ஐ.ஜி (இயக்குநர்) யாக பவானீஸ்வரி ஐபிஎஸ்,  இணை இயக்குநராக (டிஐஜி) லட்சுமி, எஸ்.பி. (சூப்பிரண்டு)யாக ஷியாமளாதேவி ஆகிய மூன்று பெண் அதிகாரிகள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். குறிப்பிட்ட இந்த மூவருமே இதுவரை தங்கள் சர்வீசில் பனிஷ்மெண்ட் வாங்காதவர்கள்; மூவருமே சட்டம் - ஒழுங்குப் பிரிவின் உயரதிகாரிகளாக சென்னை உள்ளிட்ட பல்வேறு


மாவட்டங்களில் தங்கள் முத்திரையைப் பதித்தவர்கள். இதே லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு அனைத்துத் தகுதிகளும் கொண்ட துணை கமிஷனர் விமலாவின் பெயரும் பரிசீலனையில் இருந்தது. சென்னை காவல் வரலாற்றில் உளவுப்பிரிவின் முதல் (பெண்) டெபுடி கமிஷனரானவர். தற்போது தமிழ்நாடு இலஞ்ச ஒழிப்புத்துறைத் துணை இயக்குனராக ஐபிஎஸ் அதிகாரி இலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்