அழிவின் விளிம்பு நிலை மரங்களை ஆவின் நிறுவனம் மூலம் நட்டு அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

புதுக்கோட்டையில் அழிவின் விளிம்பிலுள்ள இலுப்பை மரம் ஆவின் உதவியால் நட்ட மரம் அறக்கட்டளையின் செயல்.
இலுப்பை மரம் நல்ல சுவாசக் காற்றை வழங்கும்    மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது. கொடிய கொரானா காலம் சுவாசக் காற்றை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்து விட்டது. கண்ணுக்கே தெரியாத காற்றை பல விதமாக விவரிக்க தமிழில் தான் எத்தனை சொற்கள். உலகில் மற்ற மொழிகளுக்கு இல்லாத சிறப்பு ! இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் பேசும் மக்கள் அன்னிய மொழி கலப்பின்றி பேசி வாழவேண்டும்.
திசைகளைப் பொருத்து காற்றின் பெயர்கள் மாறுபடும் அவை;-தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று, வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று, கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று, மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று, காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்களும் மாறுபடும்: 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று.  "6 முதல் 11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"    12 முதல் 19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல். "20 முதல் 29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று. "30 முதல் 39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று".  "100 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று" "101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயல்காற்று" '120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று" இப்படி வீசும் காற்றைப்பெற மரங்கள் தேவை. அதை அதிகம் தரும்

இலுப்பையின் தாயகம் தமிழகமாக இருந்த நிலை மீண்டும் தேவை  தவிர நேபாளம், இலங்கை மற்றும் மியான்மர் (பர்மா)விலும், இந்திய மாநிலங்களில் ஜார்கண்ட், குஜராத், மத்தியபிரதேசம், பீகார், ஒரிஸ்ஸா, கேரளாவிலும் தமிழ்நாட்டிலுமுள்ளது. சப்போட்டா மரத்தின் வகையைச் சார்ந்தது.

தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

இலுப்பை ஒரு வெப்ப மண்டலத் தாவரம். வறண்ட நிலங்களிலும் எளிதாக வளரக்கூடியாது. இலுப்பையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகளுக்கு மேல். சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது. 

இலுப்பை மரம் அதிகமான மருத்துவ குணமுடைய தாவரம். இதன் இலை, பூ, விதை, பட்டை, எண்ணெய், புண்ணாக்கு  ஆகிய அனைத்தும் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் மருத்துவத்திற்கானபயன்பாட்டிலுள்ளது.

இதன் பருவகாலம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை. முளைத்த நாளிலிருந்து பத்து வருடங்களுக்கு பின்னர்தான் பலன் தரும்.

"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை" என்பது பழமொழி.

ஒரு வருடத்திற்கு இருநூறு கிலோவிலிருந்து முன்னூறு கிலோ பூவும், இருபது முதல் இருநூறு கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையிலிருந்து முன்னூறு மில்லி லிட்டர் எண்ணெய் எடுக்கலாம். ஒரு டன் பூவிலிருந்து எழுநூறு கிலோ சர்க்கரையும் நானூறு கிலோ ஆல்ககாலும் தயாரிக்கலாம். இலுப்பை ஆல்ககால் (சாராயம்) ஒரு மாற்று  எரிபொருளாக பயன்படக்கூடியது. இலுப்பை எண்ணெய் ஒரு வலி நிவாரணி, சமையலுக்கும் இது பயன்படுகிறது.

இது தவிர பாம்பு விஷம், வாத நோய், சக்கரை வியாதி, சளி, இருமல்  மூலநோய், வயிற்றுப்புண், சுவாசக்கோளாறு, காயம்  ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. இலுப்பைப் பூ ஊறுகாய் காச நோய்க்கு அருமருந்தாகும்.

விறகாக மட்டுமின்றி அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

உப்புநீரை தாங்குவதால் இம்மரம் படகுகள், மரக்களங்கள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

வணிகரீதியாக ஒரு ஏக்கருக்கு சுமார் இருநூறு  இலுப்பை மரங்கள் வரை நட்டு, ஆண்டொன்றுக்கு ஆயிரத்தி ஐநூறு லிட்டர் எண்ணெய் எடுத்தால் அதன் மூலமாக மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இது தவிர பூ, பட்டை, சர்க்கரை, புண்ணாக்கு, சாராயம், சிகைக்காய் ஆகிய அனைத்துமே பணம்தான். 

ஒரு கண அடி மரம் ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டது. அறுபது ஆண்டுகள் கழித்து ஒரு மரம் சுமார் ஐந்து லட்சத்திற்கு மேல் மதிப்புடையதாகிறது. இதை ஒரு பணம் காய்க்கும் மரம் என்று கூறினால் அது மிகையாகாது. வௌவாலுக்கு மிகவும் பிடித்தமான உணவு இலுப்பை பழங்கள்தான். இலுப்பையின் அழிவு,  வௌவாலின் அழிவு. வௌவாலின் அழிவு கொசுக்களின் வளர்ச்சி. கொசுக்களின் வளர்ச்சி நோய்களின் வளர்ச்சி.

இலுப்பையை அழிவிலிருந்து மீட்போம், என்று சபதம் கொண்டு செயல்படும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையின் செயலுக்கு வலுவானதாய் உதவும் புதுக்கோட்டை ஆவின் நிறுவனம் மூலம் மரம் நடவு செய்த நிகழ்வாகும் இதில் தமிழகத்தின் சட்டம், நீதி மற்றும் ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை ஆவின் புதுக்கோட்டை தலைமையிடம் நடத்தியது.  ஆவின்  பொதுமேலாளர் பாலபூபதி மற்றும் ஆரோக்கியம் காப்போம்.என்று பசுமையான புதுக்கோட்டை நகரம் கொள்கை கொண்ட மரம் இராஜா பாராட்டப்படுகிறார்கள்.                      நேற்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆவின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட  பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் சட்டம் நீதி மற்றும் ஊழல் தடுப்பு துறை துறை அமைச்சர் எஸ். ரகுபதி. புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் கலந்துகொண்டு இலுப்பை உள்ளிட்ட மரங்களை நட்ட மகிழ்வான நிகழ்வாகும் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆவின்  பொதுமேலாளர் பாலபூபதி உள்ளிட்ட  அலுவலர்ளும். பணியாளர்களும் உள்ளூர் பிரமுகர்கள் பலரும். புதுக்கோட்டையின் மரம் அறக்கட்டளையின் நிர்வாகிகளும்.பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்