சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கிருமிநாசினி: விரைவில் விற்பனைக்கு வருகிறது

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கிருமிநாசினி: விரைவில் சந்தைக்கு வருகிறது

சுற்றுச்சூழலுக்கு ஏற்றகிருமிநாசினியை புனேவைச் சேர்ந்த தொடக்க நிறுவனம் தயாரித்துள்ளது. ஆல்கஹால் இல்லாத, கைகளில் வறட்சியை ஏற்படுத்தாத, நச்சுத்தன்மையற்ற மற்றும் இதமான இந்த கிருமிநாசினி சந்தைகளில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

கொவிட் தொற்று காலத்தில் மக்கள் அடிக்கடி கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்கின்றனர். இதனால் கைகளில் வறட்சி ஏற்படுகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண புனேவைச் சேர்ந்த தொடக்க நிறுவனம் ‘வீ இன்னோவேட் பையோ சொல்யூசன்ஸ்’, வெள்ளி நானோ துகள்கள் மூலம்  கிருமி நாசினியை தயாரித்துள்ளது.

இந்த வெள்ளி நானோ துகள்கள், வெள்ளி அயனிகளை மெதுவாக மற்றும் நீண்ட நேரம் விடுவித்து நுண்ணுயிரிகளை கொல்கிறது. அதனால் இந்த கிருமிநாசினியை அடிக்கடி பயன்படுத்த தேவையில்லை. இவற்றை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலையில் சேமித்து வைக்க முடியும்.

இந்த கிருமிநாசினி, பரிசோதனைகளை முடித்து,  மத்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பின் ஒப்புதலை பெற்றுள்ளது. நுண்ணுயிரிகளை  திறம்பட கொல்வதையும், இந்த கிருமிநாசினி நிருபித்துள்ளது.

இந்த ‘வீ இன்னோவேட் பையோ சொல்யூசன்ஸ்’ நிறுவனத்துக்கு தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவு வளர்ச்சி வாரியத்தின் (NSTEDB)  கவச் (CAWACH 2020)  திட்டத்தின் கீழ் மானிய உதவி அளிக்கப்படுகிறது.

இந்த நிறுவனம், கைகளுக்கு பயன்படுத்தப்படும் வெள்ளி கரைசல் அடிப்படையிலான கிருமிநாசினியை உருவாக்கியுள்ளது. இதில் உள்ள வெள்ளி நேனோ துகள்கள்,  கைளில் உள்ள நுண்கிருமிகளை ஒழிக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்