வருமானவரி படிவங்கள் 15CA/15CB-ன் மின்னணு தாக்கலுக்கான கடைசி தேதி மேலும் நீட்டிப்பு

நிதி அமைச்சகம் வருமானவரி படிவங்கள் 15CA/15CB-ன் மின்னணு தாக்கலுக்கான கடைசி தேதி மேலும் நீட்டிப்பு


வருமானவரி சட்டம், 1961-ன்படி, 15CA/15CB படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும்.  தற்போது, வரிசெலுத்துவோர், வெளிநாட்டு பணம் பெற்றிருந்தால்,  15CA படிவத்தை,  பட்டய கணக்காளர் சான்றிதழுடன் 15CB படிவத்தை, அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் நகலை தாக்கல் செய்வதற்கு முன்பாக, மின்னணு  தாக்கல் இணையளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். 

இந்த படிவங்களை www.incometax.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில், வரி செலுத்துவோர் சில பிரச்சினைகளை சந்தித்ததால், இந்த படிவங்களை அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் 2021 ஜூன் 30ம் தேதிக்கு முன்பாக கைப்பட தாக்கல் செய்யலாம் என நேரடி வரி வாரியம் முடிவு செய்திருந்தது.

அந்த தேதியை 2021 ஜூலை 15ம் தேதி வரை நீட்டிக்க தற்போது நேரடி வரி வாரியம் முடிவு செய்துள்ளது.  இதனால் வரி செலுத்துவோர், மேலே கூறிய படிவங்களை, ஜூலை 15ம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.  வெளிநாட்டு பணம் பெற்றதற்கு, இந்த படிவங்களை ஜூலை 15ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளும்படி, அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  ஆவண அடையாள எண் உருவாக்குவதற்காக, இந்த படிவங்களை புதிய மின்னணு-தாக்கல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி பின்னர் வழங்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா