சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருது - 2021: ஆகஸ்ட் 15ம் தேதி வரை பரிந்துரைக்கலாம்

உள்துறை அமைச்சகம் சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருது - 2021: ஆகஸ்ட் 15ம் தேதி வரை பரிந்துரைக்கலாம்சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருதுக்கு ஆன்லைன் மூலம் மனுத்தாக்கல் செய்ய / பரிந்துரைக்க 2021 ஆகஸ்ட் 15ம் தேதி கடைசி  நாள். இதற்கான மனுக்கள் / பரிந்துரைகளை மத்திய உள்துறை அமைச்சகம் https://nationalunityawards.mha.gov.in என்ற இணையதளம் மூலம் பெறுகிறது. நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பங்காற்றுவதில் மிக உயர்ந்த விருதை சர்தார் வல்லபாய் படேல் பெயரில் மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இந்த விருது, தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதில் ஊக்கமளிக்கும் பங்களிப்புகளையும், வலுவான மற்றும் ஒன்றிணைந்த இந்தியாவின் மதிப்பை மீண்டும் வலியுறுத்துவதையும் அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த விருதுக்கு, இந்தியாவின் எந்த குடிமகனும் மதம், இனம், ஜாதி, பாலினம், பிறந்த இடம், வயது, வேலை மற்றும்  நிறுவனம் என எந்த பாகுபாடும் இன்றி தகுதியானவர்கள் ஆவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா