புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் சந்திப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் குழு திரு அமித் ஷாவுடன் சந்திப்பு; யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என்று உள்துறை அமைச்சர் உறுதிபுதுச்சேரியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவை புதுதில்லியில் இன்று சந்தித்தது.

யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் மத்திய அரசு அளிக்கும் என்று இந்த சந்திப்பின் போது உள்துறை அமைச்சர் உறுதி அளித்தார்.

இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரு அமித் ஷா, “புதுச்சேரியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுவை இன்று சந்தித்தேன்.

வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் மிகுந்த புதுச்சேரி எனும் லட்சியத்தை அடைய பிரதமர்

@NarendraModi

அவர்களின் தலைமையிலான அரசு உறுதிப்பூண்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா