யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்ற வாராங்கல் காக்காத்தியப் பேரரசின் ராமப்பா கோவில்

 கலாசாரத்துறை அமைச்சகம் இந்தியாவின் 39 வது உலக பாரம்பரிய இடம்: தெலங்கானா, வாராங்கல், பாலம்பேட்டில் உள்ள ருத்ரேஷ்வரா கோயில் (ராமப்பா கோயில்) யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றது


மற்றொரு மைல்கல் சாதனையாக, இந்தியாவின் பரிந்துரையால், தெலங்கானா மாநிலத்தின் வாராங்கல் அருகே முலுகு மாவட்டத்தில் பாலம்பேட் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமப்பா கோயில் என அழைக்கப்படும்  ருத்ரேஷ்வரா கோயில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 

இந்த முடிவு இன்று நடந்த, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய குழுவின் 44வது கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
13ம் நூற்றாண்டின் பொறியியல் அற்புதமான ராமப்பா கோயிலை உருவாக்கியவர் ராமப்பா. இதை 2019ம் ஆண்டுக்கான, யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடம் பட்டியலில் சேர்க்கும்படி மத்திய அரசு பரிந்துரை செய்தது.

அதன்படி யுனெஸ்கோ இன்று வெளியிட்ட சுட்டுரை செய்தியில், ‘‘இந்தியாவின் தெலங்கானா பகுதியில் உள்ள காகத்தியா ருத்ரேஷ்வரா (ராமப்பா) கோயில், உலக பாரம்பரிய இடமாக இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. சபாஷ்!’’ என குறிப்பிட்டுள்ளது.

காகத்தியா ராமப்பா கோயிலை, உலக பாரம்பரிய இடமாக, யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கம்பீரமான இந்த கோயில் வளாகத்துக்கு சென்று, அதன் பிரம்மாண்டத்தின் முதல் அனுபவத்தை பெற வேண்டும் என அவர் மக்களை கேட்டுக் கொண்டார்.யுனெஸ்கோ வெளியிட்டுள்ள சுட்டுரைக்கு பதில் அளித்துள்ள பிரதமர் ;

அருமை! அனைவருக்கும், குறிப்பாக தெலங்கானா மக்களுக்கு வாழ்த்துகள்.

நினைவு சின்னமான ராமப்பா கோயில், மிகச் சிறந்த காகத்தியா வம்சத்தின் சிறப்பான கைவினைத்திறனைக் காட்டுகிறது. இந்த கம்பீரமான கோயில் வளாகத்தை பார்வையிடவும், அதன் பிரம்மாண்டத்தின்  முதல் அனுபவத்தைப் பெறவும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.’’ என குறிப்பிட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தின் வாராங்கல் அருகே முலுகு மாவட்டத்தில் பாலம்பேட் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமப்பா கோயில் என அழைக்கப்படும்  ருத்ரேஷ்வரா கோயிலை  உலக பாரம்பரிய பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்ததற்கு, வழிகாட்டியதற்காகவும்,  ஆதரவு அளித்ததற்காகவும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்  திரு ஜி கிஷன் ரெட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம்

காகத்தியா ராமப்பா கோயிலை, உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி

காகத்தியா ராமப்பா கோயிலை, உலக பாரம்பரிய இடமாக, யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கம்பீரமான இந்த கோயில் வளாகத்துக்கு சென்று, அதன் பிரம்மாண்டத்தின் முதல் அனுபவத்தை பெற வேண்டும் என அவர் மக்களை கேட்டுக் கொண்டார்.

யுனெஸ்கோ வெளியிட்டுள்ள சுட்டுரைக்கு பதில் அளித்துள்ள பிரதமர் ;

அருமை! அனைவருக்கும், குறிப்பாக தெலங்கானா மக்களுக்கு வாழ்த்துகள்.

நினைவு சின்னமான ராமப்பா கோயில், மிகச் சிறந்த காகத்தியா வம்சத்தின் சிறப்பான கைவினைத்திறனைக் காட்டுகிறது. இந்த கம்பீரமான கோயில் வளாகத்தை பார்வையிடவும், அதன் பிரம்மாண்டத்தின்  முதல் அனுபவத்தைப் பெறவும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.                வாராங்கல் ஆண்ட காக்காத்தியர்  தெலுங்கு வம்சம் பொது ஆண்டு 1083 முதல் 1323 ஆம் ஆண்டு வரை  ஆந்திரப் பிரதேச பகுதிகளை ஆண்டவர்கள். காகத்தியர்கள் சமண மதத்தைப் பின்பற்றி, பின் இந்து மதத்தின்  சைவ வழி மாறியவர்கள்.

காக்காத்தியாப் பேரரசரான கணபதிதேவர், தற்கால ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா மற்றும் தமிழ்நாட்டின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்தார். கணபதிதேவருக்குப் பின் வந்த ருத்திரமாதேவி பொது ஆண்டு 1259 முதல் 1295 வரை வாரங்கல்லை ஆண்ட காகதீயப் பேரரசியாவார். யாதவத் தலைவர் மகாதேவர், ருத்திரமாதேவியை எதிர்த்துத் தோல்வியடைந்தார். 1295 ஆம் ஆண்டில் ருத்திரமாதேவி காலமான போது , அவரது பேரன் பிரதாபருத்திரன் முடிசூடினார். பொது ஆண்டு 1323 ல் டில்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கின் படைகள், காக்காத்திய அரசை கைப்பற்றி, கப்பம் வசூலித்தான் பின் அலாவுதீன் கில்ஜி படை மாலிக்காபூர் தலைமையில் தேவகிரி யாதவர்களை வென்று பின்னர் வாராங்கல் காக்காத்தியரை வென்று பின்னர் துவாரசமுத்திரத்தின் ஹெய்சாலர்களை வென்று பின்னர் மதுரை பாண்டியர்களை சூழ்ச்சியில் வென்று கொள்ளையடித்துச் சென்ற வரலாறு உண்டு. அதன் பின்னர் முசுனூரி நாயக்கர்கள்

பொது ஆண்டு 1326 முதல் ஐம்பது ஆண்டுகள் ஆண்டனர் தெலுங்கானாவின் முசுனூரி நாயக்கர்கள், காகதீயர்களை வெற்றி கொண்டு, தில்லி சுல்தானகத்தின் பிடியிலிருந்து வாரங்கல்லை மீட்டனர். முசினூரி நாயக்க வம்சத்தின் காப்பையா நாயக்கர் (ஆட்சிக் காலம் 1333–1368) இசுலாமியர்களை வாரங்கல்லை விட்டு 1336 ல் வெளியேற்றினர். காப்பபைய நாயக்கர் தெலங்கானாவை 1368 வரை ஆட்சி செய்தார். அதன் பின்னர்

ரெட்டிப் பேரரசு, பொது ஆண்டு 1325 முதல் 1448 வரை தற்கால ஆந்திரப் பிரதேசத்தை ஆண்டனர். காக்கத்தியப் பேரரசில், ரெட்டி இன மக்கள் படைத் தலைவரகளாகவும், குறுநில மன்னர்களாகவும் இருந்தனர். 1323 ல் காக்காத்தியர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் புரோலய வேமா ரெட்டி என்பவர் ரெட்டிப் பேரரசை பொது ஆண்டு 1325 ல் நிறுவினார். தற்கால பிரகாசம் மாவட்டம், அத்தங்கியில் தற்காலிகமாக தலைநகரத்தை நிறுவி பின்னர் ராஜமுந்திரிக்கு மாற்றினார். ரெட்டிப் பேரரசு உச்சத்திலிருந்தபோது, வடக்கில் ஒடிசாவின் கட்டாக் முதல் தெற்கில் காஞ்சிபுரம் மற்றும் மேற்கில் ஸ்ரீசைலம் வரை விரிவு படுத்தப்பட்டது. ரெட்டிப் பேரரசர்கள் சைவம் மற்றும் வைணவப் பிரிவையும் ஆதரித்தனர்.

விஜய் நகர பேரரசின் கிருஷ்ணதேவராயரால், கஜபதி பேரரசு வெற்றி கொள்ளப்பட்ட போது, ரெட்டிப் பேரரசும் வெற்றிக் கொள்ளப்பட்டது. வரலாறு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா