நீட் தேர்வு குறித்து ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் அறிக்கையை நாளை காலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கவுள்ளனர்.
நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆய்வுக்குழு அமைத்தது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதல்ல சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்த குழு செல்லுமென சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. நீட் ஆய்வுக் குழு அமைத்ததற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் கரு.நாகராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை தமிழக அரசு நியமித்திருந்ததை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழக அரசு நியமித்துள்ள இந்த ஆய்வுக்குழு, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது,' எனக் கூறியிருந்தார். இந்த மனு இன்று ஜூலை 13 ஆம் தேதி விசாரணைக்கு வந்ததில், ‛நீட் பாதிப்புகள் குறித்து குழு அமைத்த தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதல்ல என்று தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. மேலும், நீதிபதிகள் கூறுகையில், ‛பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்தக் குழுவை அமைத்துள்ளது. பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க முடியும். மாநில அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. மக்கள் கருத்து கேட்பு தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது,' என கருத்து தெரிவித்தனர். எதிர்தரப்பு வாதத்தில், ‛மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி, நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும்,' என்று வாதிடப்பட்டது. இதனை குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள், ‛நீட் பாதிப்பு சம்பந்தமாக தமிழக அரசு மக்களிடம் கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்?' என கேள்வியெழுப்பியுள்ளது. மேலும், ‛நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய தமிழக அரசு குழு அமைத்தது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக இல்லை, மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகவும் குழு இல்லை. அதேநேரத்தில், குழுவின் நியமனம் வீண் செலவு எனக் கூறமுடியாது. நீட் தேர்வில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பள்ளி பாடத்திட்டங்களின் தரத்தை உயர்த்தலாம். மாணவர் சேர்க்கை நடைமுறையை தடுக்கும் வகையில் மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை. குழுவுக்கு ஆதாரம் கிடைத்தால் அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடைமுறையை மாற்றியமைக்க கோரலாம்.' என்று குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி அமர்வு, கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் நீட் தேர்வு தாக்கத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் 8 பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது. இக்குழுவுக்கு எதிராக சென்னை ஐகேர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மாநில அரசின் அதிகார வரம்பு மீறி இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முரணானது என்று மத்திய அரசு வாதிட்டது. இதை தமிழக அரசு மறுத்தது. நீட் தேர்வு மாணவர்களிடம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை ஆராயவே குழு அமைக்கப்பட்டது. இதில் எந்த விதிமீறலும் இல்லை என்று விளக்கம் அளித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்றம் நீட் தாக்கத்தை ஆராய தமிழக அரசு அமைத்த குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முரணாகவோ, மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராகவோ குழு அமைக்கப்படவில்லை என நீதிபதிகள் கூறினர். கருத்து கேட்பு தொடர்பான அரசின் கொள்கை முடிவில் கோர்ட் தலையிட முடியாது நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு, நாளை (ஜூலை 14) தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த ஆய்வு செய்யத் தமிழக அரசு நியமித்திருந்த குழு நீட் தேர்வு பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாமென அறிவித்திருந்ததன்படி, சுமார் 89,342 பேர் நீட் தேர்வுக்க ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்துகளைப் பரிசீலனை செய்த ஆய்வுக்குழு, பல கட்ட ஆலோசனைகளை நடத்தியது. இந்நிலையில், ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் தங்களின் அறிக்கையை நாளை காலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கவுள்ளனர்.
கருத்துகள்