பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞான அறிவை மேம்படுத்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு

பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞான அறிவை மேம்படுத்தத் தனித்துவமான வாய்ப்பு, தேசிய அளவில் தன்னார்வ அறிவியல் அமைப்பு (டிஒய்ஏயூ) ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான தனிப்பட்ட மாணவர்கள் இதில் பதிவு செய்யலாம்.பள்ளி மாணவர்களுக்கான இத் தன்னார்வ அறிவியல் அமைப்பு, நாடு முழுவதும் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், அறிவியல் ஆராய்ச்சியாளர்களுடன் மாணவர்கள் நேரடியாகக் கலந்துரையாட ஒரு வாய்ப்பைத் தருகிறது.

மேலும் தேசிய அளவிலான வினாடி வினாக்களில் சிறப்பாக செயல்படும் மாணவர்கள், ஆண்டுதோறும் நடக்கும் தொலைநோக்கி தயாரிக்கும் பயிற்சிப் பட்டறைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதில் மாணவர்கள் கற்கவும் தங்கள் தொலைநோக்கியைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இது மாணவர்களின் அன்றாட அறிவியல் அறிவை மேம்படுத்தும்.

அத்துடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆர்வமும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாடும் ஏற்படும் வகையில் பல்வேறு விஞ்ஞானிகளின் படைப்புகள் கொண்ட மாதாந்திர செய்தி மடலானது ஒவ்வொரு மாணவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு மாதத்தின் 3 ஆவது ஞாயிற்றுக் கிழமையன்று நேரடி இணைய வழிக் கலந்துரையாடல் காலை 11 மணிக்கு நடைபெறும்.

பிராந்திய மொழிகளில் அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்துவது, மாணவர்கள் மத்தியில் அறிவியல் சிந்தனையை வளர்ப்பது, ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை வளர்ப்பது, மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவமளிப்பது இதன் நோக்கமாகும்.

பதிவு செய்ய விருப்புபவர்கள் www.dyau.co.in எனும் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

பதிவுக்கு கடைசித் தேதி: ஜூலை மாதம் 18 ஆம் தேதி

கூடுதல் தகவல்களைப் பெற: 8778201926 தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா