அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்த தொலைதுார சட்டப் படிப்பை நடத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்த தொலைதுார சட்டப் படிப்பை, பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகரிக்கவில்லையென, சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொலைதுாரக் கல்வி வாயிலாக சட்டப்படிப்புகளை நடத்துவதாகவும், அதற்கான விண்ணப்பங்களை வரவேற்றும், அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவிப்புவெளியிட்டதை எதிர்த்து, திருச்செந்துார் வழக்குறைஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டப் படிப்புகளை நடத்த இடைக்காலத் தடை விதித்தது. தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தபோது

அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''இவ்வழக்கில் யு.ஜி.சி., பதில் மனு தாக்கல் செய்யவில்லை,'' என்றார். யு.ஜி.சி., சார்பில் ஆஜரான வழகுறைஞர் ரபுமனோகர், ''பதில் மனு தயாராகி விட்டது; அடுத்த வாரத்தில் தாக்கல் செய்கிறோம் என்றும் மேலும், அண்ணாமலை பல்கலை அறிவித்த சட்டப் படிப்புகளை, யு.ஜி.சி., அங்கீகரிக்கவில்லை,'' என்றார்.

பார் கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்குறைஞர், 'சட்டக்கல்விக்கு பார் கவுன்சில் அனுமதி பெற வேண்டும்.  அனுமதியின்றி நடத்த முடியாதென்றார்.  தொலைதுார கல்வியில் சட்டப் படிப்பு நடத்த, அண்ணாமலை பல்கலைக்கழகததுக்கு உரிமையில்லை என்றதையடுத்து, விசாரணையை அடுத்த வாரத்துக்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது. அதற்குள், யு.ஜி.சி., பதில் மனு தாக்கல் செய்யும் என்றும் நம்பிக்கையும் தெரிவித்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா