மதுரை நாடாளுமன்ற உறுப்பினருக்கு எய்ம்ஸ் குறித்து மத்திய அமைச்சரின் பதில்.

மதுரை எய்ம்ஸ் மத்திய அமைச்சரின் பதில்.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மூன்று ஆண்டுகளாக தாமதம் ஆவது பற்றி பிப்ரவரி 11, 2021 அ‌ன்று நாடாளுமன்றத்தில் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை,  விதி எண் 377 ன் கீழ் மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் எழுப்பி இருந்தார். அதற்கு ஜூன் 23, 2021 தேதியிட்டு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அசுவினி குமார் சௌபே  பதில் (கடித எண் D. O. No. H-11016/05/2021- PMSSY - III) அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில்.

டிசம்பர் 2018 ல் அன்று மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ 1264 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் அமைக்கப்பட ஒன்றிய அமைச்சரவை முடிவெடுத்தது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) கடன் வாயிலாக திட்டத்தை அமலாக்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான முன் ஆயத்த ஆய்வு ஒன்று ஜெய்கா (JICA) குழுவால் பிப்ரவரி 2020 ல் நடத்தப்பட்டது. மதுரைக்கும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் மற்ற எய்ம்ஸ் மருத்துவ சேவைகளையும் நேரில் பார்வை இட்டார்கள். 

150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய் பிரிவு ஒன்றையும் மற்றும் சில சேவைகளையும் திட்டத்தில் இணைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. 

புதிய திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ 1977.80 கோடிகள் எனவும் அதில் ரூ 1627.70 கோடிகள் 'ஜெய்கா' கடன் வாயிலாகவும் மீதம் பட்ஜெட் ஒதுக்கீடு வாயிலாகவும் திட்டச் செலவினம் ஈடு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த திருத்திய மதிப்பீடு அடிப்படையில் 26.03.2021 அன்று 'ஜெய்கா ' உடன் கடன் உடன்பாடு கையெழுத்தானது. 

இதற்கிடையில் முதலீட்டுக்கு முந்தைய பணிகள் எய்ம்ஸ் அமைவிடத்தில் 90% முடிக்கப்பட்டுள்ளது. அதில் எல்லைச் சுவரும் அடக்கம். 

திட்டக் அமலாக்க குழுவிற்கான பதவிகள் உருவாக்கப்பட்டு மதுரை எய்ம்ஸ் க்கு நிர்வாக இயக்குநர், துணை இயக்குநர் ( நிர்வாகம்), கண்காணிப்பு பொறியாளர், நிர்வாக அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திட்ட நிர்வாக ஆலோசகரை (Project Management Consultant) நியமனம் செய்வதற்கான உலகளாவிய டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற இயன்ற எல்லா முயற்சிகளையும் அமைச்சகம் மேற்கொள்ளும் என்ற உறுதி மொழியும் அக் கடிதத்தின் மூலம் தகவல்.             மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், சார்பில் முன்பு அளித்த தகவலின் படி ''மதுரை எய்ம்ஸ் கடன் ஒப்பந்தம் 26 மார்ச் 2021 ல் இந்திய- ஜப்பான் அரசுகளுக்கிடையே கையெழுத்தானது. கடன் தொகை 22.788 பில்லியன் ஜப்பானிஷ் யென் என்றும் தெரிவிக்கப்பட்டது இந்திய மதிப்பில் ரூ. 1,536.91 கோடி.

தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த திட்ட மதிப்பீடு ரூ. 1,264 கோடி. திட்ட மதிப்பீடு உயரும் வாய்ப்பு உள்ளதால் அரசின் பரிசீலனையில் உள்ள  ``மருத்துவமனை கட்டுவதற்கு டெண்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா