எரிசக்தி அமைச்சகம் மத்திய கிழக்கு மற்றும் இதர பகுதிகளில் சாம்பலை விற்பனை செய்ய விரும்பும் நிறுவனங்களின் விண்ணப்பங்களை வரவேற்கிறது தேசிய அனல் மின் கழகம்
மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் தேசிய அனல் மின் கழகம், சாம்பலை (ஃப்ளை ஆஷ்) 100% முறையாக பயன்படுத்தும் நோக்கத்தோடு, மத்திய கிழக்கு மற்றும் இதர பகுதிகளில் குறிப்பிட்ட துறைமுகங்களில் இருந்து சாம்பலை விற்பனை செய்ய விரும்பும் நிறுவனங்களின் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கிய இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள், ஜூலை 25-ஆம் தேதி நிறைவடையும்.
நிலையான சாம்பல் பயன்பாடு என்பது, தேசிய அனல்மின் கழகத்தின் மிக முக்கிய விஷயமாக விளங்குவதுடன், அதனை முழுவதும் பயன்படுத்துவதற்குத் தேவையான நிலையான தீர்வுகளையும் அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சாம்பல் என்பது நிலக்கரியுடன் மின் உற்பத்தியின் ஓர் உபப் பொருளாகும். தேசிய அனல்மின் கழக நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் சாம்பல், சிமெண்ட், கற்காரை, கற்காரை சார்ந்த பொருட்கள், செல்லுலார் கற்காரை பொருட்கள் மற்றும் செங்கற்கள்/ பாளங்கள்/ ஓடுகளின் தயாரிப்பில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகிறது.
கட்டுமானப் பணிகளில் சாம்பல் செங்கற்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, அனல்மின் ஆலைகளை அடிப்படையாகக் கொண்ட நிலக்கரி ஆலைகளில் சாம்பல் செங்கல் உற்பத்திப் பிரிவை தேசிய அனல் மின் கழகம் உருவாக்கியுள்ளது. இந்த செங்கற்கள் ஆலைகளிலும் நகரிய கட்டுமானப் பணிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. தேசிய அனல்மின் கழகத்தின் சாம்பல் செங்கல் ஆலைகளில், ஆண்டுதோறும் சராசரியாக 60 மில்லியன் சாம்பல் செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கருத்துகள்