தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நூற்றாண்டு விழா, கலைஞர் மு.கருணாநிதி படத்திறப்பு - குடியரசுத் தலைவருக்கு முதல்வர் அழைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நூற்றாண்டு விழா, கலைஞர் மு.கருணாநிதி படத்திறப்பு - குடியரசுத் தலைவருக்கு முதல்வர் அழைப்பு :
தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின், இரண்டாம் முறையாக  மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.  குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார். 30 நிமிடங்கள் நடந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான டி.ஆர்.பாலு உடன் இருந்தார். குடியரசுத் தலைவரை சந்தித்த தமிழக முதல்வர். மனோகர் தேவதாஸ் எழுதி, வரைந்த நூலான The Multiple Facets of My Madurai எனும் நூலினை அளித்துள்ளதை விட மகிழ்வான செய்தி என்ன இருக்க முடியும்?

தான் வெளிச்சத்தில் பார்த்து ரசித்ததை பார்வை இழந்து இருட்டில் வரைந்து கொண்டிருப்பவர் மனோ.

வாழ்வும், காலமும் அவரிடமிருந்து எதைப் பறித்துக்கொண்தோ அதனை தனது ஆற்றலின் மூலம் வென்றெடுத்த மகத்தான கலைஞன் மனோகர் தேவதாஸ்.

மாமதுரையின் அழகை மனோவின் ஓவியத்தின் வழியே காண்பது பேரனுபவம். இந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் தெரிவித்ததாவது:

மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களை குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தேன்.


சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து நூறாண்டு நிறைவுபெற்றதற்கான விழாவுக்குத் தலைமைதாங்கி, முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்தைத் திறந்துவைக்க அழைப்புவிடுத்தேன்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்கு குடியரசுத் தலைவர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் செயல்பட்ட சட்டப்பேரவை, 1921 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியில் துவக்கி வைக்கப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில், சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது. அவ் விழாவுக்குத் தலைமை தாங்க குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

அந்த விழாவில், முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க வேண்டுமென்றும் கூறியுள்ளோம்.

அத்துடன், மதுரையில் கலைஞர் பெயரில் அமையவுள்ள மிகப் பெரிய நூலகம், சென்னை கிண்டியில் அமையவுள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனை, இந்தியா சுதந்திரம் பெற்று 75 வது ஆண்டைக் குறிக்கும் வகையில் சென்னை கடற்கரைச் சாலையில் அமையவிருக்கும் நினைவுத்தூண் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டவும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்துள்ளார்கள். அதற்கான தேதியை இரண்டொரு நாளில் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு

நீட் தேர்வு, 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கைகள் பற்றி பேசவில்லை. முதல்வராக பொறுப்பேற்றதுமே 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. சட்டப்படி அதை நீதிமன்றத்தின் மூலமாகத்தான் நாட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. எனவே, தொடர்ந்து திமுக குரல் கொடுக்கும்.

கரோனா மூன்றாவது அலை வரக்கூடாது என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். ஒரு வேளை வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்பதற்கான திட்டங்களுடன் தமிழக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளை இப்போதைய சூழ்நிலையில் திறக்க முடியாத நிலை உள்ளது.

மேகேதாட்டு விவகாரம் குறித்து ஏற்கனவே பிரதமரைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளேன். தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி குழு டெல்லியில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரைச் சந்தித்து விவாதித்துள்ளது. மத்திய அமைச்சரும் நிச்சயமாக மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி தரமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரள அரசுகள் எதிர்த்தாலும் கண்டிப்பாக அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக கூறினாலும்.

எங்களுக்குப் பிரதமர் நம்பிக்கையுடன் உறுதி அளித்துள்ளார். மத்திய அமைச்சரும் உறுதி அளித்துள்ளார். அந்த நம்பிக்கையுடன் உள்ளோம். இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால், சட்டப்படி சந்திப்போம்.

மேகேதாட்டு அணை குறித்த ஆலோசனைக்கு கர்நாடக அரசு

பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி என்னென்ன விவகாரங்கள் தொடர்பாக பேச வேண்டும் என்று விவாதித்துள்ளோம். அதுகுறித்து நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை குழு தலைவர்கள் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் சொல்லி அந்த அடிப்படையில் பேச இருக்கிறோமென அவர் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்