மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் திட்டங்கள் பற்றி அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் ஆய்வு

கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் திட்டங்கள் பற்றி அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் ஆய்வு


மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், அமைச்சகத்தின் சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களின் நிலை குறித்து இன்று ஆய்வு செய்தார். பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் அமைச்சரிடம் எடுத்துரைத்தார்‌. அமைச்சகத்தின் அனைத்து மூத்த அதிகாரிகளுடன் அமைச்சர் தமது அறையில் கலந்துரையாடினார்.

தமக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று திரு சர்பானந்தா கூறினார். தமக்கு முன்னர் அமைச்சகத்தில் பணி புரிந்தோர் மேற்கொண்ட சிறப்பான பணிகளை முன்னெடுத்துச் செல்வதுடன், அனைத்து இலக்குகளையும் தாமதமின்றி, உரிய நேரத்தில் நிறைவேற்ற புதிய குழுவினருடன் இணைந்து தீவிரமாக பணியாற்றுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன், கூடுதல் செயலாளர் திரு சஞ்சய் பந்தோபாத்யாயா, துறைமுகங்கள் இணைச் செயலாளர் திரு விக்ரம் சிங், நிர்வாக இணைச் செயலாளர் திரு லூகாஸ் எல் கம்சுவான் ஆகியோர் போக்குவரத்து மாளிகைக்கு வந்த அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா