முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

INO-PtRC ஆய்வகம் மதிகெட்டான் சோலை முதல் பெரியார் வரை திட்ட இயக்குநர் விளக்கம்

 ”INO-PtRC ஆய்வகம் மதிகெட்டான் சோலை முதல் பெரியார் வரையிலான புலிகளின் வழித்தடத்திற்கு இடையூறு விளைவிக்காது” - பொட்டிபுரம் ஆராய்ச்சி மையத்தின் திட்ட இயக்குநர் விளக்கம்









மும்பை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் பொட்டிபுரம் ஆராய்ச்சி மைய திட்ட இயக்குநர் பேராசிரியர் கோபிந்தா மஜூம்தார்  வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

”PtRC ஆய்வகத்தின் கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட 31.45 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலமானது ”தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினால் முன்மொழியப்பட்ட மதிகெட்டான் முதல் பெரியார் வரையிலான புலிகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளது” என்பது போன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஒரு சில ஊடகங்கள் வெளியிடுகன்றன.  இந்தத் தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வண்ணமும் மற்றும் இது சம்பந்தப்பட்ட உண்மை விவரங்கள் தரவும் இந்த செய்தி வெளியீட்டின் மூலம் விளக்க விரும்புகின்றோம்.



இந்த திட்டத்திற்கான 26.825 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலமானது, தரைத்தளம் சார்ந்த கட்டுமானத்திற்கும் மற்றும் 4.62 ஹெக்டேர் பரப்பளவு மலையினுள் சுரங்கப்பாதை மற்றும் ஆய்வகத்திற்கான குகை அமைக்கவும், ஒதுக்கப்பட்டதாகும்.

தரைத்தள கட்டுமானத்திற்கு ஒதுக்கப்பட்ட 26.825 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியானது பொது வருவாய் நிலமாகும்.  அது மட்டுமல்ல, இந்தப் பகுதியானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லைக்கு வெளியே உள்ளது என்பது மிகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்; ஆகையால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கோ அல்லது புலிகளின் வழித்தடத்திற்கோ எந்த ஒரு இடையூறும் விளையாது.

மலையின் உள்ளே அமைக்கவிருக்கும் கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட 4.62 ஹெக்டேரில் கிடைமட்டமான சுரங்கப்பாதை தொடர்வண்டி செல்ல வடிவமைக்கப்படும் சுரங்கப்பாதை போன்றது.  சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் பொது வருவாய் நிலத்தில் தொடங்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையை அடையும் போது மேற்பரப்பில் இருந்து பல மீட்டர் ஆழத்தினுள் கடந்து விடும்.  புலிகளின் வழித்தடமானது முழுவதுமாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியினுள் அமைந்துள்ளது.  எந்த ஒரு கட்டுமானமும் காட்டுப் பகுதியில் நடைபெறாத காரணத்தினாலும் சுரங்கப்பாதை அமைக்கும் பகுதி மேற்பரப்பில் இருந்து பல மீட்டர் (10 முதல் 1000 மீட்டர் வரை)  மலைப் பாறையின் ஆழத்தில் சென்று விடுவதாலும், வனப்பகுதியில் உள்ள புலிகளுக்கோ மற்றும் எந்த வன உயிர்களின் நடமாட்டத்திற்கும் தடை ஏற்படாது.  சுரங்கப்பாதை மற்றும் குகைக்கான 4.62 ஹெக்டேரில் மூன்று ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி வரையறுக்கப்பட்ட புலிகளின் வழித்தடத்திற்குள் பல நூறு மீட்டர் மலையின் அடியில்  (உட்புறம்)  உள்ளது.  புலிகளின் வழித்தடம் மேற்பரப்பில் உள்ளதால் மலையினுள் அமைக்கப்படும் சுரங்கப்பாதை மற்றும் குகையானது எந்த ஒரு வகையிலும் மலையின் மேல் செல்லும் புலிகளின் வழித்தடத்தைப் பாதிக்காது என்பதை முன்னிலைப்படுத்துகிறோம்.

நாங்கள் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால் PtRC ஆராய்ச்சி மையம் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியான அறிவியல் திட்டமாகும்.  அது சுற்றுச்சூழலுக்கோ அல்லது அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கோ எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாது.  மேலும், இந்த ஆய்வகத்தில் எந்த ஒரு அபாயகரமான கதிர்வீச்சுப் பொருளோ அல்லது விஷத்தன்மை வாய்ந்த உமிழ்வோ இல்லவே இல்லை.  இந்த அறிவியல் ஆய்வகம் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளைச் சார்ந்த மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதனை படைக்கவும், நம் நாட்டின் அடிப்படைத் தேவையான அறிவியல் கண்ணோட்டம் வளர்க்கவும் வித்தாக அமையும்.”                       பின்குறிப்பு : மதிகெட்டான் சோலை என்பது பூங்காவில் நுழையும் போது ஏற்பட்ட வழிக் குழப்பத்தினால் இப்பெயர் வந்தது. பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பேணவும், வனவிலங்குகளைக் காக்கவும் இது தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சிக் காலத்தில் 1897 ஆம் ஆண்டில் இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி இப்பூங்காவின் சுற்றுச் சூழல், தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் பறவைகளைப் பேண வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.மர்மங்கள் நிறைந்த வனம் மதிகெட்டான் சோலை

ஒரு அரசாங்கமே இந்தக் கம்பி வேலியைத் தாண்டிச் சென்று 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று எச்சரித்து ஒரு அறிவிப்புப் பலகையே வைத்துள்ளார்கள் என்றால் அந்த இடத்தைச் பற்றி நீங்களே யூகியுங்கள்.

இந்த இடம்  கொடைக்கானல் உள்ள பேரிஜம் பகுதிக்கு அருகில் 12 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள காடு தான் மதிகெட்டான் சோலை. காட்டிற்குள் சென்ற யாருமே இதுவரை திரும்பியதில்லை. இதற்கு பல காரணங்களைக் கூறுகிறார்கள்.

அதில் ஒன்று இந்த மூலிகை காட்டில் திகைப்பூண்டு என்கிற ஒரு வகை  மூலிகையை மிதித்து விட்டால் அதை மிதித்தவரின் மதி (அறிவு) மழுங்கடித்து அவர் அந்த காட்டை விட்டு வெளியேற வழி தெரியாமல் அந்த காட்டையே உயிர் போகும் வரை சுற்றிக்கொண்டிருப்பார்கள் என்று நம்பும்படி கூறப்படுகிறது.

தெரியாமல் தப்பித்தவறி காட்டுக்குள் நுழைந்தவர்கள் மதி கெட்டு வந்த வழி தெரியாமல் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் அலைந்து திரிகின்றனர்.அப்படியே வெளியே வந்தாலும் கிறுகிறுப்பு தீராது.

சிலபேர் இந்த மதிகெட்டான் சோலையில்ஒருவிதமான பூ நாகப் பூக்கள் இருப்பதாகவும் சொல்கின்றனர். 

அந்தப் பூக்கள் பூத்து அதன் பின்னர் வாடி கீழே உதிர்ந்து விடும். அப்படி விழும் மலர்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் விடும். 

அப்போது ஒருவித வாசம் பரவும். அந்த வாசம் வருடம் முழுவதும் வீசிக் கொண்டே இருக்கும். இந்த வாசனையை கொஞ்ச நேரம் முகர்ந்தாலே போதை போன்ற மயக்கம் ஏற்படும் என்றும். 

இந்த மயக்கம் மனிதர்களை நிலை குலைத்து தூக்கிப் போட்டு பந்தாடும் பின்னர் எங்கிருக்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்? எனத் தீர்மானிக்க முடியாதாம். இத்தனைக்கும் காரணம் பூநாகப் பூ என்று கூறப்பட்டாலும் அப்படியொரு பூவே கிடையாது என்கின்றனர் தாவரவியல் ஆய்வாளர்கள். 

அதனால் மதி கெட்டான் சோலையில் மதிகெட்டுப் போவதற்கு என்ன காரணம் என்ற மர்மம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. எது எப்படியோ இந்த மதி கெட்டான் சோலை இன்று வரை ஒரு விடை தெரியாத மர்ம தேசம் தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...