முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை ஆதீனகர்த்தார் 293 ஆவது இளவரசு நியமிக்கப்படுகிறார்

மதுரை ஆதீனகர்த்தார் 293 ஆவது


இளவரசு நியமிக்கப்படுகிறார். 




மதுரைஆதீன மடத்தின் இளவரசுக்கு ஆச்சார்ய அபிசேகம் தருமாபுரம் ஆதீனம்

 27 வது குருமணிகள் ஹரிஹர தேசிய ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்று சிவாகமப்பூர்வமாக கிரியாவதி ஞானாவதி முதலியவைகள் செய்து 293 வது சன்னிதானமாக எழுந்தருளப்பன்னும்காட்சிகள்.தான் நீங்கள் காணும் புகைப்படங்கள். இதற்கு மத்தியில் 

நில ஆக்கிரமிப்பால் தகராறு. வேறு மதுரை ஆதீனம் அருணகிரி நாதரின் உடலை நல்லடக்கம் செய்வதில் சிக்கல். உடல் நல்லடக்கம் செய்யும் இடத்தை மாற்றக் கோரி குத்தகைதாரர்கள் கூறியதால் வாக்குவாதம் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர்.



 மதுரை ஞானசம்பந்தர் மடத்தின் ஆதீனம்  77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக் குறைவால் நான்கு நாட்களுக்கு முன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.


தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரது பூதஉடல் இன்று தல்லடக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில்

நான்தான் மதுரை 293 ஆவது ஆதீனம்.. மறைந்த அருணகிரிநாதர் கைலாசாவின் மகா சன்னிதானம்.. கைலாச அதிபர் நித்தியானந்தா கடிதம்






அருணகிரி நாதரின் உடல்  மறைந்த மதுரை ஆதினத்தின் 292வது ஆதினமான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதரின் உடலானது மதுரை முனிச்சாலை பகுதியில் அமைந்துள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான அந்த இடத்தை குத்தகைக்கு பெற்ற குபேந்திரன்  ஆதீனத்தின் உடலை மாற்று இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என கூறியதால் ஆதீனம் தரப்பினருக்கும் - குத்தகைதாரர் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பாதுகாப்புக் குவி






ப்பு  இதனையடுத்து கோயமுத்தூர் காமாட்சிபுர ஆதீனம் , தருமபுர ஆதீன தம்புரான், இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா ஆகியோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தற்போது மதுரை ஆதீனத்தை நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆதீனம் அடக்கம் செய்யப்படும் இடத்தில் காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

குத்தகைதாரர் எதிர்ப்பையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை காமாட்சிபுரி ஆதீனம் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் ஆதீனம் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு குத்தகைதாரர் எதிர்ப்பு தெரிவித்தார். எங்களது எதிர்ப்பை தொடர்ந்து காவல்துறை ஒத்துழைப்புடன் பணி நடைபெறுவதாகவும் , தமிழகம் முழுவதும் ஆதீனங்களின் சொத்துக்கள் இது போன்று ஆக்கிரமிக்கப்படுவதாகவும் , அரசு சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காது எனவும் தெரிவித்தார். மத நல்லிணக்க நாயகன் மதுரை ஆதீனம்




மதத் தலைவர்களின் கடமை அந்த மதத்தைப் பரப்புவதும், பாதுகாப்பதுமாகவே இருக்கும். மதுரை ஆதீனம் கூடுதலாக மத நல்லிணக்கத்திற்காகவும் உழைத்தவர்.

அரசியல் மற்றும் நித்யானந்தா விவகாரங்கள் அவரது வரலாற்றில் கரும்புள்ளியாக பதிந்திருந்தாலும் கூட, மத நல்லிணக்கத்துக்காக உழைத்ததில் தவத்திரு குன்றக்குடி  பழைய அடிகளார் தெய்வசிகாமணி தேசிகருக்கு இணையான ஒருவர் இவர் அன்றி வேறு ஒருவர் தமிழகத்தில் இருந்திருக்க வாய்ப்பு குறைவு எனச் சொல்லலாம்.

இஸ்லாமிய மேடைகளிலும், கிருஸ்தவ மேடைகளிலும் ஏறிய சைவ சித்தாந்தமும், திருக்குரானும், திருஞான சம்பந்தரும் நபிகள் நாயகமும், ஞான சம்பந்தரும் ஏசுநாதரும் என்ற ஒப்புவமைகளுடன் அருளுரை நிகழ்த்தியவர் மதுரை ஆதீனம்.

இதுகுறித்து ஒரு செய்தியாளனாக அவரிடம் நாம் கேள்வி எழுப்பியபோது, "உலகில் உள்ள எல்லா மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இறைவன் ஒருவனே. எனவே, எல்லோரும் சகோதர சகோதரிகள் என்றே யாம் பார்க்கிறோம்" என்று பதிலளித்தார் மதுரை ஆதீனம்.

இது ஏதோ ஒரு கால கட்டத்தோடு நின்றுவிட்ட செயல்பாடல்ல. இந்த கரோனா காலத்தில்கூட, அமெரிக்க பக்தர் ஒருவரது ஏற்பாட்டில் இணைய வழியில் மும்மத பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசினார் மதுரை ஆதீனம். 

மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கியும் மத நல்லிணக்கத்துக்காப் பணியாற்றியவர் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள். 1981, 82 ஆம் ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில்  மதக்கலவரம் மூண்டபோது, செய்தி கிடைத்த அடுத்த நிமிடமே அங்கு புறப்பட்டுப் போனவர் ஆதீனம். தொடர்ந்து அங்கே நான்கு மாத காலம் தங்கியிருந்து கூட்டங்கள் வாயிலாகவும், தனிப்பட்ட முறையிலும் மக்களைச் சந்தித்து அமைதியை ஏற்படுத்தும் வேலையைச் செய்தார் ஆதீனம்.

அந்த நேரத்தில் சிலர் தங்கள் மதத்தினரை கொம்பு சீவிவிட்டதைக் கண்டித்ததுடன், அவர்களை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட இருமத மக்களையும் கோட்டாறு மருத்துவமனையிலும், அந்தந்த ஊர்களிலும் சந்தித்து உடையும், உணவும் வழங்கி ஆசீர்வதித்தார்.

1981 ஆம் ஆண்டு தென்காசி அருகே மீனாட்சிபுரம் மதமாற்றச் சம்பவம், மதக்கலவரமாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டபோது உடனடியாக அந்தப் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றார் ஆதீனம். மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, சைவ சமய பேருண்மைகளையும், இஸ்லாம் மார்க்கத் தத்துவத்தையும் எடுத்துக்கூறி அவரவர் மதங்கள் அவரவருக்குப் பெரியது என்றும், லகும்தீனுக்கும் வலியதீன் என்ற வரிகளைச் சுட்டிக்காட்டியும் அமைதியை ஏற்படுத்தினார்.

மீனாட்சிபுரத்தில் பட்டியலின மக்களுடன் சமபந்தி போஜனத்தில் கலந்துகொண்டு உணவருந்திய ஆதீனத்தின் அருகில் அமர்ந்து உணவு உண்டவர், பிற்காலத்தில் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள்.

இசையில் ஆர்வம் கொண்ட மதுரை ஆதீனம் நாகூர் ஹனிபாவின் முன்வரிசை ரசிகர். அவரது பாடல்கள் பலவற்றை தன்னுடைய குரலில் பக்தர்கள் முன்னிலையில் பாடிக்காட்டியவர்.

அதில் அல்லாவைப் பற்றிய பாடல்களும் உண்டு. உடல் நலம் குன்றியிருந்த ஹனிபாவை வீட்டிற்கே சென்று பார்த்தவர். அதேபோல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை இசையில் ஒரு மத நல்லிணக்கப் பாடலையும் ஆதீனம் பாடியிருக்கிறார்.

மதுரை ஆதீனத்தில் உள்ள செப்பேடு, ஓலைச்சுவடிகள் மற்றும் ஆங்கிலேயர் காலத்து ஆவணங்களை எல்லாம் தொகுத்து மதுரை ஆதீன வரலாற்றை 2007 ஆம் ஆண்டில் புத்தகமாக வெளியிட்டார் அருணகிரிநாதர். அந்த நூலில் கூட, "திப்பு சுல்தான் மதுரை ஆதீன மடத்துக்கு நேரில் வந்து அன்றைய ஆதீனம் (282) பாம்பணிநாத ஞானசம்பந்த தேசிகரிடம் உரையாடி, பூஜைக்குரிய வெள்ளித் தாம்பாளங்கள், தோல் முரசு, வெள்ளித் திருச்சின்னம், புனுகு, ஜவ்வாது, உயர்ந்த வகை அரபு நாட்டு அக்தர் வகைகள், வெள்ளி வாள் ஆகியவற்றுடன், ஆண் யானை ஒன்றையும் பரிசளித்தார்" என்ற செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

அதேபோல, "ஔரங்கசீப்பின் படைத்தளபதியும், மதுரை மீது படையெடுத்து வந்தவருமான மாலிக்காபூர் கூட அன்றைய ஆதீனம் (237) வேலாயுத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு இரண்டு குதிரைகளைப் அன்புப் பரிசாக வழங்கிய" செய்தியையும் பதிவு செய்துள்ளார். இதேபோல ராபர்ட் டி நோபிலி, சீகன் பால்கு அய்யர், வீரமாமுனிவர், டாக்டர் ஜி.யு.போப் போன்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் மதுரை ஆதீனத்துக்கு வந்த செய்தியையும், அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணியையும் விருப்பு வெறுப்பின்றி பதிவு செய்துள்ளார் அருணகிரிநாதர்.

மதுரை ஆதீனம் என்ற அவரது ஆசனத்தை இன்னொருவர் நிரப்பலாம். ஆனால், மதநல்லிணக்கத்துக்கு அவர் ஆற்றிய பணிகளை தனியொருவரால் செய்துவிட முடியுமா என்பது சந்தேகமே.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த தனியார் டிவி செய்தியாளரும், இஸ்லாமிய இளைஞருமான சல்மான் தன்னுடைய திருமணத்துக்கு ஆதீனத்துக்கு அழைப்பிதழ் கொடுத்தார். அந்த நிகழ்வுக்குச் சென்று மணமக்களை வாழ்த்திப் பேசியதுடன், ஆசியும் வழங்கினார் அருணகிரிநாதர்.   உதியஞ்சேரலாதன் மகன்கள் இருவர்.

1. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.      2. பல்யானைச் செல்கெழு குட்டுவன். மன்னன் இறந்த போது மூத்தவர், மூத்தவர் இறந்த பின்னர் தம்பி,          தம்பி இறந்த பின் மூத்தவர் மகன் என்று தான் செயல்பட்டார்கள்.தந்தை-மகன்-      அவர் மகன் என்பது வடக்கே கூட இல்லை என்பதை இராமாயணம் மகாபாரதம் சொல்கிறது.  காரணம் இவை  மடாலயம் பீடம் இது ஆன்மிகம் கலந்த வாழ்வியல் நூல்களாக இருக்கலாம்

ஔரங்கசீப் தான் செய்த சூழ்ச்சியால் தான் போனதும் முகமதிய அரசே வீழ்ந்து நொறுங்கியது.

இதில் நம் கவனத்தை ஈர்க்கும் தன்மையை கொண்ட பெயர் பல்யானைச் செல்கெழு குட்டுவன

ஆஹா என்ன அற்புதமான நிகழ்வு  பிடதி ஆஸ்ரமத்தில் இருந்து மதுரை ஆதீனமாக ஆசை கொண்ட நித்யானந்தா

"அடி அடி என அடித்தார்கள்".

அதிகாலை வேளையில் நித்யானந்தா குரல் ரீங்காரம் இது

 யாராலும் இத்தகைய பெருந்தன்மையோடு தான் 30 வருடமாக ஆராய்ச்சி செய்து பல அறிவர்களோடு கற்ற வித்தையை பல ஏகலைவர்களுக்கு இன்று தாய்ப்பாலாக புகட்டிய ஆதீனம். பால் அருந்திய மழலை உறக்கத்தில் உதடு குவித்து உறிஞ்சும் சுகமாக என்றும் மனதில் இருக்கும்.

இப்போது முதல் வரிகளைப் படியுங்கள். "அடி அடி என அடித்தார்கள்" 

அ என்ற ஒலி அனைத்து மொழிகளிலும் முதல் எழுத்தின் ஒலியாக இருக்கும் காரணம்

ஒரு ஞானக்கிறுக்கனோடு பயணிப்பது இயல்பாக எனக்கு அதிகம் கவனத்தை குவிக்க உதவும். ஆனால் எழுத்து  ஞானத்தை தாயாக ஊட்டிய மனித உளவியல் அறிந்த ஆளுமையோடு நேரம் போனதே யாருக்கும் தெரியாமல் வயிறு நிறைந்தாலும் இடது மார்பு சுனைக்க  மாற்றும்  போது.  சிணுங்கிய பிள்ளைகளாய் தொடருங்கள் என்று  மதரை ஆதீனம் முனைவர் ம.நடராஜன் நட்பு காலத்தால் பேசப்படும் உங்கள் தமிழ் ஆதீனப் பணியை உலகம் பாராட்டும் என்றனர் பங்கேற்பாளர்கள்.

காத்திருக்கும் குழந்தைகளாய்  நாங்களும். நமது வாசகர்களும் 

ஞானத்தாய்க்கு நன்றி சொல்லிட முடியுமா ?  தர்மபுரம் ஆதீனம் அறைக்கு சீல் வைப்பு. விபரம் மற்றும் பின்புலம் தனியே வரும். நித்தியானந்தா ஏன் மதுரை ஆதி இன மடத்தை கைப்பற்ற முயன்றார் என்பதற்கு காரணம் அறிந்தவர் கூறலாம்.

இப்போது கற்பனை கைலாசாவிலிருந்து வருவாரா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...