இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் தமிழக ஆளுநரை சந்தித்தார்

இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் தமிழக ஆளுநரை சந்தித்தார்


இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் திரு கே நடராஜன், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித்தை 2021 ஆகஸ்ட் 25 அன்று ஆளுநர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக  சந்தித்தார்.

இந்திய கடலோர காவல்படை குறிப்பாக தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் சமீபத்திய சாதனைகள் குறித்து இச்சந்திப்பின்போது ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டது. கடல்சார் பாதுகாப்பில் உள்ள சவால்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்தும் தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

செயல்பாட்டு உள்கட்டமைப்பு மற்றும் கடலோர பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் கடலோர காவல்படை சமீபத்தில் அடைந்த முன்னேற்றங்கள் குறித்தும் ஆளுநருக்கு விளக்கப்பட்டது.

மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு வலுவூட்டும் கடல்சார் வணிகத்திற்கு இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் மீனவர்களுக்கு கடலில் ஆபத்து ஏற்படும் போதெல்லாம் மீட்பு பணியில் ஈடுபடும் என்றும் சந்திப்பின்போது ஆளுநருக்கு உறுதியளிக்கப்பட்டது. கடலோர பாதுகாப்பு செயல்முறையை பலப்படுத்துவதில் மாநில அரசு எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டிய தலைமை இயக்குநர், வலுவான ஆதரவை அளித்து வருவதற்காக ஆளுநருக்கு நன்றி தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்