செங்கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின கொண்டாட்டங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விசிறிகள்

பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் செங்கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவிருக்கும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த விசிறிகளை டிரைஃபெட் வழங்க உள்ளது


ஆகஸ்ட் ஒரு சிறப்பான மாதம். அதுவும், நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் விடுதலையின் அம்ரித் மகோத்சவம் கொண்டாடப்படும் வேளையில் இது இன்னும் சிறப்பு மிக்கதாக ஆகிறது.

தற்சார்பு இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக, பழங்குடியினரின் வருவாய் மற்றும் வாழ்வாதாரங்களை ஆதரிப்பதற்காக டிரைஃபெட் தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. பழங்குடி கைவினைக் கலைஞர்களை அங்கீகரித்து அவர்களது வாழ்வாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் ஒரு சிறிய பங்களிப்பாக, செங்கோட்டையில் நடைபெற உள்ள பிரதமர் பங்கேற்கும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவிருக்கும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த கைகளால் செய்யப்பட்ட விசிறிகளை பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து மீண்டும் ஒரு முறை டிரைஃபெட் வழங்க உள்ளது. நான்காவது வருடமாக இவ்வாறு செய்யப்படுகிறது.

ராஜஸ்தான், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், குஜராத் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட  மாநிலங்களிலுள்ள கைவினை கலைஞர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட இந்த விசிறிகள், இயற்கை பொருட்களைக் கொண்டு செய்யப்பட்டவையாகும்.

இந்திய வீடுகளின் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்து வெப்பத்திலிருந்து நிவாரணம் அளித்த இந்த விசிறிகள் கடந்த காலத்தை நினைவுபடுத்தும்.

 இந்த டிரைப்ஸ் இந்தியா விசிறிகள், நாடு முழுவதும் உள்ள டிரைப்ஸ் இந்தியா கடைகள் மற்றும் வர்த்தக தளத்திலும் (www.tribesindia.com) கிடைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்